குழந்தைகளுக்கு தினமும் லஞ்ச் பாக்ஸுக்கு என்ன கொடுத்து விடுவது அப்படின்னு ஒரே குழப்பமா இருக்கும். அந்த மாதிரி குழப்பமா இருக்குற சமயத்துல இந்த மாதிரி புதினா முட்டை சாதம் ஒரு தடவ செஞ்சு கொடுத்து விடுங்க. புதினா முட்டை சாதம் சாப்பிடறதுக்கு கொஞ்சம் வித்தியாசமான டேஸ்ட்ல இருக்கும். பொதுவா குழந்தைகளுக்கு குழம்பு ஊத்தி சாதம் கொடுத்து விடறதுக்கு பதிலா கலவை சாதங்கள் கொடுத்தா தான் ரொம்ப பிடிக்கும். அந்த விதத்துல எப்பவுமே ஒரே மாதிரியா லெமன் சாதம், புளி சாதம் தேங்காய் சாதம், முட்டை சாதம்னு கொடுத்து உங்களுக்கு போர் அடிச்சு போயிருந்துச்சுன்னா ஒரு தடவை உங்க வீட்டுல இருக்குற குழந்தைகளுக்கு இந்த மாதிரி புதினா முட்டை சாதம் செஞ்சு கொடுத்து விடுங்க.
இந்த புதினா முட்டை சாதம் உடம்புக்கு ஆரோக்கியமானதும் கூட. குழம்புல கிரேவில சாதத்துல புதினா கொத்தமல்லி இலைகள் சேர்த்தால் குழந்தைகளுக்கு எடுத்து தனியா வச்சுடுவாங்க அதனால அதோட சத்துக்கள் முழுமையாக குழந்தைகளுக்கு கிடைக்காது இப்படி ஒரு தடவை புதினா கொத்தமல்லி அரைச்சு அதுல முட்டை சேர்த்து சூப்பரான ஒரு முட்டை சாதம் செஞ்சு கொடுத்தீங்கன்னா கண்டிப்பா குழந்தைகள் விரும்பி சாப்பிடுவாங்க. குழந்தைகளுக்கு இந்த சாதம் ரொம்ப ரொம்ப பிடிக்கும்.
இதை குழந்தைகளுக்கு மட்டுமில்லாமல் வீட்டில் இருக்கிற பெரியவங்களும் கூட வேலைக்கு போகும் போது ஆபீஸ்ல லஞ்ச் பாக்ஸுக்கு செஞ்சு கொண்டு போகலாம். டேஸ்ட் ரொம்பவே அட்டகாசமா இருக்கும் இதுக்கு எந்த சைடு டிஷ்ஷுமே தேவை இல்லை அப்படியே சாப்பிடலாம். இந்த சூப்பரான புதினா முட்டை சாதத்துக்கு நீங்க கொஞ்சமா தயிர் பச்சடி வேணும்னா செஞ்சுக்கலாம் ஆனா அதுவும் மே தேவை படாது தான் வெறும் சாப்பாடு சாப்பிட்டாலே அவ்ளோ சூப்பரா இருக்கும். இந்த டேஸ்டான சிம்பிளான புதினா முட்டை சாதம் எப்படி செய்வது என்று வாங்க பார்க்கலாம்.
புதினா முட்டை சாதம் | Mint Egg Rice Recipe In Tamil
Equipment
- 1 பவுள்
- 1 மிக்ஸி
- 1 கடாய்
தேவையான பொருட்கள்
- 3 முட்டை
- 1 கைப்பிடி புதினா
- கொத்தமல்லி சிறிதளவு
- 1 டீஸ்பூன் கரம் மசாலா
- 1/2 டீஸ்பூன் மஞ்சள் தூள்
- 1 கப் பாசுமதி அரிசி
- 1 பெரிய வெங்காயம்
- 1 துண்டு இஞ்சி
- 5 பல் பூண்டு
- எண்ணெய் தேவையான அளவு
- உப்பு தேவையான அளவு
செய்முறை
- ஒரு மிக்ஸி ஜாரில் வெங்காயம் பூண்டு இஞ்சி புதினா கொத்தமல்லி அனைத்தையும் சேர்த்து அரைத்து எடுத்துக் கொள்ளவும்.
- கடாயில் எண்ணெய் சேர்த்து அரைத்து விழுதை சேர்த்து கரம் மசாலா மஞ்சள் தூள் உப்பு சேர்த்து நன்றாக வதக்கவும்.
- முட்டையை நன்றாக உடைத்து ஊற்றி அடித்து அதனையும் சேர்த்து நன்றாக கலந்து சாதம் போட்டு கிளறி இறக்கினால் சுவையான புதினா முட்டை சாதம் தயார்.
Nutrition
இதனையும் படியுங்கள் : இதுவரைக்கும் எள் சாதம் சாப்பிட்டது இல்லனா இனிமேல் இப்படி செஞ்சு சாப்பிட்டு பாருங்க!