பொருளாதாரத்தில் உயர முருகனுக்கு ஏற்ற வேண்டிய விளக்கு!!

- Advertisement -

பொதுவாக ஒருவர் வாழ்க்கையில் பொருளாதாரத்தில் முன்னேற வேண்டும் என்றால் ஜாதகத்தை பார்க்க வேண்டும். அதை பார்த்து கணிக்க வேண்டும் என்று சிலர் சொல்வார்கள் ஆனால் அனைத்தையும் சாதகத்தை பார்த்து மட்டுமே நம்மால் முடிவு செய்துவிட முடியாது. ஜாதகத்தை பார்த்து அதற்கு ஏற்ற பரிகாரங்களை செய்தால் மட்டும் வாழ்க்கையில் பொருளாதாரத்தில் முன்னேறி விட முடியாது. ஒரு சிலர் ஜாதகத்தை நம்பாமல் ஏதாவது வழிபாடு உள்ளதா என்று தேடிக் கொண்டே இருப்பார்கள் அப்படி தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு ஒரு எளிமையான முருகன் வழிபாடு உள்ளது. இந்த முருகன் வழிபாட்டை மேற்கொண்டால் பொருளாதாரத்தில் சீக்கிரமாகவே உயரமுடியும். அதனைப் பற்றி இந்த ஆன்மீகம் குறித்த பதவில் பார்க்கலாம்.

-விளம்பரம்-

முருகனுக்கு ஏற்ற வேண்டிய விளக்கு

முருகனுக்கு ஏற்ற வேண்டிய இந்த விளக்கை கோவிலுக்கு சென்று தான் ஏற்ற வேண்டும். காலை 6:00 மணிக்கு முன்பாக அல்லது ஆறு மணிக்கு பின் கோவிலுக்கு சென்று முருகன் கோவிலில் இரண்டு அகல்விளக்கு நெய் தீபம் ஏற்றி வைத்துவிட்டு ஒன்றரை மணி நேரம் கோவிலிலே அமர்ந்து உங்களுடைய அனைத்து வேண்டுதல்களையும் முருகப்பெருமானிடம் வைக்க வேண்டும். சுத்தமான நெய் வாங்கி தீபம் ஏற்ற வேண்டும். கோவில் நீங்கள் இருக்கும் ஒன்றரை மணி நேரமும் நெய் தீபம் கண்டிப்பாக எரிய வேண்டும்.

- Advertisement -

தீபம் ஏற்ற வேண்டிய நாட்கள்

முருகனுக்கு உகந்த சஷ்டி கிருத்திகை செவ்வாய்க்கிழமை என இந்த நாள் வேண்டுமானாலும் விளக்கு ஏற்றலாம். இல்லையென்றால் தினமும் கூட முருகப்பெருமானை நினைத்து இந்த விளக்கை ஏற்றலாம். அருகிலுள்ள எந்த முருகப் பெருமானுடைய கோவிலுக்கு வேண்டுமானாலும் சென்று இந்த நெய் தீபத்தை ஏற்றலாம். கோவிலில் அமர்ந்திருக்கும் ஒன்றரை மணி நேரமும் முருகப்பெருமானிடம் வேண்டுதலை வைத்துவிட்டு “ஓம் சரவணபவ” என்ற மந்திரத்தை உச்சரிக்க வேண்டும். இந்த தீபத்தை அடிக்கடி ஏற்றிக் கொண்டே இருக்க வேண்டும். என்றாவது ஒருநாள் கோவிலுக்கு சென்று விளக்கு ஏற்றிவிட்டு பொருளாதார உயர வில்லை என்று நினைக்கக் கூடாது. நம்பிக்கை உள்ளவர்கள் மனதார பொருளாதாரம் உயர இந்த வழிபாட்டை செய்து பாருங்கள்.

இதனையும் படியுங்கள் : கேட்ட வரம் முருகப்பெருமானை நினைத்து 48 நாட்கள் விரதம் இருந்து வழிபட்டுக் கொண்டால் பிரச்சனைகள் அனைத்தும் சரியாகிவிடும்!