- Prep
- 5 min
- Cook
- 10 min
- Total
- 15 min
- Serves
- 3
- Cuisine
- Indian, TAMIL
- Course
- Breakfast, dinner
தினமும் இட்லி, தோசை, பூரி,பொங்கல் என செய்து அலுத்து விட்டதா? உங்களுக்கும் உங்க குழந்தைகளுக்கும் டிஃபரென்ட்டா எதையாவது செய்யலாம்னு யோசித்தால் அப்போ உங்களுக்கான பதிவா தான் இது இருக்கும். உங்கள் வீட்டில் இருப்பவர்களுக்கு நூடுல்ஸ் பிடிக்குமா?அப்படியென்றால் இன்று உங்கள் வீட்டில் இருப்பவர்களுக்கு மசாலா நூடுல்ஸ் செய்து கொடுங்கள். இந்த மசால் நூடுல்ஸை எப்படி சுலபமாக மற்றும் சுவையாக செய்வது இன்றி இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம்.
பாஸ்தா போல நூடுல்ஸூம் ரிலாக்ஸ் டைமில் இப்போது அதிக அளவு பயன்படுத்தப்படுகிறது. மிக விரைவாக இது செய்யப்படுவதால் சீக்கிரமாக செய்யப்படும் ஒரு உணவு வகையாக இருக்கிறது. நூடுல்ஸ், பாஸ்தா போன்ற அயல் நாட்டு உணவுகளுக்கு சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை ஏராளமான ரசிகர்கள் இருக்கலாம். என்ன தான் குழந்தைகள் இவற்றை விரும்பி சாப்பிட்டாலும், இது போன்ற உணவுகளை குழந்தைகளுக்கு அடிக்கடி சமைத்து கொடுக்க மனம் வராது.
ஆரோக்கியமற்ற உணவுகளை கொடுக்கிறோமே என்ற குற்ற உணர்வு எல்லா தாய்மார்களுக்கும் இருக்கும். இது போன்ற உணவுகளையும் ஆரோக்கியமாக மாற்றலாம். எப்படி என்று யோசிக்கிறீர்களா? இந்த நூடுல்ஸூடன் நாம் ஆரோக்கியம் நிறைந்த காய்கறிகளை பயன்படுத்தலாம். ஆம் நாம் இந்த பதிவில் ஆரோக்கியமான காய்கறிகளில் ஒன்றான கேரட், முட்டைக்கோஸ், குடைமிளகாய் சேர்த்து தான் செய்யப் போகிறோம்.
இந்த மசாலா நூடுல்ஸ் ரெசிபி செய்றது ரொம்ப ரொம்ப ஈஸி தான். ஒரு தடவை செஞ்சு பார்த்துட்டீங்கன்னா அதுக்கப்புறமா அடிக்கடி செய்வீங்க அந்த அளவுக்கு செம டேஸ்டா இருக்கும். சுவையான இந்த மசாலா நூடுல்ஸ் ரெசிபியை கண்டிப்பா உங்க வீட்டில் உள்ளவர்களுக்கு செய்து கொடுத்து அசத்துங்கள். குறிப்பாக குழந்தைகளுக்கு செய்து கொடுங்கள் விரும்பி சாப்பிடுவாங்க. இப்போது இந்த சுவையான மசாலா நூடுல்ஸ் எப்படி செய்வதென்று பார்ப்போம்.
இதனையும் படியுங்கள் : மஷ்ரூம் ஒயிட் சாஸ் பாஸ்தா
Ingredients
Method
முதலில் ஒரு கடாயை அடுப்பில் வைத்து தண்ணீர் சேர்த்து தண்ணீர் நன்கு கொதித்ததும் நூடுல்ஸை சேர்த்து வேகவைத்து எடுத்து கொள்ளவும்.
ஒரு கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் நறுக்கிய பூண்டு, இஞ்சி, வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
அதன்பிறகு நீளமாக நறுக்கிய கேரட், முட்டைக்கோஸ், குடைமிளகாய் சேர்த்து வதக்கவும். பின் அதனுடன் மிளகு தூள், சீரகத்தூள், உப்பு, மிளகாய் தூள், சாட் மசாலா, சோயா சாஸ் சேர்த்து வதக்கவும்.
பின் வேகவைத்த நூடுல்ஸை சேர்த்து இரண்டு நிமிடங்கள் நன்கு கலந்து வெங்காயத்தாள் சேர்த்து இறக்கவும். அவ்வளவுதான் சுவையான மசாலா நூடுல்ஸ் தயார்.






