Home ஆன்மிகம் இந்த ஆண்டு நாக பஞ்சமி எப்போது? எந்த நேரத்தில் மற்றும் எப்படி வழிபட்டால் நாக தோஷம்...

இந்த ஆண்டு நாக பஞ்சமி எப்போது? எந்த நேரத்தில் மற்றும் எப்படி வழிபட்டால் நாக தோஷம் நீங்கும்!

இந்து மதத்தில் நாக பஞ்சமி புனித நாளாக கருதப்படுகிறது. ஆடி மாத வளர்பிறையில் வரும் சதுர்த்தியை நாக சதுர்த்தி என்றும், பஞ்சமி திதியை நாக பஞ்சமி என்றும், கருட பஞ்சமி என்றும் கொண்டாடுகிறோம். இயற்கையை வழிபடும் முறை எவ்வாறு மனிதர்களிடம் பிரபலமாக உள்ளதோ, அதே போல் விலங்குகளை வழிபடும் முறையும் உள்ளது. இவற்றுள் நாக வழிபாடு மிக முக்கியமானதாகும். அப்படி நாக வழிபாடு மிக முக்கியமான வழிபாடாக கருதப்படுகிறது. சாவன் மாதத்தின் சுக்ல பக்‌ஷத்தின் 5ஆம் நாளில் இந்த நாள் கொண்டாடப்படுகிறது. பாம்புகள் சிவனின் தலையில் இருக்கும் அதிர்ஷ்டத்தை கொண்டுள்ளது. பாம்புகளின் அரசன் என்று கருதப்படும் வாசுகி என்ற பாம்பு தான் சிவனின் கழுத்தில் அமர்ந்திருக்கும். சிவபெருமானுக்காக கடுமையான தவம் இருந்து இந்த அதிர்ஷ்டத்தை பெற்றுள்ளதாக புராணங்கள் சொல்கிறது. நாக பஞ்சமி அன்று நாக தேவதைகள், நாக ராஜாக்களை வணங்குவது வழக்கம். அதுவும் இந்த ஆண்டு வரும் நாக பஞ்சமி தினத்தில் சித்தியோகமும், ரவி யோகமும் உருவாகிறது. இதனால் இந்த நாள் கூடுதல் விசேஷமாகியுள்ளது. இந்த ஆண்டு வரும் நாக பஞ்சமியில் எப்படி வழிபட்டால் நாக் தோஷம் நீங்கும் என இந்த ஆன்மீகப் பதிவில் பார்க்கலாம்.

-விளம்பரம்-

நாக பஞ்சமி புராண கதை

பிரம்ம தேவரின் மகனான கஷ்யபருக்கு நான்கு மனைவிகள். அவர்களில், கத்ரி என்பவளிடத்தில் பிறந்தவர் நாகர். தாய் சொல்லைக் கேட்காததால், தீயில் விழுந்து இறக்கும்படி தாய் கத்ரி சாபம் கொடுத்தாள். அந்த சாபத்தினால், பல நாகங்கள் மன்னன் ஜனமேஜயன் நடத்திய சர்ப்ப யாகத்தின்போது அக்கினியில் வீழ்ந்து இறந்தன. அஸ்தீகர், ஜனமேஜயனது யாகத்தைத் தடுத்து, நாகர்களுக்குச் சாப நிவர்த்தி கொடுத்தார். அவ்வாறு நாகர்கள் சாப நிவர்த்தி பெற்ற நாள்தான் இந்த நாக பஞ்சமி தினம்.

நாக பஞ்சமி கொண்டுவதன் காரணம்

இந்து சமயத்தில் பாம்புக்கும், கருடருக்கும் முக்கிய பங்கு கொடுக்கப்படுகிறது. ஆடி மாதம் வளர்பிறை சதுர்த்தி நாக சதுர்த்தியாவும், வளர்பிறை பஞ்சமி நாக பஞ்சமியாகவும் கடைபிடிக்கப்படுகிறது. பாம்பென்றால் படையும் நடுங்கும் அதே போல பாம்பு கிரகங்களான ராகு கேது தோஷத்தினால் பலவித தடைகளும் ஏற்படுகின்றன. நாக பஞ்சமி நாளில் விரதமிருந்து நாக தெய்வத்தை வழிபட தோஷம் விலகி திருமணம் கைகூடும், கணவன் ஆயுள் அதிகரிக்கும், புத்திர பாக்கியம் கிடைக்கும், தடைபட்ட காரியம் தடையில்லாமல் நிறைவேறும். எதிர்பார்த்த வேலை கிடைக்கும் என்பது நம்பிக்கை.

