- Advertisement -
உங்களுக்கு அவ்வளவாக இனிப்பு பலகாரங்கள் செய்ய வராத? எது செய்தலும் எதாவது சுதபல் நடந்து விடுகிறதா? இந்த காரணத்தினாலே பண்டிகை நாட்களில் கூட வீட்டில் பலகாரங்கள் செய்வதில்லையா? அப்படியானால் அத்தகையானவர்களுக்கு ஈஸியான ஸ்வீட் ரெசிபி செய்வது எப்படி என்று பார்ப்போம்.
-விளம்பரம்-
இதையும் படியுங்கள் : சுவையான வேர்க்கடலை லட்டு செய்வது எப்படி ?
- Advertisement -
பால் பால்பௌடரை வைத்து சுவையான ஸ்வீட் லட்டு எப்படி செய்வது என்று கீழே கொடுத்துளோம். அதனை படித்து பார்த்து நீங்களும் ட்ரை பண்ணி வீட்டில் உள்ள அனைவர்க்கும் கொடுங்கள் அவர்களும் விரும்பி சாப்பிடுவார்கள். குழந்தைகளும் விரும்பி சாப்பிடுவார்கள்.
மில்க் பவுடர் லட்டு | Milk Powder Laddu Recipe In Tamil
உங்களுக்கு அவ்வளவாக இனிப்பு பலகாரங்கள் செய்ய வராத? எது செய்தலும் எதாவது சுதபல் நடந்து விடுகிறதா? இந்த காரணத்தினாலே பண்டிகை நாட்களில் கூட வீட்டில் பலகாரங்கள் செய்வதில்லையா? அப்படியானால் அத்தகையானவர்களுக்கு ஈஸியான ஸ்வீட் ரெசிபி செய்வது எப்படி என்று பார்ப்போம். பால் பால்பௌடரை வைத்து சுவையான ஸ்வீட் லட்டு எப்படி செய்வது என்று கீழே கொடுத்துளோம். அதனை படித்து பார்த்து நீங்களும் ட்ரை பண்ணி வீட்டில் உள்ள அனைவர்க்கும் கொடுங்கள் அவர்களும் விரும்பி சாப்பிடுவார்கள்.குழந்தைகளும் விரும்பி சாப்பிடுவார்கள்.
Yield: 4 people
Calories: 105kcal
Equipment
- 1 கடாய்
தேவையான பொருட்கள்
- 2 கப் பால் பவுடர்
- ¼ கப் பால்
- ¼ கப் சர்க்கரை
- ட்ரை தேங்காய் பொடி சிறிதளவு
- முந்திரி, ஏலக்காய் விருப்பப்படி
- 2 டீஸ்பூன் நெய்
செய்முறை
- முதலில் கடாயில் நெய் ஊற்றி முந்திரியை வறுத்து எடுத்துக்கொள்வோம்.
- அதே வாணலியில் அடுப்பில் வைத்து ¼ கப் பால், ¼ கப் சர்க்கரை சேர்த்து அதில் ஏலக்காய் பொடி போட்டு 2 கப் பால் பவுடர் செக்கவும்.
- நன்கு கட்டி தட்டாமல் கிளறவும். பிறகு வறுத்த முந்திரி மற்றும் 1 டீஸ்பூன் நெய் ஊற்றி கடாயில் ஒட்டாத அளவு கிளறிவிடவும்.
- நன்றாக திரண்டு வரும் வரை கிளறிவிடவும்.
- திரண்டு வந்த பிறகு அடுப்பை நிறுத்தி, லேசான சூட்டில் நெய் தடவி பிசைந்து உருண்டைகளாக உருட்டி ட்ரை தேங்காய் பொடியாய் மேல தேய்த்து உருண்டை பிடிக்கவும்.
- இப்பொழுது சுவையான பால் பவுடர் லட்டு தயார்.
Nutrition
Serving: 200gram | Calories: 105kcal | Carbohydrates: 35g | Protein: 31g | Fat: 2g | Saturated Fat: 0.5g | Cholesterol: 8mg | Sodium: 3mg | Potassium: 89mg | Fiber: 12g | Sugar: 4g | Vitamin A: 8IU | Calcium: 8mg