- Prep
- 10 min
- Cook
- 10 min
- Serves
- 3
- Cuisine
- tamil nadu
- Course
- LUNCH
சிக்கன்ல எக்கச்சக்கமான ரெசிப்பீஸ் செஞ்சு சாப்பிடுவோம் ஆனா உங்க வீட்ல இருக்க கூடிய வெறும் நாலே பொருட்களை வைத்து செய்யக்கூடிய இந்த சிக்கன் மிளகு கறி ஒரு தடவ செஞ்சு பாருங்க டேஸ்ட் அட்டகாசமா இருக்கும். இந்த சிக்கன் மிளகு கறி சென்று சுடு சாதத்தில் போட்டு பிசைந்து சாப்பிட்டால் பிரியாணி கூட தொட்டுப் போயிடும் அந்த அளவுக்கு ஒரு சூப்பரான ரெசிபி தான் இந்த சிக்கன் மிளகு கறி.
சின்ன குழந்தைகள் இருந்து பெரியவங்க வரைக்கும் எல்லாருமே இந்த மிளகு கறிய விரும்பி சாப்பிடுவாங்க. ரசம் சாதத்துக்கு இந்த மிளகு உப்புக்கறி ஒரு அட்டகாசமான காம்பினேஷனா இருக்கும். ரசம் சாதத்துக்கு மட்டுமில்லாமல் தயிர் சாதத்துக்கும் சூப்பரா இருக்கும்.
கடைசியா எல்லா சிக்கனையும் சாப்பிட்டு முடிச்சு பின்னாடி அந்த கடாயில் கொஞ்சமா சாதம் போட்டு பிசைஞ்சு சாப்பிட்டா கூட அல்டிமேட் ஆக இருக்கும் இவ்ளோ ருசியான இந்த சிக்கன் மிளகு கறியை கண்டிப்பாக உங்க வீட்ல செஞ்சு பாருங்க எல்லாரும் விரும்பி சாப்பிடுவாங்க இப்ப வாங்க இந்த சூப்பரான சிக்கன் மிளகு கறி எப்படி செய்வது என்று பார்க்கலாம்
இதனையும் படியுங்கள் : ருசியான கருவேப்பிலை சிக்கன் இப்படி செஞ்சு கொடுங்க! பத்து நிமிஷத்துல ஃபுல்லா காலி பண்ணிடுவாங்க!
Ingredients
Method
ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி சின்ன வெங்காயத்தை சேர்த்து நன்றாக வதக்கவும்
காய்ந்த மிளகாயையும் சேர்த்து நன்றாக வதக்கிய பிறகு சிக்கனை மஞ்சள் தூள் சேர்த்து நன்கு கழுவி அதனையும் சேர்த்து நன்றாக சுருள வதக்கவும்.
தேவையான அளவு உப்பு சேர்த்து சிக்கன் முக்கால் பதத்திற்கு வெந்த பிறகு சீரகத்தூள் மிளகுத்தூள் சேர்த்து பத்து நிமிடங்கள் வேகவைத்து இறுதியாக மல்லி இலைகள் தூவி இறக்கினால் சுவையான சிக்கன் மிளகு கறி தயார்.






