முதுமையை தடுத்து, கர்ப்பிணி பெண்களுக்கு உதவும் அற்புத மருத்துவ குணம் கொண்ட திராட்சை பழம்!

- Advertisement -

திராட்சைப்பழம்… இதை கொடி முந்திரின்னும் சொல்வாங்க. உலக அளவுல 10 ஆயிரத்துக்கும் அதிகமான திராட்சைப்பழ வகைகள் இருந்தாலும் நம்ம பகுதியில கிடைக்கக்கூடியது பன்னீர் திராட்சை. அதேமாதிரி காஷ்மீர் திராட்சை, ஆங்கூர் திராட்சை, காபூல் திராட்சை, கறுப்பு திராட்சை, பச்சை திராட்சைன்னு பல விதமான திராட்சை இருக்கு. ஒரு காலத்துல மொராக்கோ, போர்ச்சுகல், ஜெர்மனி நாடுகள்ல கிடைச்ச திராட்சை இப்போ உலகம் முழுக்க கிடைக்கிது. கறுப்பு திராட்சைல புரோ ஆந்தோ சயனிடின் இருக்கு. மத்தபடி பொதுவா திராட்சைப்பழங்கள்ல வைட்டமின் பி, கால்சியம்னு பல சத்துகள் இருக்கு.

-விளம்பரம்-

எலும்பு மஜ்ஜை பலமடையும்

பச்சை திராட்சை மாதிரி காய்ஞ்ச திராட்சைப் பழத்தையும் சாப்பிடலாம். ராத்திரி சாப்பாட்டுக்குப் பிறகு பத்து காய்ஞ்ச திராட்சைப்பழங்களை பால் சேர்த்துக் காய்ச்சி சாப்பிட்டு வந்தா பலன் கிடைக்கும். காய்ஞ்ச திராட்சை எலும்பு மஜ்ஜைகள்ல ரத்தம் ஊற உதவும். அதனால அப்பப்போ ஒண்ணு ரெண்டு காய்ஞ்ச திராட்சைப்பழங்களை வாயில போட்டு மென்று அதோட சாறை மெதுவா விழுங்கிட்டு வந்தா எலும்பு மஜ்ஜை பலமடையும்.

- Advertisement -

ஹீமோகுளோபின் அதிகரிக்கும்

திராட்சை ரத்தம் ஊறுறதுக்கு உதவுறதோட ரத்தத்தை சுத்தப்படுத்தி உடம்புக்கு புத்துணர்ச்சி தரும். ஹீமோகுளோபின் அளவு அதிகரிக்கும். முக்கியமா கர்ப்பிணிகள் காய்ஞ்ச திராட்சைப்பழத்தை சாப்பிட்டு வந்தா பிறக்கப்போகும் குழந்தை நல்ல உடல்நலத்தோட இருக்கும். பெண்களுக்கு மாதவிலக்கு காலங்கள்ல வரக்கூடிய வயிறுவலி சரியாகுறதுக்கும் எல்லா பிரச்சினை சரியாகுறதுக்கும் காய்ஞ்ச திராட்சை நல்லது.

முதுமை தடுக்கும்

முதுமையை நெருங்கவிடாம இளமையை தக்க வைக்கக்கூடிய பழம் திராட்சை. உடல் மெலிஞ்சி எடை குறைவா இருக்கிறவங்க தினமும் காய்ஞ்ச திராட்சைப்பழத்தை சாப்பிட்டு வந்தா நல்ல பலன் கிடைக்கும். பசியே எடுக்கலன்னு வருத்தப்படுறவங்க திராட்சைப்பழத்தை சாப்பிட்டு வந்தா ரொம்ப நல்லது. புத்துணர்ச்சியூட்டக்கூடிய திராட்சைப்பழம் தாகத்தை தணிச்சி வயிற்றெரிச்சலை கட்டுப்படுத்தும். செரிமானக்கோளாறை சரிபண்ணி வாய்வுப்பொருமலை விரட்டும்.

