- Prep
- 10 min
- Cook
- 15 min
- Total
- 25 min
- Serves
- 4
- Cuisine
- Indian, TAMIL
- Course
- LUNCH
சிக்கன் அப்படின்னாலே அது எப்படி செஞ்சு கொடுத்தாலும் ஒரு சிலர் ரொம்ப ரொம்ப விரும்பி சாப்பிடுவாங்க. சிக்கன்ல அந்த மாதிரி சிக்கன் பிரியாணி, சிக்கன் 65, சிக்கன் கிரேவி, சிக்கன் பெப்பர் எக்கச்சக்கமான ரெசிப்பீஸ் செய்யலாம் அது எல்லாமே ரொம்ப ரொம்ப சூப்பராவே இருக்கும் அந்த வகையில இன்னைக்கு நம்ம நல்லெண்ணெய் ஊத்தி செய்ற நல்லெண்ணெய் சிக்கன் தான் பார்க்கப் போறோம். இந்த நல்லெண்ணெய் சிக்கனை கலவை சாதங்களான தயிர் சாதம் லெமன் சாதம் தக்காளி சாதம் புலாவ் எல்லாத்துக்கும் சைடு டிஷ்ஷா வச்சு சாப்பிடலாம்.
அப்படி இல்லன்னா சுடு சாதத்தில் போட்டு பிசைந்து சாப்பிடலாம் பழைய சாதத்துக்கும் கூட இந்த நல்லெண்ணெய் சிக்கன் சூப்பரான காம்பினேஷன் ஆகவே இருக்கும். சிக்கன் உங்களுக்கு டக்குனு செய்யணும் அப்படின்னா இந்த நல்லெண்ணெய் சிக்கன செஞ்சு பாருங்க ரொம்ப ரொம்ப ஈஸியா 15 நிமிஷத்துல செஞ்சு முடிச்சிடலாம். இப்ப வாங்க ரொம்ப ஈஸியா அதே நேரத்துல ரொம்ப டேஸ்டா செய்ய குடிக்க இந்த நல்லெண்ணெய் சிக்கன் எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
இதனையும் படியுங்கள் : சிம்பிள் சிக்கன் பிரட்டல் எப்படி செய்வது என்று பார்க்கலாம்!
Ingredients
Method
ஒரு கடாயில் நல்லெண்ணெய் சேர்த்து இரண்டு கைப்பிடி சின்ன வெங்காயம் சேர்த்து நன்றாக வதக்கவும்.
அதனுடன் கறிவேப்பிலை காய்ந்த மிளகாய் சேர்த்து வதக்கிய பிறகு கழுவி வைத்துள்ள சிக்கன் சேர்த்து தண்ணீர் பிரிந்து வரும் வரை நன்றாக வதக்கவும்.
இஞ்சி பூண்டு விழுது சேர்த்து மிளகாய் தூள் உப்பு சேர்த்து தண்ணீர் எதுவும் சேர்க்காமல் எண்ணெயிலேயே நன்றாக வதக்கி இறக்கினால் சுவையான நல்லெண்ணெய் சிக்கன் தயார்.






