- Prep
- 30 min
- Cook
- 5 min
- Total
- 35 min
- Serves
- 4
- Cuisine
- Indian, TAMIL
- Course
- Fry
மீன் என்றாலே வாசனை மிக்க குழம்பும், சாப்பிட சாப்பிட திகட்டாத வறுவலும் தான் நம்மில் பலருக்கும் நினைவுக்கு வரும். அதுமட்டுமல்லாமல் உடலுக்கு மிகவும் ஏற்றது மற்ற அசைவ உணவுகளை விட கடல் உணவான மீனில், சாச்சுரேட் கொழுப்பை உள்ளதால் இது உடல் எடையை அதிகரிக்கிறது. மேலும் உடல் ஆரோக்கியத்திற்கு தேவையான ஃபேட்டி ஆசிட்டுகளான ஒமேகா 3 என்ற கொழுப்பு அமிலம் அதிகமாக இதில் உள்ளது.
இதையும் படியுங்கள் : வீடே கமகமக்கும் மீன் வறுவல் செய்வது எப்படி ?
இதனால் உடலுக்கு நல்ல ஆற்றல் கிடைப்பதோடு மட்டுமல்லாமல், டயட்டில் இருப்போருக்கு உகந்த ஒன்றாகவும் விளங்குகிறது. அதனால் ஒரு காரசாரமான மசாலா மீன் வறுவல் எப்படி செய்வது, தேவையான பொருட்கள், செய்முறை விளக்கம் என அனைத்தையும் கீழே கொடுத்துளோம் .அதனை படித்து பார்த்து நீங்களும் இதை ஒரு முறை சமைத்து ருசித்து பாருங்கள்.
Ingredients
Method
முதலில் அரைப்பதற்கு கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை மிக்சியில் போட்டு நன்கு அரைத்துக் கொள்ளவேண்டும்.
பின் மீன் துண்டுகளை தண்ணீரில் நன்றாக கழுவி, அதனை ஒரு பவுளில் போட்டு, அத்துடன் நாம் அரைத்து வைத்துள்ள மசாலாவை சேர்த்து பிரட்டி 30 நிமிடம் நன்றாக ஊற வைக்கவேண்டும்.
பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி எண்ணெய் காய்ந்ததும், மீன் துண்டுகளை சேர்த்து பொன்னிறமாக பொரித்து எடுத்தால், மசாலா மீன் வறுவல் ரெடி.






