அந்த காலத்துல வீட்டுல சிக்கன் மட்டன் எடுத்தா அதுல நிறைய பொடி வகைகள் எல்லாம் போட்டு சமைக்க மாட்டாங்க. இப்ப விக்கிற மாதிரி ரெடிமேட் பொடிகளும் அந்த காலத்தில் கிடையாது. அதனால பச்சை மிளகாய் சின்ன வெங்காயம் வச்சு மட்டுமே ஒரு சூப்பரான மட்டன் சிக்கன் உப்பு கறி செஞ்சிடுவாங்க. ஆனா இதை சாதத்தில் போட்டு பிசைஞ்சு சாப்பிடும் போது அவ்ளோ ருசியா இருக்கும். இதுக்கு பெருசா எந்த மசாலாக்களும் தேவைப்படாது. பச்சை மிளகாய் காரத்துக்கும் சின்ன வெங்காயம் ருசிக்கும் மட்டும் சேர்த்தால் போதும். மத்தபடி பெருசா எதுவும் சேர்க்கத் தேவையில்லை ஆனால் டேஸ்ட் அவ்வளவு ருசியா இருக்கும்.
சுட சுட சாதத்தோடு இந்த சுவையான உப்பு கறிய போட்டு சாப்பிடும்போது அவ்ளோ ருசியா இருக்கும். மட்டன் உப்பு கறியா இருந்தாலும் சிக்கன் உப்பு கறியா இருந்தாலும் இதே மாதிரி செய்முறைல தான் செய்யணும். பொதுவா இந்த உப்புக்கறி மதுரை பக்கம் மதுரை சுற்றியுள்ள கிராமங்கள்ல ரொம்ப ரொம்ப ஃபேமஸ் அப்படின்னு சொல்லலாம். இந்த ரெசிபி நல்லெண்ணெயில் செய்யும்போது அவ்ளோ வாசமா இருக்கும். உங்களுக்கு எந்த எண்ணெய் கிடைச்சாலும் செய்யலாம் ஆனா நல்லெண்ணெயில் செய்யும்போது இன்னும் கொஞ்சம் ருசி நல்லாவே இருக்கும்.
இதை சாதத்துக்கு மட்டுமில்லாம பழைய சாதம் இட்லி தோசை வச்சு சாப்பிடலாம் வெங்காயத்தை நல்லா மசிய வதக்கிடனும். சின்ன வெங்காயம் சேர்க்கும் போதே தான் சுவை அட்டகாசமா இருக்கும். சின்ன குழந்தைகளிலிருந்து பெரியவங்க வரைக்கும் எல்லாருக்குமே இந்த உப்புக்கறி ரொம்ப பிடிக்கும். இந்த வாரம் உங்க வீட்ல நான்வெஜ் எடுக்கும்போது கண்டிப்பா இந்த உப்புக்கறியை செஞ்சு பாருங்க.
கண்டிப்பாக வீட்டில் இருக்கக்கூடிய எல்லாருக்குமே ரொம்ப பிடிக்கும் வீட்டுக்கு விருந்தாளிகள் வந்தா கூட சட்டை ஏதாவது சமைக்கணும் அப்படின்னா இந்த ரெசிபியை செஞ்சு கொடுங்க சாப்பிட்டுட்டு கண்டிப்பா பாராட்டிட்டு போவாங்க. கூடவே கொஞ்சம் ரசம் வச்சுட்டீங்கன்னா போதும் கடைசியாக ஊற்றி சாப்பிடுவதற்கு ரொம்ப வசதியா இருக்கும். இப்ப வாங்க சுவையான மட்டன் உப்பு கறிய பாரம்பரியமான முறையில் ரொம்ப சிம்பிளா எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
மட்டன் உப்பு கறி | Mutton Uppu Curry Recipe In Tamil
Equipment
- 1 பவுள்
- 1 கடாய்
தேவையான பொருட்கள்
- 1/2 கி மட்டன்
- 100 கி சின்ன வெங்காயம்
- 1 டீஸ்பூன் கடுகு உளுத்தம்பருப்பு
- 1 கொத்து கறிவேப்பிலை
- 6 பச்சை மிளகாய்
- 1/4 டீஸ்பூன் மஞ்சள் தூள்
- உப்பு தேவையான அளவு
- எண்ணெய் தேவையான அளவு
- கொத்தமல்லி சிறிதளவு
செய்முறை
- மட்டனை நன்றாக கழுவி சுத்தம் செய்து எடுத்துக் கொள்ளவும்.
- ஒரு கடாயில் நல்லெண்ணெய் சேர்த்து கடுகு உளுந்தம் பருப்பு கருவேப்பிலை போட்டு தாளிக்கவும்.
- சின்ன வெங்காயத்தை சேர்த்து நன்றாக வதக்கிக் கொள்ளவும். பச்சை மிளகாயை கீறி சேர்த்து வதக்கவும்.
- பிறகு மட்டனை சேர்த்து மஞ்சள் தூள் உப்பு போட்டு எண்ணெயிலேயே சுருள சுருள வதக்க வேண்டும்.
- இறுதியாக கொத்தமல்லி இலைகள் தூவி இறக்கினால் சுவையான மட்டன் உப்பு கறி தயார்.
Nutrition
இதனையும் படியுங்கள் : காரசாரமான ருசியில் கிராமத்து மட்டன் பிரட்டல் இனி இப்படி ட்ரை பண்ணி பாருங்க! எவ்வளவு செய்தாலும் காலியாகி விடும்!