இந்த மழைக்காலத்துக்கு எல்லாருக்குமே சளி இருமல் காய்ச்சல் பரவிக்கிட்டு இருக்கு. அந்த மாதிரி இருக்கிறவங்க மருத்துவமனைக்கு போய் கண்ட கண்ட மாத்திரைகளை வாங்கி சாப்பிடுவதற்கு பதிலா வீட்டிலேயே கை வைத்தியம் செஞ்சா கண்டிப்பா சரியாகிவிடும் அந்த வகையில் நாட்டு கோழி எடுத்து நல்லா சுட சுட நாட்டுக்கோழி மிளகு வறுவல் செஞ்சு ரசம் சாதத்துக்கு கூட வச்சு சாப்பிட்டு பாருங்க ரெண்டு நாள்ல சளி காய்ச்சல் எல்லாம் பறந்து போயிடும். அதுவும் சுட சுட சாப்பிடும்போது கண்டிப்பா உங்க தொண்டைக்கு இதமா இருக்கும்.
கண்டிப்பா இன்னைக்கு நாட்டுக்கோழி எடுத்து இத செஞ்சு பாருங்க. சளி காய்ச்சல் இருக்கிறவங்க மட்டும் இல்லாம எல்லாருமே இந்த சுவையான சிம்பிளான நாட்டுக்கோழி மிளகு வறுவல முயற்சி செஞ்சு பாருங்க கண்டிப்பாக சூப்பரா இருக்கும். பிராய்லர் கோழியை விட நாட்டுக்கோழி சேர்த்துக்கறது ரொம்ப ரொம்ப நல்லது அந்த வகையில் இந்த சூப்பரான ரெசிபியை கண்டிப்பா வீட்ல ட்ரை பண்ணி பாருங்க. வீட்டுக்கு யாராவது இருந்தார்கள் வந்தாலும் அவங்களுக்கு பிராய்லர் கோழி போடாமல் சூப்பரான நாட்டுக்கோழி மிளகு வறுவல் செஞ்சு கொடுங்க.
சுடச்சுட சாதத்துல போட்டும் பிசைஞ்சு சாப்பிடலாம். ரசம் சாதம் தயிர் சாதம் வெரைட்டி சாதம்ன்னு எல்லாத்துக்குமே சூப்பரான காமினேஷனா இருக்கும். நாட்டுக்கோழி வச்சு நாட்டுக்கோழி தண்ணி குழம்பு நாட்டுக்கோழி வறுவல் அப்படின்னு பல ரெசிபீஸ் செஞ்சி இருப்பீங்க அந்த வகையில இந்த நாட்டுக்கோழியும் மிளகு வறுவலையும் செஞ்சு பாருங்க.
பிராய்லர் கோழியை சாப்பிட்டு நாட்டுக்கோழி ஒரு சிலருக்கு பிடிக்காது அந்த மாதிரி நாட்டுக்கோழி பிடிக்காதவங்களும் கூட இந்த ரெசிபி ரொம்ப ரொம்ப விரும்பி சாப்பிடுவாங்க. கண்டிப்பா செஞ்சு பாருங்க உங்க வீட்ல இருக்கக்கூடிய எல்லாருக்குமே ரொம்ப பிடிக்கும் ரொம்ப விரும்பி சாப்பிடுவாங்க. இப்ப வாங்க இந்த சிம்பிளான வறுத்து அரைச்ச பொடியை வைத்து செய்யக்கூடிய நாட்டுக்கோழி மிளகு வறுவல் எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
நாட்டு கோழி மிளகு வறுவல் | Nattu Kozhi Milagu Varuval Recipe In Tamil
Equipment
- 1 பவுள்
- 1 கடாய்
- 1 மிக்ஸி
தேவையான பொருட்கள்
- 1/2 கி நாட்டுக் கோழி
- 1 டீஸ்பூன் சீரகம்
- 1 டீஸ்பூன் சோம்பு
- உப்பு தேவையான அளவு
- எண்ணெய் தேவையான அளவு
- 1 டீஸ்பூன் மல்லி
- 2 பெரிய வெங்காயம்
- 1 கொத்து கறிவேப்பிலை
- 1 டீஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது
- 1/2 டீஸ்பூன் மஞ்சள் தூள்
- 2 பச்சை மிளகாய்
- 1 டீஸ்பூன் மிளகு
செய்முறை
- ஒரு கடாயில் எண்ணெய் சேர்த்து சோம்பு போட்டு தாளித்துக் கொள்ளவும்.
- பிறகு பெரிய வெங்காயத்தை நறுக்கி சேர்த்து நன்றாக வதக்கவும்.
- இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கியதும் கருவேப்பிலை தக்காளி சேர்த்து மசிந்து வரும் வரை வதக்கி கொள்ளவும்.
- பிறகு கழுவி வைத்துள்ள நாட்டு கோழியை சேர்த்து பிரட்டவும்.
- மிக்ஸி ஜாரில் சீரகம், மிளகு, மல்லி விதைகள் சேர்த்து அரைத்து அந்த பொடியை கோழியுடன் சேர்த்து நன்றாக வதக்கி தண்ணீர் ஊற்றி வேக வைக்கவும்.
- நாட்டுக்கோழி நன்றாக வெந்து சுண்டி வரவும் இறக்கினால் சுவையான நாட்டுக்கோழி மிளகு வறுவல் தயார்.
Nutrition
இதனையும் படியுங்கள் : அடுத்தமுறை நாட்டு கோழி வாங்கி மதுரை ஸ்டைல் மிளகு வறுவல் இப்படி செய்யுங்கள்!