Advertisement
ஆன்மிகம்

அக்டோபர்-15 நவராத்திரியில் வீட்டில் கொலு வைக்காதவர்கள் எப்படி வழிபடலாம் ?

Advertisement

கொலு என்பது தென்னிந்தியாவில் நவராத்திரி கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாகும். நவராத்திரி பண்டிகை வரும் அக்டோபர் 15-ந் தேதி தொடங்கி அக்டோபர் 24-ந் தேதி நிறைவடைகிறது. நவராத்திரி கொலு பொம்மைகள் மற்றும் சிலைகள் கர்நாடகா, ஆந்திரா மற்றும் தமிழ்நாட்டில் உள்ள ஒவ்வொரு வீட்டு அலங்காரத்தின் சிறப்பம்சமாகும். மீனாட்சி அம்மன் கோயில், சிதம்பரம் நடராஜர் கோவில், போன்ற பல கோயில்கள் நவராத்திரி காலத்தில் கொலு பொம்மைகள் வைக்கப்படுகின்றன.

நவராத்திரி

இந்தியாவில் கொண்டாடப்படும் முக்கிய பண்டிகைகளில் ஒன்று நவராத்திரி பண்டிகை ஆகும். நவராத்திரி நோன்பு புரட்டாசிமாதத்தில் சூரியன் கன்னி ராசியில் சஞ்சரிக்கும் காலத்தில் சக்தி தேவியை குறித்து நோற்கப்படும் நோன்பாகும். மிகிஷாசுரன் என்ற அரக்கனை சரஸ்வதி, லட்சுமி மற்றும் துர்க்கை மூவரும் சேர்த்து வதம் செய்த நாள் தான் நவராத்திரியாக கொண்டாடப்படுகிறது. நவராத்திரி மூன்று தேவியைப் பூசிக்கச் சிறந்த காலமாகும்.

Advertisement

நவராத்திரியில் கொலு வைப்பது ஏன்?

மனிதன் படிப்படியாக தன் ஆன்மிக சிந்தனைகளை வளர்த்து, இறுதியாக இறைவனுடன் கலக்க வேண்டும் என்ற தத்துவத்தை உணர்த்துவதற்காகவே, கொலுவில் படிகள் அமைக்கப்பட்டு, அதில் பொம்மைகள் அடுக்கி வைக்கப்படுகின்றன. ஒன்பது படிகள் அமைப்பது மரபு.

கொலு படிகள்

நவராத்திரியில் குறைந்தது 3 என 11 படிகள் வரை வைக்கும் பழக்கமுண்டு. முதல் படி மரம், செடி, ஆகிய ஓரறிவு உயிரினங்களை குறிக்கிறது. இரண்டாம் படி, ஈரறிவு உயிரனங்களான நத்தை, சங்கையும், மூன்றாம் படி கரையான், எறும்பு போன்ற மூன்றறிவு உயிரினங்களையும், நான்காம் படி நண்டு, வண்டு, உயிரினங்களையும்.ஐந்தாம் படி பறவைகளை குறிக்கிறது. ஆறாம் படிஸமனிதர்கள், திருமணங்கள் மற்றும் ஏழாம் படி உயர்ந்த சித்தர்கள், மகான்களின் பொம்மைகள், எட்டாம் படி இறைவனின் அவதாரங்கள், ஒன்பதாம் படியில் முப்பெரும் தேவியர், மும்மூர்த்திகள், முருகப்பெருமான், பிள்ளையார் பொம்மைகளை வைப்பது வழக்கம்.

கொலு வைக்காதவர்கள் எப்படி வழிபடலாம்?

நவராத்திரியின் ஒன்பது நாட்களுமே சக்திதேவியின் ஒவ்வொரு அவதாரத்தை வணங்கி வழிபடுகிறோம். லட்சுமி சரஸ்வதி பார்வதி என்று முப்பெரும் தேவியரை கொண்டாடும் பண்டிகையாக இருப்பதால், கொலு வைக்காதவர்கள் அம்பாளை மனதார வேண்டிக் கொண்டு வழிபடலாம். அப்படி வழிபட மூன்று முறைகள் உள்ளன. அதில் ஒன்றாவது அகண்ட தீபம் ஏற்றி வழிபடுவது, 2வது கலசம்

Advertisement
வைத்து வழிபடுவது, 3வது முறையாக படம் வைத்து வழிபடுவது. ஆனால் ஒவ்வொரு நாளும் ஒரு வேளை மட்டுமாவது தினமும் ஒரு நைவேத்தியம் படைத்து அம்பிகையை வழிபட வேண்டும்.

படம் வைத்து வழிபடுதல்

கொலு வைக்காதவர்கள் பூஜையறையில் மூத்தேவியரின் படத்தை வைத்து தினமும் காலையில் மாலையில் விளக்கேற்றி நைவேத்யம் செய்து வைத்து வணங்க வேண்டும். ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு இனிப்பு வகையை நைவேத்தியமாக வைக்கலாம்.