இதயம் காக்கும்

திராட்சைப்பழத்துல செய்யக்கூடிய ஒயின் ரொம்ப ருசியா இருக்கும். ஒருகாலத்துல மன்னர்கள் மட்டுமே குடிச்சிட்டு வந்த இந்த திராட்சை ஒயின் இப்போ எல்லோருக்கும் ரொம்ப சாதாரணமா கிடைக்கிது. அதை ஒரு போதைப்பொருளா இல்லாம மருந்தா சாப்பிட்டு வர்றது நல்லது. பிரான்ஸ் நாட்டுல மாரடைப்பு குறைவா இருக்கிறதுக்கு காரணம் திராட்சை ஒயின் அங்கே ரொம்ப தாராளம். ஆக, திராட்சை ஒயின் இதயத்தை பாதுகாக்க உதவுது. திராட்சைல அதோட சதைப்பகுதி மட்டுமில்லாம விதைகளுக்கும்கூட மருத்துவ குணம் இருக்கு. அமெரிக்கா, பிரான்ஸ் மாதிரி நாடுகள்ல திராட்சையோட விதைகளுக்கு மருத்துவ குணம் இருக்குங்கிறதை தெரிஞ்சிட்டு அதை அதிகமா பயன்படுத்துறாங்க.

-விளம்பரம்-

கண் புரை தடுக்கும்

திராட்சையோட விதையை சாப்பிடுறதால ரத்தக்குழாய்கள்ல அடைப்பு, வீக்கம் இருந்தா அதைக் குறைச்சிரும். மூல நோயாளிகளுக்கு ரத்தப்போக்கு வராம பாதுகாக்கும். ரத்தக்குழாய்ல கொலஸ்ட்ரால் இருந்தா அதை கரைக்கும். சர்க்கரை நோயாளிகளுக்கு கால் மரத்துப்போகக்கூடிய தன்மை, கண்ணுல புரை வளர்ற பிரச்சினை எல்லாத்தையும் தடுக்கும். மாலைக்கண் நோயை சரிபண்ணும்.

புற்றுநோய் தடுக்கும்

சிறுநீரகத்தோட செயல்பாட்டுல ஏதாவது குறை இருந்தா அதை சரிபண்ணக்கூடிய தன்மை திராட்சை விதைக்கு இருக்கு. பெண்களோட மார்பகப்பகுதியில வரக்கூடிய புற்றுநோய், கருப்பைக்கோளாறுகள் எல்லாத்தையும் தடுக்கக்கூடிய ஆற்றல் திராட்சை விதைக்கு இருக்கு. அதேபோல ஆண்களுக்கு வயதான காலத்துல வரக்கூடிய புராஸ்டேட் புற்றுநோயை வராம தடுக்கும். மொத்தத்துல புற்றுநோய் செல்களை அழிக்கக்கூடிய தன்மை திராட்சை விதைகளுக்கு இருக்கு.

திராட்சை விதை

திராட்சை விதை டிபார்ட்மென்டல் ஸ்டோர்கள்ல கிடைக்கும். நாமளே திராட்சைப் பழத்துல இருந்து விதையை பிரிச்சி எடுக்கலாம். முதல்ல விதைகளை பிரிச்சி எடுத்து நல்லா கழுவி துணியில கட்டி தண்ணியில்லாம தனியா எடுத்து ரெண்டு மூணு நாள் காய வைக்கணும். மூணு நாள் கழிச்சி விதையை மிக்ஸியில போட்டு பொடியாக்கி வச்சிக்கிடணும். இதை குடிக்கிற தண்ணியிலயோ இல்லன்னா நாம குடிக்கிற ஏதாவது ஒரு ஜூஸ்ல கலந்தோ குடிக்கலாம். ஒருநாளைக்கு ரெண்டு தடவைன்னு தொடர்ந்து மூணு மாசம் குடிச்சிட்டு வந்தா புற்றுநோய் இருந்த இடம் தெரியாம விலகிப்போயிரும். ஒருசில நாட்கள் மட்டும் செஞ்சி பார்த்தா பலன் கிடைக்காது. தொடர்ந்து சாப்பிட்டு வந்தா நிச்சயம் பலன் கிடைக்கும்.

-விளம்பரம்-

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here