- Prep
- 30 min
- Cook
- 20 min
- Total
- 50 min
- Serves
- 4
- Cuisine
- Indian, TAMIL
- Course
- Breakfast, LUNCH
இப்பொழுதெலாம் அதிகம் ஆன்லைனில் தான் ஆர்டர் செய்து சாப்பிடும் உணவுப்பட்டியலில் முதலிடம் பிடித்திருக்கும் உணவு பிரியாணி, பணிடிகை கால உணவாக இருந்த பிரியாணி இப்பொழுதெலாம் அன்றாட உணவுகளில் ஒன்றாகிவிட்டது. ஏனென்றால் பிரியாணி செய்வது கடினமாக இருக்கும் என்று நினைப்பவர்கள் அதிகம். அதனால் தான் பிரியாணி மேல் ஆசை வந்து விட்டால் சட்டுனு ஆர்டர் செய்து சாப்பிடுகிறார்கள். அதை தவிர்த்து வீட்டிலே சுலபமாக நாட்டுக்கோழி பிரியாணி செய்து விடலாம்.
அந்த வகையில் அசைவ பிரியர்களுக்கு கோழிக்கறி பிடித்தமான ஒன்று, அதுவும் நாட்டுக்கோழி என்றால் பலருக்கு மிகவும் பிடிக்கும். நாட்டுக்கோழி சாப்பிடுவதால் உடலுக்கு பல நன்மைகள் கிடைக்கிறது.
அதனால் இன்று நாம் வீட்டிலேயே நாட்டுக்கோழியில் சுவையான பிரியாணி எப்படி செய்வது என்று தான் பார்க்கப்போகிறோம்.கீழே கொடுக்கப்பட்டுள்ள செய்முறை விளக்கங்களை படித்து பார்த்து நீங்களும் இப்படி ட்ரை பண்ணி பாருங்க வீடே கமகமக்கும். எல்லோரும் விரும்பி சாப்பிடுவாங்க.
Ingredients
Method
முதலில் நாட்டுகோழிக்கறியை தண்ணீரில் கழுவி சுத்தம் செய்துகொள்ளவும்.
அரிசியை 20 நிமிடம் ஊறவைக்கவேண்டும்.
பிறகு தக்காளி, வெங்காயம், பச்சைமிளகாய் போன்றவற்றை நீல வாக்கில் அறிந்துகொள்ளவும்.
அடுத்து ஒரு பெரிய பாத்திரத்தை அடுப்பில் வைத்து தேவையான அளவு எண்ணெய், டால்டா, சேர்த்து பட்டை, ஏலக்காய், கிராம்பு, முந்திரி பருப்பு, சேர்த்து வதக்கவும்.
பிறகு அதில் நறுக்கிய வெங்காயம், பச்சைமிளகாய் சேர்த்து வதக்கவும்.
பிறகு அதில் இஞ்சி, பூண்டு பேஸ்ட், நறுக்கிய தக்காளி சேர்த்து வதக்கவும். அடுத்து தயிர், புதினா, கொத்தமல்லி சேர்த்து வதக்கி எலுமிச்சை சாறு சேர்த்து நன்கு கிளறவும். பின் சுத்தம் செய்த நாட்டுகோழிக்கறி துண்டுகளை சேர்த்து, 4 கப் தண்ணீர் ஊற்றி தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு கிளறி மூடி வைக்கவும்.
ஒரு கொதி வந்ததும் ஊறவைத்த அரிசியை தண்ணீர் வடித்து சேர்க்கவும். பாதி அளவு வெந்ததும் நெய் சேர்த்து கிளறி 20 நிமிடம் தம்மில் வைத்து இறக்கவும்.
இப்பொழுது சுவையான நாட்டுக்கோழி சிக்கன் பிரியாணி தயார்.






