- Advertisement -
முடக்கத்தான் கீரை எலும்புகளுக்கு மிகவும் உகந்தது. எலும்புகளுக்கு சக்தி அளிக்கும் இந்த முடக்கத்தான் கீரையில் சட்னி செய்து பரிமாறினால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடுவர்.
-விளம்பரம்-
இதையும் படியுங்கள் : சுவையான பூண்டு தேங்காய் சட்னி செய்வது எப்படி ?
- Advertisement -
நாம் வீட்டில் அரைக்கும் சட்னியை விட முற்றிலும் வித்தியாசமான சுவையில் இருக்கும். இந்த சமையல் குறிப்பு பதிவில் அப்படி ஒரு சுவையான சட்னி எப்படிஅரைப்பது என்பதை பற்றி தான் தெரிந்து கொள்ளப் போகிறோம்
முடக்கத்தான் கீரை சட்னி | Mudakathan Keerai Chutney Recipe in Tamil
முடக்கத்தான் கீரை எலும்புகளுக்கு மிகவும் உகந்தது. எலும்புகளுக்கு சக்தி அளிக்கும் இந்த முடக்கத்தான் கீரையில் சட்னி செய்து பரிமாறினால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடுவர். நாம் வீட்டில் அரைக்கும் சட்னியை விட முற்றிலும் வித்தியாசமான சுவையில் இருக்கும். இந்த சமையல் குறிப்பு பதிவில் அப்படி ஒரு சுவையான சட்னி எப்படிஅரைப்பது என்பதை பற்றி தான் தெரிந்து கொள்ளப் போகிறோம்
Yield: 4 People
Calories: 300kcal
Equipment
- 1 மிக்ஸி
- 1 கடாய்
- 1 பவுள்
தேவையான பொருட்கள்
- 1 கட்டு மூடக்கத்தான் கீரை
- 1 கப் நறுக்கிய வெங்காயம்
- 1 பச்சை மிளகாய்
- 2 Tbsp எண்ணெய்
- 1/4 Tsp மஞ்சள் தூள்
- 1 Tsp மிளகாய் தூள்
- 1/2 Tsp தனியா தூள்
- 1 Tsp எலுமிச்சை சாறு
- உப்பு தேவையான அளவு
செய்முறை
- முதலில் வெங்காயம் மற்றும் பச்சை மிளகாயை நறுக்கி பின் ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்து விழுதாக அரைத்து கொள்ளவும்.
- ஏதன் பின் முடக்கத்தான் கீரையை சுத்தம் இதையும் ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்து அதனுடன் சிறிது தண்ணீர் சேர்த்து விழுதாக அரைக்கவும்.
- பின் வாணலியை அடுப்பில் வைத்து தேவையான அளவு எண்ணெய் ஊற்றி, எண்ணெய் காய்ந்ததும் அதில் நாம் அரைத்து வைத்த விழுதுகளை ஒன்றாக கலந்து பச்சை வாசனை போகும் வரை நன்றாக வதக்கவும்.
- இந்த கலவை நன்கு வதங்கி பச்சை வாசனை போன பின் உப்பு, மஞ்சள் தூள், மிளகாய் தூள், தனியா தூள் சேர்த்து வதக்கி விடவும்.
- பின்பு சட்னி கெட்டியான பதத்திற்ககு வந்ததும் எலுமிச்சை சாறு ஊற்றி கடாயை இறக்கவும். அவ்வளவு தான் சுவையான முடக்கத்தான் கீரை சட்னி தயார்.
Nutrition
Serving: 700Gram | Calories: 300kcal | Carbohydrates: 10g | Protein: 12g | Saturated Fat: 0.1g | Sodium: 32mg | Potassium: 313mg | Sugar: 0.5g | Iron: 5mg