- Prep
- 10 min
- Cook
- 15 min
- Total
- 25 min
- Serves
- 4
- Cuisine
- Indian, Kerala
- Course
- LUNCH
சிக்கன் எடுத்தா எப்பவும் ஒரே மாதிரியா சிக்கன் வறுவல், சில்லி சிக்கன் கிரேவி சிக்கன் பிரியாணி எப்படி செய்யாம ஒரே ஒரு தடவை மட்டும் இந்த திருவனந்தபுரம் சிக்கன ட்ரை பண்ணி பாருங்க. அதுக்கப்புறம் எப்போ சிக்கன் எடுத்தாலும் இந்த திருவனந்தபுரம் சிக்கனதான் நீங்க ட்ரை பண்ணுவீங்க அவ்வளவு ருசியா இருக்கும் ரொம்ப சாப்டா ஆகும்.
கிரிஸ்பியாவும் இது கூட சேர்த்து இருக்கிற வெங்காயத்தோட டேஸ்டாலையும் எவ்ளோ சிக்கன் சாப்பிட்டாலும் பத்தல அப்படின்னு சொல்ற அளவுக்கு சாப்பிடுவீங்க.அவ்ளோ ருசியா இருக்கும். தயிர் சாதத்துக்கு குஸ்காக்கு வெள்ளை பிரியாணி புலாவ் எல்லாத்துக்குமே ஒரு சூப்பரான காமினேஷனா இருக்கும்.
நீங்க இதுவரைக்கும் இந்த மாதிரி ஸ்டைல்ல சிக்கன் ட்ரை பண்ணலேன்னா கண்டிப்பா நாளைக்கு சிக்கன் எடுத்து இதே மாதிரி செஞ்சு சாப்பிடுங்க. கண்டிப்பாக உங்கள் வீட்டில் இருக்கிற எல்லாருக்குமே ரொம்ப ரொம்ப பிடிக்கும் இப்ப வாங்க இந்த திருவனந்தபுரம் ஸ்டைல் சிக்கனை எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
இதனையும் படியுங்கள் : எப்போதும் ஒரேமாதிரியான சிக்கன் செய்து போர் அடித்து விட்டதா? அப்படியானால் இந்த முகலாய் சிக்கன் செய்து பாருங்கள்!!
Ingredients
Method
ஒரு பாத்திரத்தில் சிக்கனை கழுவி செய்து கொள்ளவும். அதில் இஞ்சி பூண்டு விழுது சில்லி ஃப்ளேக்ஸ் உப்பு சேர்த்து கிளறவும்.
பிறகு அதனுடன் மிளகாய் தூள் மஞ்சள் தூள் மல்லித்தூள் சீரகத்தூள் மிளகுத்தூள் கரம் மசாலா அனைத்தையும் சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும்.
அரை மணி நேரம் ஊற வைத்து ஒரு கடாயில் எண்ணெய் சேர்த்து சிக்கனை சேர்த்து நன்றாக செமி ஃபிரை செய்து எடுத்துக் கொள்ளவும்.
பிறகு அதே எண்ணையில் நீளமாக நறுக்கிய வெங்காயம் கருவேப்பிலை சேர்த்து பொன்னிறமாக வதக்கியதும் பொரித்து வைத்துள்ள சிக்கனை சேர்த்து இறக்கினால் சுவையான திருவனந்தபுரம் சிக்கன் தயார்.