நாக பஞ்சமி வழிபாட்டு முறை

இந்துக்களின் வழிபாட்டு முறைகளின் படி நாகங்கள் தெய்வங்களாக நினைத்து வழிபடக் கூடியவையாகும். நாகங்களை துன்புறுத்துவதும், கொல்லவதும் மிகப் பெரிய பாவமாகும். ஆனால் நாமோ, நம்முடைய முன்னோர்களால் தெரியாமல் நாகங்களுக்கு ஏதாவது துன்பம் ஏற்படுத்தி இருந்தால் நாக தோஷம், சாபம் ஏற்பட்டிருக்கும். அதனால் நாக பஞ்சமி அன்று நாக தேவதைகளை வழிபட்டால், நல்ல பலன்கள் கிடைப்பது மட்டுமல்லாமல், தோஷங்கள் நீங்கும் என்பது ஐதீகம். அதுமட்டுமின்றி இந்த நாளில் சித்தி யோகமும் ரவியோகமும் சேர்ந்தே வருவதால், இந்த ஆண்டு நாக பஞ்சமியானது கூடுதல் விசேஷமானது என்றே சொல்லலாம். எனவே இந்த ஆண்டு நாக பஞ்சமி கொண்டாட நினைப்பவர்கள் நாகபஞ்சமி நாளில் அதிகாலையில் எழுந்தவுடன் நீராடிவிட்டு, சுத்தமான ஆடை அணிந்து, அந்த நாள் முழுவதும் விரதம் இருந்து மாலையில் சிவலிங்கத்திற்கு நீரால் அர்ச்சனை செய்து வழிபட வேண்டும். பின் நாக கடவுளுக்கு பூஜை வைத்து, பழங்கள், ஊதுபத்தி, காய்ச்சாத பால் நெய்வேத்தியமாக படைத்து வழிபட வேண்டும். வீட்டின் அருகில் நாகத்திற்கு கோவில் உள்ளவர்கள் காலையிலேயே அங்கு சென்று மஞ்சள், குங்குமம், முட்டை மற்றும் பால் வைத்து வழிபட்டு வரலாம். நாக பஞ்சமி மட்டுமின்றி அனைத்து நாட்களும் காலை, மாலை இருவேளையும் மூன்று முறை சொல்லி வந்தால் நாக தோஷங்கள் விலகும்.

நாக பஞ்சமி வழிபாட்டு பலன்கள்

இந்த நாக பஞ்சமி விரதத்தால் புத்திர பாக்கியம் உண்டாகும். புத்திர பாக்கியம் உள்ளவர்கள் இந்த விரதத்தைக் கடைப்பிடிப்பதால், புத்திரர்கள் தீர்க்க ஆயுளுடன் வாழ்வார்கள். விரதம் கடைப்பிடிக்கும் போது, நமது சக்திக்குத் தகுந்தபடி தங்கத்திலோ, அல்லது பிற உலோகத்திலோ பாம்பின் உருவம் செய்து அதற்கு பூஜை செய்யலாம். இப்பூஜையினால் தங்கள் குழந்தைகளுக்கும், கணவருக்கும், சகோதரர்களுக்கும் நீண்ட ஆயுள் கிடைக்கும் என்பது பெண்களின் நம்பிக்கை.

-விளம்பரம்-

நாக பஞ்சமி 2024 மற்றும் வழிபட்டு நேரம்

வழக்கமாக ஆவணி மாதத்தில் வரும் நாக பஞ்சமி, இந்த ஆண்டு ஆடி மாதத்திலேயே வருகிறது. அதுவும் ஆடி நான்காவது வெள்ளிக்கிழமையான ஆகஸ்ட் 09ம் தேதி வருவதால் இது கூடுதல் சிறப்பு பெறுகிறது. இந்த ஆண்டு ஆகஸ்ட் 08ம் தேதி இரவு 11.48 மணிக்கு துவங்கி, ஆகஸ்ட் 10ம் தேதி அதிகாலை 01.44 வரை பஞ்சமி திதி உள்ளது. இந்த ஆண்டு நாக வழிபாடு செய்வதற்கு ஏற்ற நேரமாக இரண்டரை மணி 40 நிமிடங்கள் மட்டுமே உள்ளதால் ஆகஸ்ட் 09ம் தேதி காலை 05.47 மணி துவங்கி, காலை 08.27 மணி வரை மட்டுமே நாக வழிபாட்டினை செய்ய வேண்டும் என்கிறார்கள். அதனால் இந்த நேரத்தில் அம்மனை வழிபடும் போது ஆடி வெள்ளியில் அம்மனுக்கு குடையாக இருக்கும் நாகத்தையும் வழிபடுவதால் நாகர்களின் அருள் நமக்கு கிடைக்கும்.

இதனையும் படியுங்கள் : ஆடிப்பெருக்கு 2024 எப்போது ? இந்த நாளில் என்ன செய்யலாம்?