- Prep
- 10 min
- Cook
- 10 min
- Total
- 20 min
- Serves
- 4
- Cuisine
- Indian
- Course
- evening, snacks
கடல் உணவுகளில் ஒன்றாக இருக்கும் மீன் அசைவ பிரியர்களின் அதிகம் பிடித்தாக இருக்கின்றது. பொதுவாகவே கடல் உணவுகளை அசைவ பிரியர்கள் அதிகமாகவே விரும்பி உண்கின்றனர். இதன் சுவைக்கு ஒட்டுமொத்த நபர்களும் அடிமையாகிவிடுவார்கள். மீன் வகைகளின் சுவைகளுக்கு அடிமையாகாத அசைவப் பிரியர்கள் இருக்கவே மாட்டார்கள். உடலுக்கு அதிகளவான சத்தை அள்ளி வழங்கக் கூடியது மீன். மீன் உண்பது உடலுக்கு மிகவும் நன்மையளிக்கும். அந்த வகையில் மீன் குழம்பு, மீன் பொரியல் என்பவற்றையே நாம் செய்து சாப்பிட்டிருப்போம். இப்போது சற்று வித்தியாசமாக மீன் வடை எவ்வாறு செய்யலாம் எனப் பார்ப்போம்.
இதனை எப்படி சமைத்துக் கொடுத்தாலும் குழந்தைகள் விருப்பமாக சாப்பிடுவார்கள். அவ்வாறு மீன் வைத்து செய்யக்கூடிய ஒரு உணவு தான் மீன் வடை இதனை எப்படி செய்வதென்று இந்த பதிவில் பார்க்கலாம். இதுவரை நீங்கள் மீனைக் கொண்டு வறுவல், குழம்பு என்று தான் செய்து சுவைத்திருப்பீர்கள். ஆனால் மீனைக் கொண்டு ஒரு அற்புதமான சுவையுடைய வடை செய்யலாம் என்பது தெரியுமா? ஆம், மீன் வடையை மாலை வேளையில் செய்து சாப்பிடலாம். அதோடு விருந்தினர்கள் வீட்டிற்கு வந்திருக்கும் போது, மீன் வடை செய்தால் அவர்களின் பாராட்டைப் பெறலாம்.
கிரிஸ்பியான மற்றும் சுவையான மீன் வடையை குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை அனைவரும் விரும்பி உண்ணும் வகையில் இருக்கும். கடல் உணவான மீனில் அதிகமாக கால்சியம், அயோடின் மற்றும் புரதச் சத்துக்கள் உள்ளன. இதில் உள்ள கொழுப்பானது நல்ல கொலஸ்டிரால் எனப்படும் கொழுப்பு வகையைச் சேர்ந்ததால், இதனை உணவில் சேர்த்துக் கொள்ள மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர். இத்தகைய சத்து மிக்க மீனில் வடை எப்படி செய்வது என்று இந்த பதிவில் பார்க்கலாம்.
இதனையும் படியுங்கள் : எப்பவும் ஒரே மாதிரியா மீன் ஃப்ரை செஞ்சு போர் அடிச்சுருச்சுன்னா இந்த தந்தூரி மீன் செஞ்சு சாப்பிட்டு பாருங்க!
Ingredients
Method
முதலில் நெத்திலி மீனை நன்கு சுத்தம் செய்து முள் நீக்கி எடுத்து வைத்துக் கொள்ளவும்.
பின் ஒரு மிக்ஸி ஜாரில் நெத்திலி மீன், தேங்காய் துருவல், பச்சை மிளகாய், சின்ன வெங்காயம், இஞ்சி, புதினா, சோம்பு, மஞ்சள் தூள், மிளகாய்த்தூள் சேர்த்து தண்ணீர் விடாமல் கொரகொரப்பாக அரைத்துக் கொள்ளவும்.
பின் இதனுடன் பொடியாக நறுக்கிய கொத்தமல்லி, கறிவேப்பிலை, உப்பு சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்.
பின் ஒரு கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் வடை கலவையில் சிறிதளவு எடுத்து வடை போல் தட்டி எண்ணெயில் போட்டு பொன்னிறமாக பொரித்து எடுத்துக் கொள்ளவும்.
அவ்வளவுதான் சுவையான மற்றும் ஆரோக்கியமான நெத்திலி மீன் வடை தயார். இதனை அப்படியே சாப்பிடலாம் அல்லது சட்னி வைத்து சாப்பிடலாம்.






