- Prep
- 10 min
- Cook
- 15 min
- Total
- 25 min
- Serves
- 4
- Cuisine
- Indian, TAMIL
- Course
- LUNCH
நான் வெஜ் பொறுத்த அளவுக்கு ஒவ்வொருத்தவங்களுக்கும் ஒவ்வொரு மாதிரி சாப்பிடுவது ரொம்ப பிடிக்கும். நான் வெஜ்ல மட்டன் சிக்கன் மீன் இறால் அப்படின்னு நிறைய வெரைட்டிஸ் இருந்தாலும் நிறைய பேருக்கு ரொம்ப புடிச்சது சிக்கன் அதுக்கப்புறம் மட்டன். அந்த மட்டன் வச்சு மட்டன் தண்ணி குழம்பு மட்டன் பிரியாணி மட்டன் சுக்கா மட்டன் வறுவல் அப்படின்னு நிறைய செஞ்சுருப்போம் அந்த வகையில் இன்னைக்கு நம்ம மட்டன் வச்சு செய்யக்கூடிய ஒரு அசத்தலான மட்டன் மிளகு கறி செய்ய போறோம். இந்த மட்டன் மிளகு கறி சாப்பிடுவதற்கு அவ்வளவு ருசியா இருக்கும் ஒரு சிலருக்கு மட்டன் குழம்பு சிக்கன் குழம்பு எல்லாத்தையுமே கெட்டியா வச்சு சாப்பிட ரொம்ப பிடிக்கும் அந்த வகையில இந்த மட்டன் மிளகு கறி வைத்து சாப்பிட்டீங்கன்னா அவ்வளவு ருசியா இருக்கும்.
இது கொஞ்சம் கெட்டியா சாப்பிடுவதற்கு ரொம்ப ருசியா இருக்கும். மட்டன் எடுத்தா எப்பவுமே ஒரே மாதிரியா குழம்பு வைத்து சாப்பிடாம இந்த மாதிரி ஒரு தடவை மட்டன் வச்சு செய்யக்கூடிய மட்டன் மிளகு கறி செஞ்சி சாப்பிட்டு பாருங்க சாதத்தோடு போட்டு பிசைந்து சாப்பிடும் போது அவ்ளோ ருசியா இருக்கும் அது மட்டும் இல்லாம பூரி சப்பாத்தி இட்லி தோசை எல்லாத்துக்கும் சூப்பரான ஒரு சைடு டிஷ்ஷா இருக்கும். இந்த மட்டன் மிளகு கறிய ஒரே ஒரு தடவை ட்ரை பண்ணி பாருங்க அதுக்கப்புறம் அடிக்கடி நீங்க இந்த மட்டன் மிளகு கறி செய்வீங்க இப்ப வாங்க இந்த சுவையான மட்டன் மிளகு கறியை சிம்பிளா எப்படி செய்றதுன்னு பார்க்கலாம்.
இதனையும் படியுங்கள் : அட்டகாசமான மட்டன் பால்ஸ் இப்படி செய்து பாருங்கள் மிகவும் ருசியாக இருக்கும்!!
Ingredients
Method
ஒரு மிக்ஸி ஜாரில் தேங்காய் துருவல் சின்ன வெங்காயம் பூண்டு இஞ்சி சீரகம், மிளகு, மிளகாய் தூள் மல்லி தூள் மஞ்சள் தூள் அனைத்தையும் சேர்த்து விழுதாக அரைத்து எடுத்துக் கொள்ளவும்.
குக்கரில் கழுவிய மட்டனை சேர்த்து அரைத்த விழுதையும் சேர்த்து தேவையான அளவு உப்பு சேர்த்து மூன்று விசில் விட்டு எடுத்து பிறகு 10 நிமிடங்கள் நன்றாக வேக வைக்கவும்.
ஒரு கடாயில் எண்ணெய் சேர்த்து சோம்புத்தூள் ஒரு கொத்து கருவேப்பிலை சேர்த்து பொரிந்ததும் வேக வைத்துள்ள மட்டனை சேர்த்து நன்றாக கிளறி கொண்டே இருக்கவும்.
இறுதியாக கொத்தமல்லி இலைகள் தூவி இறக்கினால் சுவையான மட்டன் மிளகு கறி தயார்.






