- Prep
- 10 min
- Cook
- 15 min
- Total
- 25 min
- Serves
- 4
- Cuisine
- Indian
- Course
- LUNCH
நம்ம புலாவ் அப்படின்னாலே பச்சை பட்டாணி சேர்த்து தான் புலாவ் செஞ்சு சாப்பிட்டு இருப்போம். பொதுவா அசைவத்துல நம்ம புலாவ் செஞ்சு பெருசா சாப்பிட்டு இருக்க மாட்டோம். ஆனா அசைவத்திலும் புலாவ் செஞ்சு சாப்பிட்டா ரொம்ப சூப்பரா தான் இருக்கும். அந்த வகையில் இப்போ நம்ம ஒரு சூப்பர் டேஸ்டான மட்டன் புலாவ் தான் செய்யப் போறோம். இந்த மட்டன் புல்லாவுக்கு சைட் சிக்கன் கிரேவி இல்ல நான் முட்டை தொக்கு அந்த மாதிரி ஏதாவது வச்சு சாப்பிட்டா டேஸ்ட் ரொம்பவே அட்டகாசமா இருக்கும்.
நிறைய மசாலா போட்டு பிரியாணி சாப்பிட பிடிக்காதவங்க இந்த மாதிரி கம்மியான மசாலாக்கள் போட்டு அருமையான மட்டன் புலாவ் செஞ்சு சாப்பிட்டு பாருங்க கண்டிப்பாக உங்களுக்கு பிடிக்கும். பொதுவா பெரியவங்க எல்லாரும் காரசாரமா சாப்பிட யோசிப்பாங்க ஏனா அவங்களுக்கு வயசானதால டாக்டரே காரசாரமா சாப்பிடாதீங்க அப்படின்னு சொல்லி இருப்பாங்க அந்த மாதிரி நீங்க இருக்கீங்கனா கண்டிப்பா இந்த மாதிரி ஒரு தடவை மட்டன் புலாவ் செஞ்சு சாப்பிட்டு பாருங்க.
பிரியாணி மாதிரியும் இருக்கும் ஆனால் நிறைய மசாலாக்களும் இருக்காது. காரம் ரொம்ப கம்மியா இருக்குற இந்த மட்டன் புலாவ் சாப்பிடறதுக்கே அவ்ளோ ருசியா இருக்கும். நீங்க மட்டன் எடுத்தா எப்பவும் ஒரே மாதிரியா பிரியாணி இல்ல நான் மட்டன் கிரேவி செய்யாம ஒரே ஒரு தடவை இந்த மட்டன் புலாவ் செஞ்சு சாப்பிட்டு பாருங்க. இப்ப வாங்க இந்த சுவையான மட்டன் புலாவ் எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
இதனையும் படியுங்கள் : மட்டன் கிரேவி வீடே கம கமன்னு மணக்க திண்டுக்கல் ஸ்டைலில் இப்படி செய்து பாருங்கள்!!
Ingredients
Method
முதலில் மட்டனை ஒரு குக்கரில் சேர்த்து தேவையான அளவு உப்பு போட்டு ஐந்து விசில் விசில் எடுக்கவும்.
பிறகு ஒரு குக்கரில் எண்ணெய் மற்றும் நெய் சேர்த்து பட்டை ,கிராம்பு ,பிரியாணி இலை, சோம்பு,ஏலக்காய், முந்திரிப் பருப்பு அனைத்தையும் சேர்த்து தாளித்துக் கொள்ளவும்.
பிறகு நீளவாக்கில் நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து வதக்கிய பிறகு புதினா இலைகள் கொத்தமல்லி இலைகள் பச்சை மிளகாய் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போகும் வரை நன்றாக வதக்கவும்.
பிறகு வேக வைத்த மட்டனையும் சேர்த்து நன்றாக வதக்கவும்.
அனைத்தும் நன்றாக வதங்கிய பிறகு ஒரு கப் தேங்காய் பால் அரை கப் மட்டன் வேக வைத்த தண்ணீர் சேர்த்து தேங்காய் பால் கொதிப்பதற்கு முன்பு அரிசியை கழுவி சேர்த்து தேவையான அளவு உப்பு சேர்த்து ஒரு விசில் விட்டு இறக்கினால் சுவையான மட்டன் புலாவ் தயார்.






