- Prep
- 10 min
- Cook
- 15 min
- Total
- 25 min
- Serves
- 4
- Cuisine
- Indian, TAMIL
- Course
- LUNCH

ஒரு சிலருக்கு வெரைட்டி சாதங்களான லெமன் சாதம், புளி சாதம், தயிர் சாதம், மாங்காய் சாதம் அப்படின்னு இது எல்லாமே ரொம்ப ரொம்ப பிடிக்கும். ஒரு சிலருக்கு குழம்பு சாதங்கள் ரொம்ப பிடிக்கும் ஆனால் ஒரு சிலருக்கு சட்டி சோறு ரொம்ப ரொம்ப பிடிக்கும். ஏதாவது பொரியல் செஞ்ச பாத்திரத்துல கடைசியில் இருக்கக்கூடிய மசாலாவில் கொஞ்சமா சாதம் போட்டு பிரட்டி சாப்பிட்டா ருசி பயங்கரமா இருக்கும். அதுக்கு எந்த சைடுமே தேவைப்படாது. பொதுவா சிக்கன் கிரேவி, மட்டன் கிரேவி, உருளைக்கிழங்கு மசாலா இதெல்லாம் செஞ்சா அந்த சட்டில அடியில இருக்குற மசாலாவை அப்படியே கழுவ போடாம அதுல கொஞ்சமா சாதம் போட்டு பிரட்டி சாப்பிட நிறைய பேருக்கு ரொம்ப ரொம்ப பிடிக்கும். அந்த வகையில இன்னைக்கு நம்ம ஈரல் சட்டி சோறு செய்ய போறோம்.
இந்த ஈரல் சட்டி சோறு கொஞ்சம் வித்தியாசமான முறையில் செய்யப் போறோம். இதுக்கு ஒரு சில மசாலாக்களை வறுத்து அரைச்சு சாதத்தில் போட்டு கிளறி சாப்பிட அவ்ளோ ருசியா இருக்கும். ஈரல் பொதுவாவே உடம்புக்கு ரொம்ப ரொம்ப நல்லது உடம்புல ஹீமோகுளோபின் அளவு கம்மியா இருக்குறவங்க வாரத்துக்கு ஒரு தடவை மட்டும் ஈரல் சாப்பிட்டால் போதும் ஹீமோகுளோபின் அளவு உடம்புல அதிகரிக்கும். அந்த வகையில இந்த ஈரல் சட்டி சோறு செய்றதுக்கு வீட்ல மண்சட்டி இருந்தா ரொம்ப ரொம்ப நல்லது அதுல செய்யும்போது சுவை இரண்டு மடங்கா அதிகரிக்கும்.
வீட்ல ஈரல் எடுத்தீங்கன்னா அதுல எப்போ நீங்க செய்ற மாதிரி கிரேவி செஞ்சு கூட சாதத்தை போட்ட பிரட்டி சாப்பிடலாம் ஆனா மசாலாக்களை வறுத்து அரைச்சு அதுல செய்யற இந்த ஈரல் சட்டி சோறு ஒரு தடவை செஞ்சுட்டீங்கன்னா அதோட சுவை உங்க நாக்கிலேயே இருக்கும். அடிக்கடி செஞ்சு சாப்பிடணும்னு உங்களுக்கு தோனிக்கிட்டே இருக்கும். இந்த ஈரல் சட்டி சோறு செய்வதும் ரொம்ப ரொம்ப ஈஸி தான் குறைவான பொருட்கள் மட்டுமே நமக்கு போதுமானது. இப்ப வாங்க இந்த சத்தான ருசியான ஆரோக்கியமான ஈரல் சட்டி சோறு எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
இதனையும் படியுங்கள் : சிம்பிளான ரோட்டுக்கடை ஸ்டைல் ஈரல் தொக்கு இப்படி செய்து கொடுங்கள் டேஸ்டாக இருக்கும்!!!
Ingredients
Method
ஒரு கடாயில் சீரகம் சோம்பு, மிளகு, 2 காய்ந்த மிளகாய், கல்பாசி ஏலக்காய் பட்டை கிராம்பு ஒரு கொத்து கருவேப்பிலை அனைத்தையும் சேர்த்து நன்றாக வறுத்து ஆற வைத்து அரைத்துக் கொள்ளவும்.
அரைத்த பொடியை வடித்து ஆற வைத்த சாதத்தில் போட்டு நன்றாக கிளறி கொள்ளவும்.
அதே கடாயில் எண்ணெய் சேர்த்து நறுக்கி வைத்துள்ள சின்ன வெங்காயம் இஞ்சி பூண்டு விழுது ஒரு காய்ந்த மிளகாய் சேர்த்து நன்றாக வதக்கவும்.
கருவேப்பிலை சேர்த்து கழுவி வைத்துள்ள ஈரல் சேர்த்து கால் டம்ளர் தண்ணீர் ஊற்றி தேவையான அளவு உப்பு சேர்த்து நன்றாக வேக வைக்கவும்.
ஈரல் வெந்த பிறகு கலந்து வைத்துள்ள சாதத்தை போட்டு கொத்தமல்லி இலைகள் தூவி இறக்கினால் சுவையான ஈரல் சட்டி சோறு தயார்.






