- Prep
- 10 min
- Cook
- 10 min
- Total
- 20 min
- Serves
- 4
- Cuisine
- Indian, TAMIL
- Course
- Side Dish
உங்கள் வீட்டில் சப்பாத்தியை அடிக்கடி செய்வீர்களா? அந்த சப்பாத்திக்கு சைடு டிஷ்ஷையும் அதிகம் செய்வீர்களா? எப்போது ஒரே மாதிரியான சைடு டிஷ் செய்து அலுத்து விட்டதா? அப்படியானால் அடுத்த முறை சப்பாத்திக்கு முட்டை சைடு டிஷ் செய்வதாக இருந்தால், வித்தியாசமான இந்த முட்டை அவியல் செய்து பாருங்கள். பொதுவாக முட்டை உடலுக்குத் தேவையான ஓர் சீரான உணவு என்று அழைக்கப்படுகிறது. முட்டை ஒரு ஆரோக்கியமான உணவு பொருள்.
உடலுக்குத் தேவையான புரோட்டீன், கால்சியம் உள்ளிட்ட சத்துக்களை வழங்க முட்டை உதவுகிறது. அதனால் தான் அவற்றை தினமும் சாப்பிட மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர். இது நமது அன்றாட தேவைகளை பூர்த்தி செய்யும் அளவுக்கு ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளது. ஆனால் சில சமயம் குழந்தைகள் முட்டையை அப்படியே வேகவைத்து கொடுத்தால் சாப்பிட மாட்டார்கள். அவர்களுக்கு சற்று வித்தியாசமாக ஏதாவது செய்து கொடுத்தால் தான் சாப்பிடுவார்கள்.
அந்த சமயத்தில் நாம் சற்று வித்தியாசமாக இந்த முட்டை அவியல் செய்து கொடுக்கலாம். இந்த முட்டை அவியல் சப்பாத்தி, பூரி போன்றவற்றுடன் சேர்த்து சாப்பிட அருமையாக இருக்கும். அதுமட்டுமல்லாமல் தயிர் சாதம், புளி சாதம், தக்காளி சாதம், தயிர் சாதம், வெஜிடபிள் பிரியாணி, ரசம் சாதம், பருப்பு சாதம் ஆகியவற்றிற்கும் சைட் டிஷ்ஷா வச்சு சாப்பிடலாம் அவ்வளவு சூப்பரா இருக்கும். இப்போது சுவையான முட்டை அவியல் எப்படி செய்வதென்று பார்ப்போம்.
இதனையும் படியுங்கள் : புதினா முட்டை வறுவல் இந்த மாதிரி ஒரு தடவை செஞ்சு பாருங்க செம்ம டேஸ்ட்டா இருக்கும்!!
Ingredients
Method
முதலில் அரைக்க கொடுத்துள்ள பொருட்களை மிக்ஸியில் சேர்த்து நன்கு அரைத்து எடுத்துக் கொள்ளவும்.
பின் ஒரு கடாயை அடுப்பில் வைத்து உருளைக்கிழங்கை நறுக்கி சேர்த்து சிறிதளவு தண்ணீர் விட்டு வேக விடவும்.
உருளைக்கிழங்கு சிறிது வெந்ததும் நறுக்கிய முருங்கைக்காய், உப்பு மற்றும் நாம் அரைத்து வைத்துள்ள மசாலாவை சேர்த்து சிறிதளவு தண்ணீர் விட்டு மூடி வைத்து வேக விடவும்.
பின் வேகவைத்த முட்டையை நான்காக நறுக்கி வெள்ளை கருவை மட்டும் சேர்த்து நன்கு கலந்து தண்ணீர் வற்றி வந்ததும் இறக்கவும்.
பின் ஒரு தாளிப்பு கரண்டியை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு உளுத்தம்பருப்பு, கறிவேப்பிலை சேர்த்து முட்டையில் சேர்த்து கலந்து விடவும். அவ்வளவுதான் சுவையான முட்டை அவியல் தயார்.






