- Prep
- 10 min
- Cook
- 10 min
- Total
- 20 min
- Serves
- 4
- Cuisine
- Indian, TAMIL
- Course
- Side Dish
நாகர்கோவில்ல மீன் தான் ரொம்ப ரொம்ப ஃபேமஸ் ஆக இருக்கும். மீன் குழம்பு இல்லாத நாளே இருக்காதுன்னு சொல்லலாம் அந்த அளவுக்கு. நாகர்கோவில் கன்னியாகுமரி போன்ற இடங்களில் மீன் ரொம்ப ரொம்ப பேமஸ் இருக்கும் அவங்க ஊர் ஸ்பெஷலா ஒரு பொறித்த மீன் செய்வாங்க. அந்த பொரிச்ச மீனுக்கு ஸ்பெஷலா ஒரு மசாலா அரைச்சு வைப்பாங்க அது ரொம்ப ரொம்ப சூப்பரா இருக்கும். பொதுவா இந்த பொறித்த மீன் ரெசிபிக்கு சால மீன் தான் பயன்படுத்தனும்.
மசாலா அரைச்சு அதை மீனில் தடவுவதற்கு முன்னாடி மீன்ல நல்லா கோடு போட்டு உள்ள மசாலா நல்ல தடவி ஊற வைத்துவிட்டு அதுக்கு அப்புறம் தேங்காய் எண்ணெய் ஊத்தி பொரிச்சு எடுத்தா மணக்க மணக்க சூப்பரான நாகர்கோவில் ஸ்பெஷல் மீன் ரெடியாகிவிடும். இந்த மீன் ரெசிபிக்கு கண்டிப்பா எல்லாரும் அடிமையாகிடுவாங்க அந்த அளவுக்கு ரொம்ப ரொம்ப ருசியா இருக்கும். மசாலா பிரியாம மீன் ஓட ஒட்டி நல்ல மொறு மொறுன்னு சாப்பிடுறதுக்கு அவ்வளவு ருசியா இருக்கும். சால மீன் குழம்பு வச்சு அது கூட இந்த பொரிச்ச நாகர்கோவில் ஸ்பெஷல் மீன் வச்சு சாப்பிட்டீங்கன்னா சொர்க்கமா இருக்கும்.
ஒரு தடவை ட்ரை பண்ணி பாருங்க அதுக்கப்புறம் நீங்களே விடாம பல தடவை செய்வீங்க. அந்த அளவுக்கு ருசியான இந்த ரெசிபிய கண்டிப்பா வீட்ல இருக்க கூடிய எல்லாருக்கும் செஞ்சு கொடுத்து அசத்துங்க. இந்த நாகர்கோவில் ஸ்பெஷல் பொரிச்ச மீனுக்கு ரசம் சாதம் கூட சூப்பராவே இருக்கும் ஒரு சிலர் ரசம் சாதத்துக்கு பொரிச்ச மீன் வச்சு சாப்பிடுவாங்க. அந்த மாதிரி உங்களுக்கும் பழக்கம் இருந்தா இந்த நாகர்கோவில் ஸ்பெஷல் இந்த பொரிச்ச சால மீன் வச்சு சாப்பிட்டு பாருங்க. இப்ப வாங்க இந்த ருசியான சால மீன் ரெசிப்பி எப்படி செய்றதுன்னு பார்க்கலாம்.
இதனையும் படியுங்கள் : கனவா மீன் மசாலா இந்த மாதிரி ஒரு தடவை செஞ்சு பாருங்க!!
Ingredients
Method
மீனை கழுவி சுத்தம் செய்து ஆங்காங்கே கோடு போட்டு வைத்துக் கொள்ளவும்.
ஒரு மிக்ஸி ஜாரில் சின்ன வெங்காயம் பூண்டு, இஞ்சி, சீரகம், சோம்பு, மிளகு, மல்லி விதைகள் மஞ்சள்தூள் காஷ்மீரி மிளகாய் தூள் ஊற வைத்த புளி உப்பு அனைத்தையும் சேர்த்து அரைத்து எடுக்கவும்.
அரைத்ததை மீனின் மேல் தடவி நன்றாக ஊற வைக்கவும்.
பிறகு தோசை சட்டியில் தேங்காய் எண்ணெய் சேர்த்து ஊற வைத்துள்ள மீனை சேர்த்து அதன் மேல் கருவேப்பிலை சேர்த்து நன்றாக பொரித்து எடுத்தால் சுவையான நாகர்கோவில் ஸ்பெஷல் பொறித்த மீன் தயார்.






