புது வருடம் பிறந்துவிட்ட நிலைகள் இந்த வருடத்தில் வருமானம் பல மடங்கு பெருகுவதற்கு செல்வ வளத்தில் உயர்ந்து நிற்க அழைத்து வாய்ப்புகளும் நம்மை தேடி வர வேண்டும் நல்லதே நடக்க வேண்டும் என்று மனமுரக இறைவனிடம் பிரார்த்தனை செய்து கொண்டு முழு நம்பிக்கையோடு இந்த வருடத்தை நாம் தொடங்க வேண்டும். அந்த வகையில் இந்த வருடத்தில் நம் வீட்டிற்கு பணம் அதிகமாக சேர இந்த ஒரு எளிமையான பரிகாரத்தை நாம் செய்ய வேண்டும். அப்படி செய்யும்போது நேர்மறை ஆன விஷயங்கள் நம்மை சேர்ந்து நமக்கு பலவிதமான நன்மைகள் கிடைக்கும் பணம் நிறைய சேர்ந்து கொண்டே இருக்கும். இந்த பரிகாரத்தைப் பற்றி இந்த ஆன்மீகம் சார்ந்த பதிவில் பார்க்கலாம்.

பரிகாரத்திற்கு தேவையான பொருட்கள்
இந்த பரிகாரத்தை செய்வதற்கு பட்டை, ஒரு ரூபாய் நாணயம், ஏலக்காய், இலவங்கம் என நான்கு பொருட்கள் நமக்கு தேவைப்படும். இதில் இலவங்கம் பட்டை ஏலக்காய் என இந்த மூன்று பொருட்களும் பணத்தை ஈர்க்கக்கூடிய தன்மை கொண்டது எனவே இந்த மூன்று பொருட்களையும் மிக்ஸி ஜாரில் போட்டு அரைத்து பொடி செய்து வைத்துக் கொள்ள வேண்டும்.
பரிகாரம் செய்ய வேண்டிய முறை
முதலில் ஒரு ரூபாய் நாணயத்தையும் அரைத்து வைத்த பொடியையும் கையில் எடுத்துக்கொண்டு நிலை வாசலுக்கு வெளியே போய் நின்று உங்கள் வீட்டை பார்த்து படி நின்று கொண்டு உள்ளங்கையில் ஒரு ரூபாய் நாணயத்தை வைத்து அதன் மேல் அந்த பொடியை வைத்துக் கொண்டு 11 முறை “I am a money magnet” என்ற வார்த்தையை சொல்லிவிட்டு அந்த பொடியை வீட்டிற்குள் அப்படியே ஊதி விட வேண்டும். இந்த பரிகாரத்தை செய்யும் போது இந்த பொடி வீட்டிற்குள் பறந்து வரும் படி பணமும் வீட்டிற்குள் வரும் இந்த பொடி பணத்தை வீட்டிற்குள் இழுத்து வைத்துக் கொள்ளும். மேலும் அதனுடன் அந்த வார்த்தையை கூறும்போது அதற்கான பலன் இரண்டு மடங்காக மாறும்.
பரிகாரம் செய்ய வேண்டிய நேரம்
இந்த பரிகாரத்தை எந்த நேரத்தில் வேண்டுமானாலும் செய்யலாம் ஆனால் மாலை 6:00 மணிக்கு மேல் பூஜை அறையில் விளக்கு ஏற்றி வைத்துவிட்டு இந்த பரிகாரத்தை செய்தால் மிகவும் நல்லது. இந்த பரிகாரத்திற்கு பயன்படுத்தக்கூடிய அந்த ஒரு ரூபாய் நாணயத்தை வீட்டின் பீரோவில் வைக்கலாம். அல்லது பணம் வைக்கக்கூடிய பரிசல் வைக்கலாம் 48 நாட்களுக்கு இந்த நாணயத்தை செலவு செய்யாமல் வைத்துக்கொள்ள வேண்டும். பிறகு அந்த நாணயத்தை கோவில் உண்டியலில் சேர்த்துவிடலாம். நம்பிக்கை உள்ளவர்கள் இந்த பரிகாரத்தை நிச்சயமாக செய்து இதன் பலனை பெறுங்கள்.
இதனையும் படியுங்கள் : பணம் அதிகமாக சேர எழுத வேண்டிய வார்த்தை!


