மேஷம்

மேஷ ராசியினருக்கு இந்த வாரம் பணம் வரவுக்கேற்ற செலவும் இருக்கும். தந்தையுடன் ஏற்படும் கருத்து வேறுபாடுகளில் அனுசரித்துச் செல்லவும். உத்தியோகஸ்தர்கள் அதிகாரிகளிடம் பேசும்பொழுது பணிவை கடைப்பிடிக்கவும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த வேண்டும். பொது வாழ்வில் உள்ளவர்களுக்கு சிறப்பான நேரம் இது. போட்டித் தேர்வுகளில் வெற்றி பெறுவீர்கள். திருமணம் ஆகி குழந்தை செல்வத்திற்காகக் காத்திருப்பவர்களுக்கு நல்ல செய்தி கிடைக்கும். சிலருக்கு வெளிநாடு சென்று வர வாய்ப்பு ஏற்படும். சிலருக்கு மனக்குழப்பங்களும் முடிவுகளை எடுப்பதில் தடுமாற்றங்களும் ஏற்படும். அலைச்சல்கள் அதிகரிக்கும்.
ரிஷபம்

ரிஷப ராசியினருக்கு, எதிர்பார்த்த பணம் கைக்கு வந்து சேரும். பக்கத்தில் வசிப்பவர்களை அனுசரித்து செல்ல வேண்டும். உத்தியோகஸ்தர்கள் அலுவலகத்தில் பரபரப்பாக தங்கள் பணிகளில் ஈடுபடுவர். மாணவர்கள் தங்கள் உடன் பிறந்தவர்களோடு சண்டை சச்சரவுகள் இல்லாமல் இருக்க வேண்டும். பணப் பிரச்னைகள் ஏற்படுவதற்கு வாய்ப்பு இல்லை. திருமணம் போன்ற சுபகாரிய முயற்சிகள் வெற்றி பெறும். வீடு மாற்றம் இடமாற்றம் ஏற்பட வாய்ப்புண்டு. புகழ்பெற்ற ஆலயங்களுக்கு சென்று வர வாய்ப்புகளும் கிடைக்கும். முடிவெடுக்கும் போது ஒரு விஷயத்தை நன்றாகச் சிந்தித்து ஆராய்ந்து நிதானமாக முடிவு எடுக்க வேண்டும். பல செலவுகளை உங்களால் தவிர்க்க முடியாது.
மிதுனம்

மிதுன ராசியினருக்கு வாழ்க்கைத்துணையால் மகிழ்ச்சி உண்டு. குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் நடக்கும். உத்தியோகஸ்தர்கள் மூத்த அதிகாரிகள் விஷயத்தில் பொறுமை காக்க வேண்டும். மாணவர்கள் ஆசிரியர்களை வணங்கி தேர்வுகளில் பங்கு பெற்றால் வெற்றி உறுதி. புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். வேலைக்கு விண்ணப்பித்தவர்களுக்கு வாய்ப்பு சாதகமாகும். அரசாங்க அலுவல்கள் வெற்றிகரமாகும். பொது வாழ்வில் மேன்மை பெறுவீர்கள். மேலதிகாரிகளால் உங்கள் கடுமையான உழைப்பு அங்கீகரிக்கப் படும். வெளியூர் பயணங்களும் ஏற்படும். குடும்பத்தில் விட்டுக் கொடுத்து செல்ல வேண்டும். எதிர்பார்ப்பை குறைத்துக் கொள்ளுங்கள்.
கடகம்

கடக ராசியினருக்கு இந்த வாரம் வராத பண வரவு மற்றும் பொன், பொருள் சேர்க்கை ஏற்படும். உத்தியோகஸ்தர்கள் சக ஊழியர்களிடம் அனுசரித்து செல்வது அவசியம். மாணவர்களுக்கு சக மாணவர்களுடைய எதிர்பாராத உதவி கிடைக்கும். குடும்பத்தில் இனிமை கூடும். தொழில் ரீதியான முயற்சிகள் வெற்றி பெறும். இடம், பூமி வாங்கும் யோகம் உண்டு. வீடுகளை மாற்றி அமைப்பீர்கள். வாகனங்களை வாங்குவீர்கள் அல்லது மாற்றுவீர்கள். உற்சாகத்தோடு செயல்படுவீர்கள். பணவரவுகள் சாதகமாக இருக்கும். வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். ஒரு காரியத்தை இரண்டு முறை செய்ய வேண்டிய அவசியம் ஏற்படலாம் என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.
சிம்மம்

