- Prep
- 10 min
- Cook
- 10 min
- Total
- 20 min
- Serves
- 4
- Cuisine
- Indian, rajasthan
- Course
- Breakfast, dinner
பெரும்பாலான நேரங்களில் காலை உணவு என்ன செய்வது என தெரியாமல் இல்லத்தரிகள் சிரமப்படுகின்றனர். நீங்கள் உடனடியாக செய்யக்கூடிய பல சுவையான காலை உணவுகள் உள்ளன. அதில் ஒன்று தான் இந்த பராத்தா. இதை தயாரிப்பது மிகவும் எளிதானது மற்றும் மிகவும் சுவையாக இருக்கும். பராத்தா என்றால் யாருக்கு தான் பிடிக்காது சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் பிடித்த ஒரு உணவு என்றே சொல்லலாம். என்னதான் பல பேருக்கு விருப்பமான உணவு பிரியாணி தான் என்று சொன்னாலும் அதையும் தாண்டி பிடித்த உணவு அதிகம் விரும்பி சாப்பிடும் உணவு என்று வரும் பொழுது பலரும் கூறுவது பராத்தா தான்.
பராத்தாகளில் இப்போது வகை வகையாக வந்துவிட்டன. சாதா பராத்தா, வீச்சுப் பராத்தா, சிலோன் பராத்தா, முட்டை கொத்துப் பராத்தா, பொரித்த பராத்தா, சால்னா பராத்தா, கிளி பராத்தா, நூல் பராத்தா, சிக்கன் பராத்தா, கேரள பராத்தா, கோதுமை பராத்தா என அடுக்கிக் கொண்டே போகலாம். பராத்தா என்பது மைதாவால் செய்யப்படும் உணவு என்பதால் பொதுவாக தாய்மார்கள் அதை குழந்தைகளுக்கு கொடுக்க மாட்டார்கள் அதனால் நாம் இந்த பதிவில் பாசிப்பருப்பு மற்றும் கோதுமை மாவு பயன்படுத்தி எப்படி பராத்தா செய்வதென்று பார்க்கலாம்.
இதனையும் படியுங்கள் : சிம்பிளான கார்லிக் பராத்தா இந்த மாதிரி ஒரு தடவை செஞ்சு பாருங்க!!
Ingredients
Method
முதலில் பாசிப்பருப்பை இரண்டு மணி நேரம் வரை ஊற வைத்து எடுத்துக் கொள்ளவும்.
ஒரு பவுளில் கோதுமை மாவு எடுத்து அதனுடன் ஊற வைத்த பாசிப்பருப்பு, சீரகத்தூள், கரம் மசாலா தூள், கஸ்தூரி மேத்தி, உப்பு, சாட் மசாலா, தனியா தூள், மஞ்சள் தூள், மிளகாய் தூள், கொத்தமல்லி மற்றும் சிறிதளவு தண்ணீர் சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்.
பின் சிறிதளவு நெய்யை சூடாக்கி கோதுமை மாவுடன் சேர்த்து நன்கு பிசைந்து கொள்ளவும். பிசைந்த மாவை 20 நிமிடங்கள் மூடி வைத்து விடவும்.
அதன்பிறகு பிசைந்து வைத்துள்ள மாவை சின்ன சின்ன உருண்டைகளாக உருட்டி பராத்தாவா தேய்த்து தோசைக் கல்லில் போட்டு சுட்டு எடுக்கவும். அவ்வளவுதான் சுவையான பாசிப்பருப்பு பராத்தா தயார்.






