ருசியான மட்டன் குழம்பு சாப்பிட மணமணக்கும் மட்டன் மசாலா பொடி இப்படி செய்து பாருங்க!

- Advertisement -

நாம் எந்தவித சமையல் செய்தாலும் அதில் நாம் சேர்க்கும் மசாலா பொடிகள் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. ஏனனென்னில் நாம் சேர்க்கும் அனைத்து மசாலா பொருட்கள் தான் உணவுகளின் நிறம், சுவை மற்றும் மணத்தை தருகிறது. அந்த வகையில் அசைவ உணவுகளை நாம் அனைவரும் மிகவும் விரும்பும் படியான உணவு. ஏனென்றால் அதில் சேர்க்கப்படும் மசாலா தான் அதன் சுவைக்கும் மனத்திற்கும் காரணம் ஆகையால்

-விளம்பரம்-

இதையும் படியுங்கள் : மணமணக்கும் பிரியாணி மசாலா பொடி செய்வது எப்படி ?

- Advertisement -

நீங்கள் அசைவ உணவு வகைகள் செய்ய விரும்பினால் கடைகளில் விற்கப்படும் ரெடிமேட் செய்ய பொருட்களை வாங்குவதற்கு பதிலாக. நீங்கள் வீட்டிலேயே இந்த மட்டன் மசாலா பொருட்களை தயார் செய்து கொள்ளலாம். அதனால் இன்று எப்படி மட்டன் மசாலா பொடி தயார் செய்வது, தேவையான பொருட்கள், செய்முறைகள் என அனைத்தையும் இந்த சமையல் குறித்த தொகுப்பில் நாம் காணலாம் வாருங்கள்.

Print
No ratings yet

மட்டன் மசாலா | Mutton Masala Recipe In Tamil

கடைகளில் மசாலா பொடிகளை வாங்கி மட்டன் குழம்பு வைப்பதோடு வீட்டிலே சுலபமாக மட்டன் மசாலா பொடி இப்படி ஒரு முறை அரைத்து குழம்பு வைத்து பாருங்க அட்டகாசமான சுவையில் இருக்கும் நல்ல வாசனையாகவும் இருக்கும். நீங்களும் இப்படி ட்ரை பண்ணுங்க.
Prep Time8 minutes
Active Time10 minutes
Total Time19 minutes
Course: LUNCH, MASALA
Cuisine: Indian, TAMIL
Keyword: mutton masala, மசாலா பொடி
Yield: 4 people

தேவையான பொருட்கள்

தேவையான பொருட்கள்:

  • 100 கிராம் மிளகாய் வத்தல்
  • 100 கிராம் தனியா
  • 25 கிராம் சீரகம்
  • 25 கிராம் சோம்பு
  • 25 கிராம் பட்டை
  • 10 கிராம்பு
  • ½ கப் கறிவேப்பிலை

செய்முறை

செய்முறை:

  • முதலில் மிளகாய் வத்தலை வெயிலில் 4 மணி நேரம் காய வைக்கவும்.
  • அடுத்து ஒரு கடாயை அடுப்பில் வைத்து சூடானதும் அடுப்பை மிதமான சூட்டில் வைத்து தனியா, சீரகம், சோம்பு, பட்டை, கிராம்பு, கறிவேப்பிலை, எல்லாவற்றையும் லேசாக வறுத்து அதோடு காயவைத்த மிளகாய் வத்தலையும் சேர்த்து மிஷினில் கொடுத்து அரைக்கவும்.
  • அரைத்த மசாலா பொடியை ஒரு பேப்பரில் கொட்டி பரப்பி நன்கு ஆறவிடவும். ஆறியதும் காற்று படாத பாட்டிலில் எடுத்து வைக்கவும்.

Nutrition

Carbohydrates: 34.48g | Fat: 26.1g | Saturated Fat: -2g | Cholesterol: 1mg | Sodium: 120mg | Potassium: 19.22mg | Fiber: 8.7g | Calcium: 1055mg

LEAVE A REPLY

Recipe Rating




Please enter your comment!
Please enter your name here