- Prep
- 20 min
- Cook
- 20 min
- Total
- 40 min
- Serves
- 5
- Cuisine
- Indian, TAMIL
- Course
- chutney
இன்று மையோனைஸ் பற்றி தான் இந்த தொகுப்பில் பார்க்க இருக்கிறோம். இப்பொழுது எல்லாம் ஒரு நாளில் பெரும்பாலானோர் அசைவ உணவுகள் சாப்பிடாமல் அவர்களுக்கு அந்த நாட்கள் முடிவதில்லை. அந்த அளவுக்கு பெரும்பாலான மக்கள் அசைவ உணவு பிரியர்களாக உள்ளனர். அதிலும் சிக்கனை பயன்படுத்தி செய்யப்படும் கீரில்டு சிக்கன், தந்தூரி சிக்கன் மற்றும் பொறித்த கோழி இது போன்ற சிக்கன் வகைகள் மக்களிடையே பிரபலமாக உள்ளது.
இதையும் படியுங்கள் : மொறு மொறுப்பான சிக்கன் லாலிபாப் செய்வது எப்படி ?
இந்த உணவுகள் சாப்பிடும் பொழுது இதனுடன் சிக்கனை தொட்டு சாப்பிடுவதற்காக மையோனைஸ் கொடுப்பார்கள் நாம் அதை தொட்டு சாப்பிடும் பொழுது அவ்வளவு அருமையாக இருக்கும். நாம் ஹோட்டலில் இருந்து சிக்கன் பார்சல் வாங்கும் பொழுது அவர்கள் கொடுக்கும் மையோனைசின் அளவு கம்மியாக இருக்கும் ஆனால் அதே மையோனைஸ் எளிதான முறையில் வீட்டிலேயே நாம் தயாரிக்கலாம். ஆம் இன்று மையோனைஸ் எப்படி செய்வது, தேவையான பொருட்கள் மற்றும் செய்முறைகள் என அனைத்தையும் இந்த சமையல் குறித்த தொகுப்பில் நாம் காணலாம் வாருங்கள்.
English Overview: mayonnasie is one of the most important dishes in south india. mayonnasie recipe or mayonnaise seivathu eppadi or mayonnaise recipe in Tamil are a few important terms to describe this recipe in the tamil
Ingredients
Method
முதலில் மையோனைஸ் செய்வதற்காக நம்ம எடுத்துள்ள கடுகை நன்றாக இடித்து பொடியாக்கி கொள்ளுங்கள். அதன் பின்பு ஒரு பெரிய பவுளில் முட்டையின் வெள்ளை கருவை நீக்கிவிட்டு அதன் மஞ்சள் கருவை மட்டும் சேர்த்துக் கொள்ளுங்கள்.
பின் அந்த மஞ்சள் கருவை முட்டை கலக்கும் கரண்டியைக் கொண்டு நன்றாக அடித்துக் கொண்டே இருங்கள். இப்படியாக ஒரு நிமிடம் அடித்துக் கொண்டு பின்பு இதனுடன் நாம் இடித்து வைத்துள்ள கடுகு பொடியை சேர்த்து நன்றாக அடித்துக் கொள்ளுங்கள்.
பின் நாம் எடுத்து வைத்திருக்கும் எண்ணெயை முழுவதும் அப்படியே சேர்க்காமல் சிறிது சிறிதாக சேர்த்து அடித்துக் கொண்டு சேர்த்துக் கொள்ளுங்கள். சிறிது எண்ணெய் சேர்த்து விட்டு நன்கு அடித்து அந்த எண்ணெய் முட்டையுடன் கலந்ததும் மறுபடியும் எண்ணெய் சேர்த்து நன்கு அடித்து கொள்ளுங்கள்.
இந்த முறையில் முட்டையுடன் எண்ணெயை சேர்த்து நன்றாக அடித்துக் கலந்து கொள்ளுங்கள். பின்பு இதனுடன் நாம் எடுத்து வைத்திருக்கும் வினிகர், உப்பு, எலுமிச்சை பழச்சாறு மற்றும் மிளகுத்தூள் போன்ற பொருட்களை எல்லாம் சேர்த்துக் கொண்டு நன்றாக அடித்துக் கொள்ளுங்கள்.
இப்போது முட்டையின் மஞ்சள் நிறம் மாறி வெள்ளை நிற வர ஆரம்பித்து விடும் அதன் பின்பு மறுபடியும் என்னையை ஊற்றிக் கொண்டே முட்டையை அடிக்க ஆரம்பித்து கொள்ளுங்கள். இப்படியாக நாம் எடுத்த 200 ml எண்ணெய் ஊற்றி அடித்துக் கொள்ளுங்கள் அவ்வளவுதான் மையோனைஸ் இனிதே தயாராகிவிட்டது.