சிம்ம ராசியினர் இந்த வாரம் குடும்ப நிலையில் மகிழ்ச்சி ஏற்படும். வழக்குகள் சாதகமாக முடியும். உத்தியோகஸ்தர்கள் அலுவலகப் பணிகளில் சக ஊழியர் ஒத்துழைப்பு பெறுவார்கள். மாணவர்கள் விளையாட்டிலும், படங்களிலும் உற்சாகமாக செயல்படுவார்கள். சிலர், கோயில் திருப்பணிகளை மேற்கொள்ளுவீர்கள். முயற்சித்த காரியங்களில் வெற்றி கிடைக்கும். வெளிநாட்டு தகவல்கள் ஆதாயம் தரும். தொழில் வளர்ச்சிக்காக எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். புதிதாக வேலை தேடுபவர்களுக்கு வேலை கிடைக்கும். அலுவலகப் பிரச்னைகள் மனதை வாட்டும். எதிலும் திடீர் முடிவுகள் எடுக்க வேண்டாம். நிதானமும் பொறுமையும் அவசியம்.
கன்னி

கன்னி ராசியினருக்கு குடும்பத்தில் உற்சாகம் நிலவும். அரசுத்தரப்பு காரியங்களில் தாமதம் ஏற்படும். உத்தியோகஸ்தர்கள் அலுவலக பணிகளில் வழக்கத்தை விட கவனமாக செயல்படுவது நல்லது. மாணவர்கள் விளையாட்டு போட்டிகளில் வென்று கல்வி நிறுவனங்களுக்கு புகழ் சேர்ப்பர். குடும்ப நிலைமை மேம்படும். செலவுகள் கட்டுக்கடங்கி இருக்கும். பொது வாழ்வில் உள்ளவர்களுக்கு மக்கள் செல்வாக்கு அதிகரிக்கும். சிலருக்கு ஊர் மாற்றங்களும் இடமாற்றங்களும் உண்டு. சிலருக்கு உடல் நலனில் அக்கறை செலுத்த வேண்டும். வீண் பயம் ஏற்படலாம். அலுவலகத்தில் பணிச்சுமை பொறுப்புக்கள் அதிகரிக்கலாம். எந்த ஒரு செயல்பாட்டிலும் நிதானம் முக்கியம்.
துலாம்

துலாம் ராசியினருக்கு இந்த வாரம் இல்ல துணை மூலம் பண வரவு ஏற்படும். பிள்ளைகளால் பெருமை ஏற்படும். வேலை தேடுபவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். மாணவர்கள் நண்பர்களுடன் மகிழ்ச்சியாக இருப்பார்கள். ஆடை ஆபரணச் சேர்க்கை உண்டு. கொடுக்கல் வாங்கல்கள் சீராக இருக்கும். புகழ்பெற்ற ஆலயங்களுக்கு சென்று வர வாய்ப்புகளும் கிடைக்கும். வீடு, வாகன பராமரிப்புச் செலவுகள் அதிகரிக்கும். தாயாரின் உடல்நிலையில் கவனம் தேவை. தாய்வழி சொந்தங்களோடு மனஸ்தாபம் ஏற்படலாம். வயிறு சம்பந்தப்பட்ட பிரச்னைகள் அதிகரிக்கும். கணவன் அல்லது மனைவி ஒருவருக்கொருவர் அனுசரித்து விட்டுக் கொடுத்து செல்வது நல்லது.
விருச்சிகம்

விருச்சிக ராசியினருக்கு இந்த வாரம் புதிய ஆடை, ஆபரணச் சேர்க்கை உண்டு. நண்பர்களுடன் சுற்றுலா செல்வீர்கள். மாணவர்கள் கணினி சாப்ட்வேர் தொழில்நுட்பங்களை கற்றுக் கொள்வர். உத்தியோகஸ்தர்கள் நிர்வாகத்தினர் மூலம் எதிர்பாராத நன்மை பெறுவர். நண்பர்களின் மகிழ்ச்சியான விழாக்களில் கலந்து கொள்ளும் நல்வாய்ப்பு கிடைக்கும். உடன் பிறந்தவர்களால் சிறப்பு உண்டு. சிலர் உடல் ஆரோக்கியத்தை கவனமாகப் பாதுகாக்க வேண்டும். அலைச்சல்கள் அதிகரிக்கும். வரவு அதிகரித்தாலும், அதற்கு மீறிய செலவுகளும் அதிகரிக்கும். அலைச்சல்களை குறைத்துக் கொள்ள வேண்டும். பேச்சில் மிகுந்த கவனம் தேவை.
தனுசு

