- Prep
- 10 min
- Cook
- 10 min
- Total
- 20 min
- Serves
- 5
- Cuisine
- Indian, TAMIL
- Course
- evening, snacks
தென்னிந்தியாவில் மிகப் பிரபலமாக இருக்கும் பல மாலை நேர சிற்றுண்டிகளில் போண்டாவிற்கு என ஒரு தனி இடம் உண்டு என்றால் அது மிகை அல்ல. இந்தியா முழுவதும் பலவிதமான போண்டா வகைகள் கிடைக்கின்றன. உதாரணமாக மைசூர் போண்டா, உளுந்து போண்டா, உருளைக்கிழங்கு போண்டா, காய்கறி போண்டா, கீரை போண்டா, மற்றும் முட்டை போண்டா என்று சொல்லிக் கொண்டே போகலாம். இதை ரெஸ்டாரன்ட்களில் மட்டுமின்றி சிறு சிறு கடைகளிலும் கூட மாலை நேரங்களில் சுட சுட பொரித்தெடுத்து உணவுப் பிரியர்களுக்கு பரிமாறுவதை தினம் தோறும் நாம் காணலாம். இதற்கு அந்த அளவிற்கு மிகவும் வரவேற்பு உண்டு.
உங்களுக்கும் ஈவினிங் டைம்ல சூடா, மொறுமொறுன்னு ஏதாவது சாப்பிட தோணுதா? அப்படின்னா நம்ம ஊர்ல கிடைக்கிற சத்தான மரவள்ளிக்கிழங்கை வச்சு ஒரு சூப்பரான ஸ்நாக்ஸ் செய்யலாம் வாங்க. அதுதான் மரவள்ளிக்கிழங்கு போண்டா. வெளியில் மொறுமொறுன்னு, உள்ளே சாஃப்டா, காரசாரமா இருக்கும் இந்த போண்டா. செய்யறதும் ரொம்ப ஈஸி. இந்த மரவள்ளிக்கிழங்கு போண்டாவை ஒரு தடவை மட்டும் செய்து சாப்பிட்டு பாருங்கள் அதுக்கப்புறம் எப்போதும் நீங்கள் இந்த போண்டாவை தான் செய்து சாப்பிடுவீர்கள்.
இந்த மரவள்ளிக்கிழங்கு போண்டாவை குட்டி குட்டியா எண்ணையில் போட்டு பொரித்து எடுத்து அதற்கு ஏதாவது தேங்காய் சட்னி அல்லது தக்காளி சட்னி வைத்து சாப்பிட்டால் அவ்வளவு ருசியாக இருக்கும் மாலை நேரமே சொர்க்கம் மாதிரி தெரியும். இந்த ஒரு சூப்பரான மரவள்ளிக்கிழங்கு போண்டாவை வீட்டுக்கு வர விருந்தாளிகளுக்கு கூட செய்து கொடுத்து அசத்துங்கள். சாப்பிட்டு மனநிறையோட போவார்கள் அந்த அளவிற்கு ருசியானது இந்த மரவள்ளிக்கிழங்கு போண்டா. இப்போது சுவையான மரவள்ளிக்கிழங்கு போண்டா எப்படி செய்வதென்று பார்ப்போம்.
இதனையும் படியுங்கள் : காலை டிபனுக்கு ருசியான மரவள்ளி பணியாரம் ஒரு முறை இப்படி செய்து பாருங்கள் அடிக்கடி செய்வீங்க!
Ingredients
Method
முதலில் வரவள்ளிக்கிழக்கை தோல் சீவி, துருவி எடுத்துக் கொள்ளவும்.
ஒரு பவுளில் துருவிய மரவள்ளிக்கிழங்கை சேர்த்து அதனுடன் நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், கொத்தமல்லி, முந்திரி பருப்பு, பெருங்காயத்தூள், உப்பு, தயிர், ரவை, சோடா உப்பு சேர்த்து நன்கு கலந்து சிறிது நேரம் மூடி வைத்து விடவும்.
பின் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் இந்த கலவையை சின்ன சின்ன உருண்டைகளாக உருட்டி சேர்த்து பொன்னிறமாக பொரித்து எடுக்கவும். அவ்வளவுதான் சுவையான மரவள்ளிக்கிழங்கு போண்டா தயார்.






