- Prep
- 10 min
- Cook
- 15 min
- Total
- 25 min
- Serves
- 4
- Cuisine
- Indian
- Course
- dinner, LUNCH
மட்டனை பொருத்தவரைக்கும் மட்டன் குழம்பு மட்டன் சுக்கா மட்டன் கிரேவி மட்டன் ரோஸ்ட் அப்படின்னு எது செஞ்சாலும் டேஸ்ட் அவ்வளவு அட்டகாசமா இருக்கும். என்னதான் நான் வெஜ்ல நிறைய இருந்தாலும் மட்டன் சாப்பிடுவது உடம்புக்கு ரொம்ப நல்லது. மட்டன் குழம்பு வச்சு அது கூட சாதம் சப்பாத்தி பூரி இட்லினு எதை சாப்பிட்டாலும் டேஸ்ட் பயங்கரமா இருக்கும் சாப்பிட சாப்பிட சாப்பிட்டுக்கிட்டே இருக்கணும் போல தான் தோணும். அந்த வகையில உங்களுக்கு நெய் ரொம்ப பிடிக்கும் மட்டனும் ரொம்ப பிடிக்கும் அப்படினா மறக்காம உங்க வீட்ல இப்ப சொல்ற மாதிரி இந்த மட்டன் நெய் ரோஸ்ட் செஞ்சு சாப்பிட்டு பாருங்க.
இந்த மட்டன் நீ ரோஸ்டில் நம்ம முந்திரிப்பருப்பு சேர்த்து செய்றதால இதோட டேஸ்ட் மட்டன் குழம்பு விட பல மடங்கு சுவையா இருக்கும். அவ்ளோ டேஸ்டான இந்த மட்டன் நெய் ரோஸ்ட்டை சப்பாத்தி பூரி இட்லி தோசை சாதம் அப்படின்னு எல்லாத்துக்கும் ஆயிடுச்சா வச்சு சாப்பிடலாம் இந்த மட்டன் நெய் ரோஸ்ட் எடுத்து கொஞ்சம் போட்டு பிசைஞ்சு சாப்பிட்டோம்னா வேற எதுவுமே தேவை இல்லை இரண்டு தட்டு சாப்பாடு கூட சாப்பிடலாம் இதை அப்படியே மீதம் இருந்தா கூட அடுத்த நாள் சூடு பண்ணி இட்லி தோசைக்கு சைடு டிஷ்ஷா வச்சு சாப்பிடலாம் அவ்வளவு சூப்பரா இருக்கும் இப்ப வாங்க இந்த சூப்பரான மட்டன் நெய் ரோஸ்ட் எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
இதனையும் படியுங்கள் : அட்டகாசமான மட்டன் பால்ஸ் இப்படி செய்து பாருங்கள் மிகவும் ருசியாக இருக்கும்!!
Ingredients
Method
ஒரு குக்கரில் கழுவிய மட்டனை சேர்த்து அதனுடன் தேவையான அளவு நெய் ஊற்றி உப்பு இரண்டு கப் தண்ணீர் சேர்த்து மூன்று விசில் விட்டு எடுத்துக் கொள்ளவும்.
ஒரு கடாயில் மல்லி விதைகள் சீரகம் சோம்பு, மிளகு, காய்ந்த மிளகாய் பட்டை கிராம்பு, ஏலக்காய் அனைத்தையும் பொன்னிறமாக வறுத்து மிக்ஸி ஜாரில் சேர்த்து அதனுடன் சின்ன வெங்காயம் பூண்டு இஞ்சி அனைத்தையும் சேர்த்து அரைத்துக் கொள்ளவும்.
ஒரு கடாயில் தேவையான அளவு நெய் சேர்த்து வேக வைத்துள்ள மட்டனை சேர்த்து அரைத்த விழுது தேவையான அளவு உப்பு சேர்த்து சிறிதளவு மட்டன் வேக வைத்த தண்ணீர் ஊற்றி சுருள சுருள வதக்கவும்.
ஒரு கடாயில் சிறிதளவு நெய் சேர்த்து முந்திரி பருப்பை வறுத்து நெய்யுடன் சேர்த்து முந்திரி பருப்பை வதக்கிய மட்டனில் சேர்த்து கெட்டியான பிறகு கருவேப்பிலை சேர்த்து இறக்கினால் சுவையான மட்டன் நெய் ரோஸ்ட் தயார்.






