- Prep
- 10 min
- Cook
- 10 min
- Total
- 20 min
- Serves
- 4
- Cuisine
- Indian
- Course
- Side Dish
என்னதான் நான் வெஜ் ஐட்டங்கள் நிறைய இருந்தாலும் எல்லாருக்குமே சிக்கன் அப்படின்னா ரொம்ப பிடிக்கும். சிக்கன் வைத்து சிக்கன் பிரியாணி, சிக்கன் குழம்பு, சிக்கன் சுக்கா அப்படின்னு எக்கச்சக்கமான ரெசிப்பீஸ் செஞ்சாலும் எல்லாருக்குமே சிக்கன் வறுவல், சிக்கன் 65 இது எல்லாமே ரொம்ப பிடிக்கும். அந்த வகையில எப்பவும் ஒரே மாதிரியா சிக்கன் 65 செய்யாம இந்த மாதிரி கொஞ்சம் வித்தியாசமா சில்லி சிக்கன் ரெசிபி செஞ்சு பாருங்க. வெங்காயம், பூண்டு, இஞ்சி, கொத்தமல்லி இலைகள், கருவேப்பிலை எல்லாம் சேர்த்து அரைத்து அந்த விழுதை சேர்த்து நல்லா ஊறவைத்து இந்த இந்த சில்லி சிக்கன் செய்யும் போது மசாலா உதிராமல் சூப்பரா கிடைக்கும்.
ஒரே ஒரு தடவை இதை செஞ்சு பாருங்க சிக்கன் பிரியாணி, தக்காளி சாதம், மட்டன் குழம்பு இது எல்லாத்துக்குமே ரொம்ப ரொம்ப சூப்பரான ஒரு ரெசிபியாக இருக்கும். ஒரே ஒரு தடவை இந்த சில்லி சிக்கனை செஞ்சு பாருங்க. அதுக்கு அப்புறமா அடிக்கடி இந்த ரெசிபியை தான் செய்வீர்கள். ஈவினிங் டைம்ல இதை செய்து சாப்பிடலாம் அவ்வளவு ருசியா இருக்கும். இந்த டேஸ்டான ரெசிபிக்கு வீட்ல இருக்குற எல்லாருமே அடிக்கடி இதை செஞ்சு தர சொல்லி கேப்பாங்க. வீட்டுக்கு யாராவது விருந்தாளிகள் வந்தா அவங்களுக்கு இந்த சூப்பரான ரெசிபியை செஞ்சு கொடுத்து பாருங்க. இப்ப வாங்க இந்த ருசியான டேஸ்டான சில்லி சிக்கன் ரெசிபி எப்படி செய்றதுன்னு பார்க்கலாம்.
இதனையும் படியுங்கள் : ஈரோடு பள்ளிபாளையம் சிக்கன் இந்த மாதிரி செஞ்சு பாருங்க கொஞ்சம் கூட மிச்சம் இருக்காது!!
Ingredients
Method
சிக்கனை கழுவி ஒரு பாத்திரத்தில் சேர்த்துக் கொள்ளவும்.
மிக்ஸி ஜாரில் பூண்டு இஞ்சி பெரிய வெங்காயம், கருவேப்பிலை பச்சை மிளகாய், கொத்தமல்லி இலைகள் சேர்த்து அரைத்து அந்த விழுதை சிக்கனுடன் சேர்த்துக் கொள்ளவும்.
அதனுடன் மிளகாய் தூள் தனியா தூள் மஞ்சள் தூள் கரம் மசாலா, சோள மாவு, சோம்பு, 2 டேபிள் ஸ்பூன் எண்ணெய் சேர்த்து கலந்து கொள்ளவும்.
எலுமிச்சைச் சாறு சேர்த்து கலந்து அரை மணி நேரம் பிரிட்ஜுக்குள் வைத்து சூடான எண்ணெயில் போட்டு பொரித்து எடுத்தால் சுவையான சில்லி சிக்கன் தயார்.






