பணம் இல்லாமல் இந்த உலகில் நம்மாள் பணம் இல்லாமல் ஒரு நொடி கூட இந்த உலகில் வாழமுடியாது. அந்த அளவிற்கு பணம் என்பது இந்த உலகில் முக்கியமான ஒன்றாக உள்ளது. இப்படி நாம் நாள்தோறும் வாழ்ந்து கொண்டிருக்கும் இந்த வாழ்க்கை பணத்துடன் பின்னி பிணைந்து கொண்டிருக்கிறது. அந்த பணத்தை சம்பாதிக்க தான் நாம் அல்லும் பகலும் பாடுபட்டுக் கொண்டிருக்கிறோம்.
இந்த பணத்தை நாம் எவ்வளவுதான் பாடுபட்டு சம்பாதித்து அதனை பல மடங்காக பெருக்க நினைத்தாலும் நாம் நினைப்பதற்கு எதிர் மாறாக அந்த பணம் நம்மை விட்டு வெளியே போய்க்கொண்டே இருக்கிறது தவிர நம்மிடம் சேர்வதில்லை. அதற்குத்தான் ஆன்மீகம் பணத்தை தக்க வைத்துக் கொள்ள நமக்கு ஒரு சூட்சம வார்த்தையை அளித்துள்ளது. அந்த வார்த்தை என்ன என்பது பற்றியும் இந்த சூட்சம பரிகாரத்தினை பற்றியும் இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம் வாருங்கள்.

கடனை கொடுக்கும்பொழுது கூட மன மகிழ்வுடன் கொடுக்க வேண்டும் :
பணத்தை நாம் பெரும்பொழுது எவ்வளவு மகிழ்ச்சியாக உள்ளோமோ அவ்வளவு மகிழ்ச்சியாக பணம் நம்மை விட்டு வெளியே செல்லும்போதும் கூட சந்தோஷமாக இருக்க வேண்டும் என சொல்லப்படுகிறது. ஒரு பொருளையோ அல்லது வீட்டிற்கு தேவையான பொருட்களையோ நாம் வாங்கும் பொழுது சந்தோஷமாக இருப்போம், முக்கியமாக நாம் நகை கடைக்கு சென்ற நகை வாங்கும் பொழுது மிகவும் சந்தோஷமாக இருப்போம். ஆனால் வீட்டில் கடன்காரர் வந்து கொடுத்த கடனை திருப்பி கேட்டால் நாம் சந்தோஷமாக இருப்பதில்லை என்பதுதான் உண்மை. ஆனால் இப்படி இருக்கக் கூடாது என்று சொல்கிறார்கள் பெரியவர்கள்.
இதனையும் படியுங்கள் : கனவில் கூட நினைத்து பார்க்க முடியாத பணம் உங்கள் வீட்டிற்கு பணம் தடையில்லாமல் வர! வெறும் மூன்று ஏலக்காய் போதும்!
நாம் பெற்ற கடனை ஒருவருக்கு திரும்ப கொடுக்கும் பொழுது நாம் ஏன் இந்த பணத்தை அவருக்கு கொடுக்கிறோம் என்று நினைத்தபடி பணத்தை அவரிடம் கொடுத்தால் அந்த பணமானது நம்மிடம் திரும்ப வராது என சொல்லப்படுகிறது. எந்த காரியத்திற்காகவும் நாம் பணம் கொடுக்கும் பொழுது ஒரு வார்த்தையையும் ஒரு எண்ணையும் சேர்த்து சொன்னால் நம்மிடமிருந்து செல்லும் பணமானது பல மடங்காக திரும்பி வரும் என நம்பப்படுகிறது.

ஸ்ரீம் ஸ்ரீரிஷி 528 :
இந்த வார்த்தையையும் இந்த சூட்சும எண்ணையும் பணம் நம்மை விட்டு வெளியே செல்லும் ஒவ்வொரு முறையும் சொல்ல வேண்டும். நாம் வாங்கிய கடனை திரும்ப கொடுத்தாலும் கூட இந்த வார்த்தையையும் இந்த எண்ணையும் சொல்லிவிட்டு என்னை விட்டு செல்லும் பணம் என்னிடமே பல மடங்காக திரும்ப வர வேண்டும் என மனதிற்குள் சொல்ல வேண்டும். அப்படி செய்தால் பணம் பல மடங்காக நம் வீடு தேடி வரும் என நம்பப்படுகிறது.
இப்படி செய்தால் உங்கள் கையில் இருந்து செல்லும் பணமானது பல மடமாக திரும்பி வரும். இந்த சூட்சும எண்ணெயும் வார்த்தையையும் சொல்லி உங்களிடமிருந்து செல்லும் பணத்தினை திரும்ப உங்களிடமே பல மடங்காக வர வைத்து கொள்ளுங்கள்.


