- Prep
- 10 min
- Cook
- 10 min
- Total
- 20 min
- Serves
- 4
- Cuisine
- Indian, TAMIL
- Course
- LUNCH
ஒரு சிலருக்கு மீன் குழம்பு ரொம்ப பிடிக்கும் ஒரு சிலருக்கு மீன் வறுவல் ரொம்ப பிடிக்கும் ஆனால் இன்னும் ஒரு சிலருக்கு மீன் ஊறுகாய் கொடுத்தா ரொம்ப ரொம்ப பிடிக்கும். மொத்தமா வீட்ல நிறைய மீன் எடுத்தா அந்த சமயத்துல இந்த மாதிரி மீன் ஊறுகாய் போட்டு வச்சுக்கிட்டா நினைக்கும்போதெல்லாம் மீன் சாப்பிட முடியலனாலும் இந்த மீன் ஊறுகாய சாப்டுக்கலாம். இந்த மீன் ஊறுகாயை சுடு சாதத்தில் போட்டு பிசைந்து சாப்பிட அவ்வளவு ருசியா இருக்கும்.
அது மட்டும் இல்லாம பழைய சாதத்துக்கும் இந்த மீன் ஊறுகாய் ஒரு பெர்பெக்ட்டான காம்பினேஷன். நல்லா தடபுடலா மீன் கரி அப்படின்னு செய்யும்போது இந்த மீன் ஊறுகாயை தொட்டுக்கிட்டு சாப்பிட்டாலும் சுவை ரொம்ப அருமையா இருக்கும். ஆனா மீன் ஊறுகாய் நீங்க பலவிதத்தில் செஞ்சு இருப்பீங்க. இதே மாதிரி ஒரு தடவை மீன் ஊறுகாய் செஞ்சு பாருங்க சாப்பிடுவதற்கு அவ்வளவு ருசியா இருக்கும். இப்ப வாங்க ஒரு சூப்பரான மீன் ஊறுகாய் எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
இதனையும் படியுங்கள் : இஞ்சி புளி ஊறுகாய் இப்படி ஒரு தடவை செஞ்சு சாப்பிட்டு பாருங்க!!
Ingredients
Method
மீனை கழுவி சுத்தம் செய்து சிறு துண்டுகளாக வெட்டி எடுத்துக் கொள்ளவும்.
அதில் ஒரு டேபிள் ஸ்பூன் மிளகாய் தூள் மஞ்சள் தூள் மல்லி தூள் உப்பு அரிசி மாவு ஒரு டீஸ்பூன் எலுமிச்சை சாறு அனைத்தையும் சேர்த்து கலந்து கொள்ளவும்.
ஒரு கடாயில் எண்ணெய் சேர்த்து ஊற வைத்துள்ள மீனை சேர்த்து பொரித்து எடுத்துக் கொள்ளவும்.
அதே கடாயில் கடுகு உளுந்தம் பருப்பு வெந்தயம் கருவேப்பிலை போட்டு தாளித்துக் கொள்ளவும்.
தட்டிய பூண்டு பொடி பொடியாக நறுக்கிய இஞ்சி சேர்த்து நன்றாக கலந்ததும் ஒரு டேபிள் ஸ்பூன் மிளகாய்த்தூள் எலுமிச்சைச்சாறு புளிக்கரைசல் சேர்த்து நன்றாக கொதித்ததும் பொறித்து வைத்துள்ள மீனை சேர்க்கவும்.
அனைத்தும் நன்றாக வற்றி வந்த பிறகு அதில் வெல்லம் சேர்த்து இறக்கினால் சுவையான மீன் ஊறுகாய் தயார்.