தனுசு ராசியினருக்கு இந்த வாரம் திருமண விஷயங்களில் நல்ல செய்திகள் வந்து சேரும். எதிர்பாராத பண வரவும் உண்டு. நற்காரியங்களில் ஈடுபட்டு புகழ் பெறுவீர்கள். உத்தியோகஸ்தர்கள் நீண்ட நாளாக எதிர்பார்த்த மாற்றங்களை சந்திப்பர். மாணவர்கள் பயிற்சிப்பட்டறைகளில் கலந்து கொள்வர். வேலை பார்ப்பவர்களுக்கு நல்ல சந்தர்ப்பங்கள் கிடைக்கும் நழுவ விடாதீர்கள். பிறரைத் துன்புறுத்தும் படி அல்லது மனம் வருந்தும்படி பேசுவதைக் குறைத்து கொள்ளவும். பணம் சம்பந்தப்பட்ட நடவடிக்கைகளில் கவனமும் எச்சரிக்கையும் தேவை. இந்த வாரம் நினைத்தபடி எல்லாம் பேசாதீர்கள் அது உங்களுக்கு வம்பு வழக்குகளை கொண்டு வரும்.
மகரம்

மகர ராசியினர் இந்த வாரம் நன்மை தரும் புதிய தொடர்புகளை பெறுவார்கள். சொந்தபந்தங்களிடம் கவனம் தேவை. உத்தியோகஸ்தர்கள் பணிச்சுமையை சந்தித்தாலும் அதற்கேற்ற ஆதாயம் பெறுவார்கள். மாணவர்கள் பெற்றோர் அறிவுரைகளை ஏற்று செயல்பட வேண்டும். வீடு மனை வாங்குவதிலும் விற்பதிலும் லாபம் பெறுவீர்கள். சகோதர உறவுகள் மேம்படும். கவனத்தோடும் நிதானத்தோடும் காரியங்களைச் செய்து வெற்றி பெறும் வழி பிறக்கும். குடும்பத்தில் சுபகாரியங்கள் நடைபெற வாய்ப்புண்டு. இந்த வாரம் உடன் இருப்பவர்களை அனுசரித்து நடப்பது நல்லது. சில தவிர்க்க முடியாத விரயங்களும் இருக்கும். உடல் நலத்திலும் கவனம் தேவை.
கும்பம்

கும்ப ராசியினர் இந்த வாரம் எதிர்கால நன்மைக்குரிய திட்டங்களை செயல்படுத்துவீர்கள். இல்லத்தரசிகள் மனம் மகிழும். உத்தியோகஸ்தர்கள் பணியிட சிக்கல்கள் விலகி திறமைகளை வெளிப்படுத்துவர். மாணவர்கள் எந்திர, கணினி தொழில்நுட்ப விஷயங்களை கற்பர். கொடுக்கல் வாங்கல்கள் சிறப்பாக இருக்கும். எதிர்பாராத இடத்திலிருந்து பணவரவு உண்டு. வெகு நாள் வராத பணம் வந்து சேரும். அரசாங்க ரீதியான காரியங்களில் வெற்றி உண்டு. போட்டித் தேர்வுகளில் வெற்றி உண்டு. சிலருக்கு தகப்பனாரோடு கருத்து வேறுபாடுகள் வரலாம். தந்தையின் ஆரோக்கியத்தில் குறைபாடு ஏற்படலாம்.
மீனம்

மீன ராசியினர் இந்த வாரம் ஆன்மிக எண்ணங்களால் நிம்மதி பெறுவீர்கள். குடும்ப வருமானம் உயர்வதால் இல்லத்தரசிகள் மகிழ்வர். உத்தியோகஸ்தர்கள் திறமையாக செயல்பட்டு அதிகாரிகளின் ஆதரவுடன் ஆதாயம் பெறுவர். மாணவர்கள் போட்டித் தேர்வுகளில் வெற்றி பெறுவர். சில எதிர் பாராத நற்செயல்களும் பொருளாதார அனுகூலங்களும் உண்டு. சிலர் தேவையற்ற பயணங்களைத் தள்ளி வைக்கவும். வேலையில் இருப்பவர்களுக்கு மேல் அதிகாரிகளால் சிறிய பிரச்னைகள் வரும். பேச்சில் கவனமாக இருக்கவும். ஆரோக்கிய விஷயத்தில் விழிப்புணர்வும், கவனமும் தேவை. மருத்துவச் செலவுகள் அதிகரிக்கலாம்.
இதனையும் படியுங்கள் : விருச்சிக ராசிக்கு பெயர்ச்சியாகும் சூரிய பகவான், உங்கள் ராசிக்கான பலன் இதோ!!


