மிதமான மழைக்கு இதமாக சாப்பிட சுட சுட ருசியான மட்டன் பக்கோடா இப்படி செய்து பாருங்க!!

- Advertisement -

கோடைகால மழை என்றாலே ஸ்பெஷல் தான், அந்நேரம் மாலை வேளையில் கொஞ்சம் க்ரிஸ்பியா ஒரு நொறுக்குத் தீனி வேணும் போல இருக்கா… என்ன செய்யலாம்னு யோசிக்கிறீங்களா….. ‘பக்கோடா’ சரியான சாய்ஸ்தான்! ஆனா ஸ்பெஷலா வேணும்….எத்தனையோ வகை பக்கோடா செய்திருப்போம். வித்தியாசமா மட்டன் பக்கோடா செய்து பாருங்களேன். அப்படியே வீட்டில் உள்ள அனைவர்க்கும் செய்து  குடுத்து அவங்க பாராட்டையும் அள்ளிக்கோங்க! வாங்க இதை எப்படி செய்வது என்று பார்க்கலாம்.

-விளம்பரம்-
Print
3 from 1 vote

மட்டன் பக்கோடா | Mutton Pakora Recipe In Tamil

கோடைகால மழைஎன்றாலே ஸ்பெஷல் தான், அந்நேரம் மாலை வேளையில்கொஞ்சம் க்ரிஸ்பியா ஒரு நொறுக்குத் தீனி வேணும் போல இருக்கா… என்ன செய்யலாம்னு யோசிக்கிறீங்களா….. 'பக்கோடா' சரியான சாய்ஸ்தான்! ஆனா ஸ்பெஷலா வேணும்….எத்தனையோ வகை பக்கோடா செய்திருப்போம். வித்தியாசமா மட்டன் பக்கோடா செய்து பாருங்களேன். அப்படியே வீட்டில் உள்ள அனைவர்க்கும் செய்து குடுத்துஅவங்க பாராட்டையும் அள்ளிக்கோங்க! வாங்க இதை எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
Course: snacks
Cuisine: tamilnadu
Keyword: Mutton Pakora
Yield: 4
Calories: 223kcal

Equipment

  • 1 கடாய்
  • 1 பவுள்

தேவையான பொருட்கள்

  • 10 துண்டுகள் மட்டன் சின்னது
  • 1/2 வெங்காயம்
  • 1/2 டீ ஸ்பூன் இஞ்சி, பூண்டு
  • 1 சிட்டிகை மஞ்சள்தூள்
  •  ரெடிமேட் பஜ்ஜி போண்டா மிக்ஸ் தேவையானஅளவு
  • உப்பு தேவையான அளவு
  • எண்ணெய் பொரிப்பதற்கு

செய்முறை

  • குக்கரில் சிறிதளவு எண்ணெய் ஊற்றி வெங்காயம் போட்டு தாளிக்கவும். பிறகு இஞ்சி, பூண்டு பேஸ்ட் சேர்த்து வதக்கி மட்டன், மஞ்சள்தூள், உப்பு சேர்த்து நன்கு வதக்கி, 1 டம்ளர் தண்ணீர் சேர்த்து 5 விசில் வரை வேக விடவும்.
  • கறி வெந்தவுடன் தண்ணீரை வடிகட்டி தனியே வைத்துக்கொள்ளவும். பிறகு மட்டன் கலவையில் பஜ்ஜி போண்டா மிக்ஸ் கொஞ்சம் சேர்த்து பிசறிக்கொள்ளவும். தேவையென்றால் மட்டன் வேகவைத்த தண்ணீரை சேர்த்துக்கொள்ளலாம்.
  • மட்டன் கலவை நன்கு கறியுடன் சேர்ந்து இருக்கவேண்டும். பொரிப்பதற்கு எண்ணெயை காயவைத்து பொரித்து எடுக்கவும். சுவையான மட்டன் பக்கோடா ரெடி.

Nutrition

Serving: 200g | Calories: 223kcal | Carbohydrates: 15g | Protein: 9.7g | Fat: 75g | Potassium: 188.7mg | Fiber: 0.9g | Calcium: 14mg | Iron: 1.6mg
- Advertisement -