- Advertisement -
Home காலை உணவு காலை உணவிற்கு ருசியான கேரளா ஸ்டைல் நெய் பத்திரி இப்படி ஒரு முறை செய்து பாருங்கள்!!

காலை உணவிற்கு ருசியான கேரளா ஸ்டைல் நெய் பத்திரி இப்படி ஒரு முறை செய்து பாருங்கள்!!

- Advertisement -

உங்களுக்கு கேரளா ரெசிபிக்கள் ரொம்ப பிடிக்குமா? வீட்டில் கேரளா ரெசிபிக்களை செய்து சாப்பிட விரும்புகிறீர்களா? அப்படியானால் கேரளா ஸ்டைல் நெய் பத்திரி வீட்டில் செய்து சாப்பிடுங்கள். நமது அண்டை மாநிலமான கேரளாவில் பிரபலமான காலை உணவாக இந்த நெய் பத்திரி உள்ளது. நெய் பத்திரி என்பது கேரளா, குறிப்பாக மலபார் பகுதிகளில் மிகவும் புகழ்பெற்ற ஒரு பாரம்பரிய உணவாகும். இது அரிசி மாவு, துருவிய தேங்காய், சின்ன வெங்காயம் மற்றும் சீரகம் ஆகியவற்றைச் சேர்த்துத் தயாரிக்கப்படும் ஒரு சுவையான பலகாரம். இதன் சிறப்பம்சமே, இது எண்ணெயில் பொரித்தெடுக்கப்பட்டாலும், நல்ல வாசனையுடனும் மொறுமொறுப்பாகவும் இருக்கும்.

பொதுவாக இது ரமலான் நோன்பு காலங்களிலும், வீட்டு விசேஷங்களிலும் சிக்கன் அல்லது மட்டன் குழம்புடன் பிரதான உணவாகப் பரிமாறப்படுகிறது. இதன் தனித்துவமான தேங்காய் மணமும், சீரகத்தின் சுவையும் இதற்கு ஒரு அலாதி ருசியைத் தருகின்றன. காலை வேளையில் நமது வீட்டில் உள்ளோருக்கு ஒரு ஆரோக்கியமான மற்றும் சுவையான ஒரு ரெசிபி செய்து கொடுக்க நினைத்தால், நீங்கள் இந்த நெய் பத்திரி தேர்வு செய்து கொள்ளலாம். இதில் புரோட்டீன் அதிகம் உள்ளதால், குழந்தைகளுக்கு அடிக்கடி செய்து கொடுப்பது மிகவும் நல்லது. மேலும் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் சாப்பிடும் வகையில் ருசியாக இருக்கும். இப்போது சுவையான நெய் பத்திரி எப்படி செய்வதென்று பார்ப்போம்.

- Advertisement -
Print
No ratings yet

நெய் பத்திரி | Neypathiri Recipe In Tamil

உங்களுக்கு கேரளா ரெசிபிக்கள் ரொம்ப பிடிக்குமா? வீட்டில் கேரளா ரெசிபிக்களை செய்து சாப்பிட விரும்புகிறீர்களா? அப்படியானால் கேரளா ஸ்டைல் நெய் பத்திரி வீட்டில் செய்து சாப்பிடுங்கள். நமது அண்டை மாநிலமான கேரளாவில் பிரபலமான காலை உணவாக இந்த நெய் பத்திரி உள்ளது. நெய் பத்திரி என்பது கேரளா, குறிப்பாக மலபார் பகுதிகளில் மிகவும் புகழ்பெற்ற ஒரு பாரம்பரிய உணவாகும். இது அரிசி மாவு, துருவிய தேங்காய், சின்ன வெங்காயம் மற்றும் சீரகம் ஆகியவற்றைச் சேர்த்துத் தயாரிக்கப்படும் ஒரு சுவையான பலகாரம். இதன் சிறப்பம்சமே, இது எண்ணெயில் பொரித்தெடுக்கப்பட்டாலும், நல்ல வாசனையுடனும் மொறுமொறுப்பாகவும் இருக்கும். பொதுவாக இது ரமலான் நோன்பு காலங்களிலும், வீட்டு விசேஷங்களிலும் சிக்கன் அல்லது மட்டன் குழம்புடன் பிரதான உணவாகப் பரிமாறப்படுகிறது. இதன் தனித்துவமான தேங்காய் மணமும், சீரகத்தின் சுவையும் இதற்கு ஒரு அலாதி ருசியைத் தருகின்றன.
Prep Time10 minutes
Active Time10 minutes
Total Time20 minutes
Course: Breakfast, dinner
Cuisine: Indian, Kerala
Keyword: Neypathiri
Yield: 5 People
Calories: 67kcal

Equipment

  • 1 பவுள்
  • 1 கடாய்
  • 1 மிக்ஸி

தேவையான பொருட்கள்

  • 2 கப் பச்சரிசி
  • 1 டீஸ்பூன் சோம்பு
  • 1 கப் தேங்காய் துருவல்
  • 1 பெரிய வெங்காயம்
  • உப்பு தேவையான அளவு
  • நெய் தேவையான அளவு
  • அரிசி மாவு தேவையான அளவு

செய்முறை

  • முதலில் அரிசியை நன்கு அலசி விட்டு இரண்டு மணி நேரம் வரை ஊற வைத்து கொள்ளவும்.
  • ஒரு மிக்ஸி ஜாரில் ஊற வைத்த அரிசி, சோம்பு, தேங்காய் துருவல், உப்பு, வெங்காயம் சேர்த்து நன்கு அரைத்து எடுத்துக் கொள்ளவும்.
  • ஒரு கடாயை அடுப்பில் வைத்து நாம் அரைத்து வைத்துள்ள மாவை சேர்த்து நன்கு சப்பாத்தி மாவு பதம் வரும் வரை கலந்து இறக்கவும்.
  • பின் இதனை ஒரு பவுளுக்கு மாற்றி அதனுடன் நெய், அரிசி மாவு சேர்த்து நன்கு பிசைந்து கொள்ளவும்.
  • பின் பிசைந்து வைத்துள்ள மாவில் சிறிதளவு எடுத்து உருண்டைகளாக உருட்டி பூரியாக தேய்த்து எண்ணெயில் போட்டு இரண்டு பக்கமும் பொன்னிறமாக பொரித்து எடுக்கவும். அவ்வளவுதான் சுவையான நெய் பத்திரி தயார்.

Nutrition

Serving: 400g | Calories: 67kcal | Carbohydrates: 4.3g | Protein: 24g | Fat: 5.1g | Sodium: 71mg | Potassium: 132mg | Fiber: 11g | Vitamin A: 81IU | Vitamin C: 133mg | Calcium: 25mg | Iron: 26mg

இதனையும் படியுங்கள் : காரசாரமான கத்திரிக்காய் கார தோசை காலை உணவிற்கு இப்படி ஒரு முறை செய்து பாருங்கள்!!