- Prep
- 10 min
- Cook
- 15 min
- Total
- 25 min
- Serves
- 4
- Cuisine
- Indian
- Course
- dinner, LUNCH
வீட்ல மட்டன் எடுத்தா மட்டன் பிரியாணி மட்டன் குழம்பு மட்டன் சுக்கா மட்டன் தண்ணீர் குழம்பு அப்படின்னு செஞ்சு நிறைய பேருக்கு போர் அடிச்சி இருக்கும். மட்டன் வச்சு ஏதாவது டிஃபரண்டா செஞ்சு சாப்பிட்டா சூப்பரா இருக்குமே அப்படின்னு யோசிக்கிறீங்களா ?அப்போ டக்குனு போய் மட்டன் எடுத்துட்டு வந்து குக் வித் கோமாளி புகழ் பிரியங்காவோட இந்த சூப்பரான லக்னோ ஸ்டைல் மட்டன் நிஹாரி செஞ்சு பாருங்க.
இந்த மட்டன் நிஹாரிய நம்ம சாதத்துக்கு கூட போட்டு பிசைந்து சாப்பிடலாம். இட்லி, தோசை சப்பாத்தி பூரின்னு எல்லாத்துக்குமே சைடு டிஷ்ஷா வச்சு சாப்பிடலாம். வீட்ல ஏதாவது தேங்காய் பால் சாதம் புலாவ் அந்த மாதிரி மசாலாக்கள் இல்லாமல் செய்கிற ரெசிபிக்கு இந்த மட்டன் நிஹாரி வச்சு சைட் டிஷ்ஷா சாப்பிடலாம் டேஸ்ட் பயங்கரமா இருக்கும்.
இந்த லக்னோ ஸ்டைல் மட்டன் நிஹாரி நிறைய பேர் வீட்ல ட்ரை பண்ணி பார்த்திருக்க மாட்டீங்க கண்டிப்பா இந்த வாரம் மட்டன் எடுத்தா இந்த மட்டன் நிஹாரி செஞ்சு பாருங்க கண்டிப்பா உங்களுக்கு ரொம்ப ரொம்ப பிடிக்கும். இதோட வாசனையே பக்கத்து வீட்டுக்கும் சேர்த்து போகும். இந்த மட்டன் நிஹாரிக்கு நம்ம ஒரு நிஹாரி பொடி அரைக்க போறோம்.
அந்த பொடி பிரெஷா அரைக்கிறதால வாசனை செம சூப்பரா இருக்கும். இந்த மாதிரி வறுத்து அரைச்ச பொடிய வச்சு செய்யப் போற இந்த மட்டன் நிஹாரி சாப்பிடுவதற்கே அவ்வளவு ருசியா இருக்கும். நீங்களும் உங்க வீட்ல செஞ்சு குடும்பத்தோட உட்கார்ந்து சாப்பிட்டு பாருங்க இப்ப வாங்க இந்த சூப்பரான லக்னோ மட்டன் நிஹாரி எப்படி செய்றதுன்னு பார்க்கலாம்.
இதனையும் படியுங்கள் : அட்டகாசமான மட்டன் பால்ஸ் இப்படி செய்து பாருங்கள் மிகவும் ருசியாக இருக்கும்!!
Ingredients
Method
ஒரு சிறிய பாத்திரத்தில் தயிர் சேர்த்து அதனுடன் மிளகாய் தூள் மல்லித்தூள் சேர்த்து நன்றாக கலந்து வைக்கவும்.
மட்டன் நல்லியுடன் இஞ்சி பூண்டு விழுது உப்பு சேர்த்து அரை மணி நேரம் ஊற வைக்கவும்.
ஒரு கடாயில் 2 பட்டை 2 கிராம்பு 2 பிரியாணி இலை மிளகு சிறிதளவு அரை டீஸ்பூன் சோம்பு ரோஜா இதழ்கள் கல்பாசி 2 ஏலக்காய் அனைத்தையும் சேர்த்து நன்றாக வறுத்து ஆற வைத்து பொடியாக அரைத்துக் கொள்ளவும்.
ஒரு குக்கரில் கடுகு எண்ணெய் மற்றும் நெய் சேர்த்து காய்ந்ததும் மீதம் இருக்கும் பட்டை கிராம்பு சோம்பு ஏலக்காய் பிரியாணி இலை சேர்த்து தாளித்து அதனுடன் நறுக்கி பெரிய வெங்காயம் சேர்த்து நன்றாக கிளறவும்.
ஒரு சிறிய பாத்திரத்தில் பூண்டு பொடி சேர்த்து அதனுடன் தண்ணீர் சேர்த்து நன்றாக கலந்து அதனையும் சேர்த்துக் கொள்ளவும்.
ஊறவைத்த மட்டன் நல்லியை சேர்த்து அதனுடன் கலந்து வைத்துள்ள தயிர் சேர்த்து அரைத்து வைத்துள்ள பொடியையும் சேர்த்து நன்றாக கிளறி தேவையான அளவு உப்பு சேர்த்து மூன்று விசில் விட்டு இறக்கினால் சுவையான லக்னோ ஸ்டைல் மட்டன் நிஹாரி தயார்.






