- Prep
- 10 min
- Cook
- 15 min
- Total
- 25 min
- Serves
- 3
- Cuisine
- tamil nadu
- Course
- Side Dish, starters
மீன் அப்படின்னு சொன்னாலே ஒரு சிலருக்கு நாக்குல எச்சில் வரும் அந்த அளவுக்கு மீன் பிரியர்கள் நிறைய பேர் இருக்காங்க மீன் வச்சு செய்ற மீன் குழம்பு மீன் ரோஸ்ட் மீன் புட்டு அப்படின்னு எல்லாமே ஒரு சிலருக்கு ரொம்ப ரொம்ப பிடிக்கும் அந்த வகையில எப்பவுமே ஒரே மாதிரியான டேஸ்ட்ல மீன் ரோஸ்ட் செஞ்சு சாப்பிட்டு போர் அடிச்சிருச்சு அப்படின்னா இந்த மாதிரி செம்ம சூப்பரான ஆனியன் மீன் ரோஸ்ட் ஒரு தடவை செஞ்சு பாருங்க உங்களுக்கு ரொம்ப பிடிக்கும்.
ஒவ்வொருத்தரும் ஒவ்வொரு மாதிரியான முறையில டேஸ்ட்ல மீன் ரோஸ்ட் செய்வாங்க ஒரு சிலர் ரொம்ப சிம்பிளா செய்வாங்க ஒரு சிலர் நிறைய மசாலாக்கள் சேர்த்து செய்வாங்க அந்த வகையில இப்ப நம்ம நல்லா காரசாரமா ஆனியன் பிரை பண்ணி மீன் மேல போட்டு சாப்பிட போறோம் இத வெறும் வாயில சாப்பிட்டாலே ரொம்ப சூப்பரா இருக்கும் வேணும்னா மீன் குழம்புக்கு சைடிஷா கூட இந்த ஆனியன் மீன் ரோஸ்ட் செஞ்சு சாப்பிடலாம். எனது வீட்டுக்கு விருந்தாளிகள் வந்தா கூட அவங்களுக்கு இந்த சூப்பரான ஆனியன் மீன் ரோஸ்ட் செஞ்சு கொடுத்து அசத்துங்க.
இப்போ செய்யப் போற இந்த ஆனியன் மீன் ரோஸ்ட் ஓட டேஸ்ட் ரொம்ப டிஃபரண்டா சாப்பிடுவதற்கும் ரொம்ப ருசியா இருக்கும். கண்டிப்பா இதே மாதிரியான முறையில் உங்க வீட்டுல ஒரு தடவ செஞ்சு பாருங்க சாப்பிட்டு அசந்து போயிடுவீங்க. இந்த செய்முறை ஓட அளவுகள் மாறாமல் அப்படியே இதே மாதிரி செஞ்சீங்கன்னா உங்களுக்கு பர்ஃபெக்ட்டா இந்த ரெசிபி கிடைக்கும். இப்ப வாங்க இந்த சூப்பரான டேஸ்டான ஆனியன் மீன் ரோஸ்ட் எப்படி செய்வது என்று பார்க்கலாம்
இதனையும் படியுங்கள் : இந்த ஞாயிறு கனவா மீன் வாங்கி இப்படி ஒரு தரம் ரோஸ்ட் செஞ்சி பாருங்க வீடே கமகமக்கும்!
Ingredients
Method
மீனை நன்கு கழுவி சுத்தம் செய்து எடுத்துக் கொள்ளவும்
மல்லி விதைகள் சீரகம் மிளகு காய்ந்த மிளகாய் அனைத்தையும் ஒரு கடாயில் போட்டு வறுத்து ஆற வைத்து மிக்ஸி ஜாரில் போட்டு அரைத்துக் கொள்ளவும்
பச்சை மிளகாயை மிக்ஸி ஜாரில் சேர்த்து நன்கு அரைத்து அந்த விழுதையும் எடுத்துக் கொள்ளவும்.
அரைத்த விழுதுகளை ஒரு பாத்திரத்தில் சேர்த்து மஞ்சள் தூள் இஞ்சி பூண்டு விழுது உப்பு சேர்த்து அதனை கழுவிவைத்துள்ள மீனின் மேல் தடவவும்
இரண்டு மணி நேரம் ஊற வைத்த பிறகு அதனை ஒரு தோசை கல்லில் போட்டு நன்றாக வறுத்து எடுத்துக் கொள்ளவும்.
ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி வெங்காயம் சேர்த்து பொன்னிறமாக வதக்கி எடுக்கவும்.
பொன்னிறமாக வதக்கி வைத்துள்ள வெங்காயத்தை மீனின் மேல் போட்டு பரிமாறினால் சுவையான ஆனியன் மீன் ரோஸ்ட் தயார்






