- Prep
- 10 min
- Cook
- 10 min
- Total
- 20 min
- Serves
- 4
- Cuisine
- Indian, TAMIL
- Course
- Breakfast, dinner
தென்னிந்தியாவை பொறுத்தவரை, இட்லி மற்றும் தோசை என்பது தவிர்க்க முடியாத ஒரு உணவாகும். இதிலும் தோசை என்று எடுத்துக் கொண்டால் பேப்பர் ரோஸ்ட் தோசை, ஊத்தப்பம், வெங்காய ஊத்தப்பம், வெங்காய தோசை, மிளகாய் தோசை, புதினா தோசை, மல்லி தோசை, பன்னீர் தோசை. மசாலா தோசை மற்றும் கீரை தோசை என இதில் நிறைய வகைகள் இருக்கின்றன. வீடுகளில் ஒவ்வொரு நாளும் ஒரே தோசை வகையை செய்து சாப்பிட்டு சலித்து போய் இருக்கலாம் ஆகவே சற்று வித்தியாசமான முறையில் மசாலா ஊத்தப்பம் செய்து பார்க்கலாமே. மசாலா ஊத்தப்பம் தென்னிந்தியாவில் ஒரு பிரபலமான காலை மற்றும் மாலை நேர டிபன்.
காலை நேரத்தை விட மாலை நேர டிபனாக இதை உண்பதற்கே பலரும் விரும்புவார்கள். தோசை வகையை சார்ந்த இவை தென்னிந்தியாவில் தான் உதயமானது. பொதுவாக இவை வெங்காயம், கேரட், மற்றும் குடை மிளகாயை கொண்டு செய்யப்படுகிறது. எனினும் அவரவர் விருப்பத்திற்கேற்ப காய்கறிகளை சேர்த்தும் இதை செய்கிறார்கள். பெரும்பாலும் காய்கறி மற்றும் கோதுமை மாவு கொண்டு செய்வதினால் இவை உடம்பிற்கும் சத்தானது.
இந்த மசாலா ஊத்தாப்பத்தின் ஸ்பெஷல் என்னவென்றால் தோசையை போன்றே இதையும் மிக எளிதாக செய்து விடலாம். ஆனால் உண்பதற்கு தோசையை விட இந்த ஊத்தப்பம் இன்னும் நன்றாக இருக்கும். மேலும் அதிகம் சமைக்கத் தெரியாதவர்கள் கூட இதை மிக எளிதாக செய்து விடலாம். இவை செய்வதற்கும் மிகக் குறைந்த நேரமே எடுப்பதினால் சமைப்பார்கள் பொறுமை இழக்க மாட்டார்கள். இந்த ஊத்தாப்பத்தை வீட்லயே செய்து கொடுக்கும் போது குழந்தைகளுக்கு ஹெல்தியாவும் இருக்கும் அதே நேரம் பிடிச்ச மாதிரியான ஒரு உணவாகவும் இருக்கும்.
இதனையும் படியுங்கள் : தினமும் சாப்பிடும் டிபனுக்கு பதிலாக இந்த ரவா ஊத்தாப்பம் செய்து சாப்பிட்டு பாருங்கள் இதன் சுவைக்கு அடிமையாகிவிடுவீர்கள்!!!
Ingredients
Method
முதலில் கோதுமை மாவை நன்கு சலித்து எடுத்துக் கொள்ளவும். அதனுடன் மிளகாய் தூள், மஞ்சள் தூள், உப்பு சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்.
பின் ஒரு மிக்ஸி ஜாரில் சின்ன வெங்காயம், கறிவேப்பிலை, கொத்தமல்லி, பச்சைமிளகாய் சேர்த்து கொரகொரப்பாக அரைத்துக் கொள்ளவும்.
பின் இதனை கோதுமை மாவுடன் சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும். அதன்பிறகு தேங்காய் துருவல் மற்றும் சிறிதளவு தண்ணீர் விட்டு கட்டிகள் இல்லாமல் தோசை மாவு பதத்திற்கு கலந்து கொள்ளவும்.
பின் இந்த மாவை ஒரு மூடி வைத்து மூடி இரண்டு முதல் மூன்று மணி நேரம் வரை ஊற வைத்துக் கொள்ளவும்.
பின் ஒரு தோசை கல்லை அடுப்பில் வைத்து சூடானதும் ஒரு கரண்டி மாவை மொத்தமாக ஊற்றி, சுற்றி எண்ணெய் விட்டு இரண்டு பக்கமும் வேக வைத்து எடுத்துக் கொள்ளவும். அவ்வளவுதான் சுவையான மசாலா ஊத்தப்பம் தயார்.