Advertisement
அக்கம் பக்கத்தில் இருக்கும் பெண்களை வீட்டுக்கு அழைத்து, உங்களால் இயன்ற அளவுக்கு பூ, குங்குமம் கொடுத்து ஆசீர்வாதம் பெறலாம்.

கலசம் வைத்து வழிபடுதல்

கொலு வைக்காதவர்கள் முப்பெரும் தேவியருக்கு கலசம் வைத்து வழிபடலாம். பொதுவாக அனைவரும் கலசம்‌ வைப்பார்கள். ஆனால், நவராத்திரியின் போது நல்ல நேரத்தில் கலசத்தை நிறுவுவதை ஒவ்வொருவரும் உறுதி செய்ய வேண்டும். இந்த கலவசத்தை மனைப்பலகையில் பச்சரிசி பரப்பி, அதன் மீது வைத்து வழிபட வேண்டும். அப்படி செய்தால் துர்கா தேவி மகிழ்ச்சி அடைந்து , நம் வேண்டுதலை நிறைவேற்றுவார் என்பது நம்பிக்கை.

அகண்ட தீபம் ஏற்றி வழிபடுவது

மூன்றாவதாக தீபம்‌ ஏற்றி வழிபடுபவர்கள் அகலமாக மண் அகல் விளக்கினை வாங்கி ஊற வைத்து, பின் அதற்கு மஞ்சள், குங்குமம், வைத்து திரி போட்டு, நல்லெண்ணெய் ஊற்றி விளக்கேற்றி வழிபாடு செய்யலாம். நவராத்திரியின் 9 நாட்களும் அம்பாளின் முன்பு விளக்கு ஏற்றி வழிபட்டால் வீட்டில் நிம்மதியும், செல்வ வளமும் அதிகரிக்கும்.

இதனையும் படியுங்கள் : கடன் தீர்ந்து செல்வம் சேர புரட்டாசி முதல் வெள்ளிக்கிழமையில் செய்ய வேண்டிய முக்கியமான வழிபாடு!

Advertisement
Prem Kumar

Recent Posts

ஒரு முறை சுவையான இந்த சிக்கன் சாம்பார் வைத்து அதனுடன் சிக்கன் வறுவல் வைத்து சாப்பிட்டு பாருங்கள் வழக்கத்தை விட அதிகமாகவே சாப்பிடுவார்கள்!!

ஞாயிற்றுக்கிழமை வந்துட்டாலே, பலருக்கும் ஜாலியாக இருக்கும். ஏன்னா நமக்கு பிடிச்ச மாதிரி சமைச்சு, அதை எவ்வளவு நேரம் வேணாலும் பொறுமையா…

14 நிமிடங்கள் ago

இதுவரை மோர், ரசம் என தனித்தனியாக சாப்பிட்ருப்பிங்க ஆனால் மோர் ரசம் சாப்பிட்டது உண்டா? இல்லை என்றால் ஒரு முறை செய்து சாப்பிட்டு பாருங்கள் அவ்வளவு ருசியாக இருக்கும்!!

ரசம் சாப்பிட்டு இருப்பீங்க, மோர் சாப்பிட்டு இருப்பீங்க. ஆனால் இது இரண்டையும் சேர்த்து மோர் ரசம் செய்வது எப்படி என்று…

1 மணி நேரம் ago

வளர்பிறை சதுர்த்தி வழிபாடு செய்து விநாயகர் பெருமான் அருளை முழுமையாக பெறுங்கள்!

பொதுவாக இருக்கின்ற 16 விதிகளில் நான்காவது ரீதியாக வரக்கூடியது சதுர்த்தி திதி. பொதுவாக ஒவ்வொரு தெய்வத்திற்கும் நட்சத்திரம் திதி கிழமை…

3 மணி நேரங்கள் ago

இந்த வெயிலுக்கு இளநீர் சர்பத் செஞ்சு குடித்து பாருங்க!!!

அடிக்கிற வெயிலுக்கு நமக்கு சோறு கூட தேவையில்லை ஏதாவது சாப்பிட்டுகிட்டே இருக்கணும் போல தான் தோணும் அந்த வகையில இயற்கையாகவே…

4 மணி நேரங்கள் ago

ருசியான சிறு தானிய சப்பாத்தி இப்படி ட்ரை பண்ணி பாருங்க எல்லாருமே விரும்பி சாப்பிடுவாங்க!

சிறு தானிய வகைகளில் ஒன்றாக இருக்கும் இந்த கம்பு நிறையவே சத்துக்களை கொண்டுள்ளது. குறிப்பாக நார்ச்சத்து நிறைந்துள்ள இந்த கம்பு…

5 மணி நேரங்கள் ago

இன்றைய ராசிபலன் – 14 மே 2024!

மேஷம் நீங்கள் முன்னெடுக்கும் பணிகளுக்கு நல்ல பலன் கிடைக்கும். சூழ்நிலை உங்களுக்கு சாதகமாக இருக்கும். வருமானமும் அதிகரிக்கும். யாருடனும் வாக்குவாதம்…

8 மணி நேரங்கள் ago