- Prep
- 10 min
- Cook
- 15 min
- Total
- 25 min
- Serves
- 5
- Cuisine
- Indian, TAMIL
- Course
- LUNCH
உங்கள் வீட்டில் சப்பாத்தியை அடிக்கடி செய்வீர்களா? அந்த சப்பாத்திக்கு சைடு டிஷ்ஷையும் அதிகம் செய்வீர்களா? எப்போது ஒரே மாதிரியான சைடு டிஷ் செய்து அலுத்து விட்டதா? அப்படியானால் அடுத்த முறை சப்பாத்திக்கு முட்டை சைடு டிஷ் செய்வதாக இருந்தால், வித்தியாசமான இந்த ஆம்லேட் மிளகு குழம்பு செய்து பாருங்கள். முட்டை உடலுக்குத் தேவையான சீரான உணவு என்று அழைக்கப்படுகிறது. முட்டை ஒரு ஆரோக்கியமான உணவு பொருள் உடலுக்குத் தேவையான புரோட்டீன், கால்சியம் உள்ளிட்ட சத்துக்களை வழங்க முட்டை உதவுகிறது.
அதனால் தான் அவற்றை தினமும் சாப்பிட மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர். இது நமது அன்றாட தேவைகளை பூர்த்தி செய்யும் அளவுக்கு ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளது. ஆனால் சில சமயம் குழந்தைகள் முட்டையை அப்படியே வேகவைத்து கொடுத்தால் சாப்பிட மாட்டார்கள். அவர்களுக்கு சற்று வித்தியாசமாக ஏதாவது செய்து கொடுத்தால் தான் சாப்பிடுவார்கள். அந்த சமயத்தில் நாம் சற்று வித்தியாசமாக இந்த ஆம்லேட் மிளகு குழம்பு செய்து கொடுக்கலாம். இந்த ஆம்லேட் மிளகு குழம்பு சப்பாத்தி, பூரி போன்றவற்றுடன் சேர்த்து சாப்பிட அருமையாக இருக்கும்.
அதுமட்டுமல்லாமல் தயிர் சாதம், புளி சாதம், தக்காளி சாதம், தயிர் சாதம், வெஜிடபிள் பிரியாணி, ரசம் சாதம், பருப்பு சாதம் ஆகியவற்றிற்கும் சைட் டிஷ்ஷா வச்சு சாப்பிடலாம் அவ்வளவு சூப்பரா இருக்கும். இது தவிர, இந்த குழம்பு செய்வதற்கு மிகவும் சுலபமாகவும் இருக்கும். ஒரு முறை இந்த மாதிரி ஆம்லேட் மிளகு குழம்பு செய்தால், பின் எப்போதும் இந்த ஸ்டைலில் தான் செய்ய சொல்லி வீட்டில் உள்ளோர் கேட்பார்கள். அந்த அளவில் ருசியாக இருக்கும். இப்போது சுவையான ஆம்லேட் மிளகு குழம்பு எப்படி செய்வதென்று பார்ப்போம்.
இதனையும் படியுங்கள் : அரைத்து விட்ட முட்டை பொடிமாஸ் இந்த மாதிரி ஒரு தடவை செஞ்சு பாருங்க!!
Ingredients
Method
முதலில் ஒரு கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் அதில் அரைக்க கொடுத்துள்ள பொருட்களை சேர்த்து நன்கு வதக்கி மிக்ஸியில் சேர்த்து சிறிதளவு தண்ணீர் விட்டு நன்கு அரைத்து எடுத்துக் கொள்ளவும்.
பின் ஒரு தோசைக்கல்லை அடுப்பில் வைத்து சிறிதளவு எண்ணெய் விட்டு முட்டையை உடைத்து ஊற்றி ஆம்லேட் செய்து எடுத்துக் கொள்ளவும்.
பின் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, சீரகம் மற்றும் வெங்காயம் சேர்த்து நன்கு வதக்கவும்.
வெங்காயம் வதங்கியதும் நாம் அரைத்து வைத்துள்ள மசாலாவை சேர்த்து அதனுடன் மஞ்சள் தூள், மிளகாய் தூள், உப்பு, காய்ந்த மிளகாய், கரம் மசாலா தூள் மற்றும் சிறிதளவு தண்ணீர் விட்டு மூடி வைத்து கொதிக்க விடவும்.
குழம்பு ஒரு கொதி வந்ததும் நாம் செய்து வைத்துள்ள ஆம்லேட் சேர்த்து ஒரு கொதி வந்ததும் கொத்தமல்லி இலை தூவி இறக்கவும். அவ்வளவுதான் சுவையான ஆம்லேட் மிளகு குழம்பு தயார்.






