ஸ்நாக்ஸாக கிராமத்து ஸ்டைல் வெங்காய போண்டா இனி இப்படி செய்து பாருங்க!

- Advertisement -

இப்போது வேண்டுமானால் பப்ஸ், கட்லட் போன்ற பேக்கரி உணவு வந்திருக்கலாம். ஒரு காலகட்டத்தில் அனைவருக்கும் பிடித்த ஒரு ஸ்நாக்ஸ் என்றால் வடைகள் தான் அதுவும் வெங்காய போண்டா உளுந்த வடை இவையெல்லாம் சாப்பிடுவதற்கு என்று தனி ரசிகர் பட்டாளமே உண்டு. அதிலேயும் காலை உணவில் டிபன் உடன் வெங்காய போண்டாவை சாப்பிடும் போது அதன் சுவை அற்புதமாக இருக்கும். ஆம், இன்று வெங்காய போண்டா பற்றி தான் பார்க்க இருக்கிறோம்.

-விளம்பரம்-

இதையும் படியுங்கள் : மொறு மொறுப்பான மசாலா தட்டை செய்வது எப்படி ?

- Advertisement -

நீங்கள் உங்கள் வீடுகளில் மழைக்காலங்களில் சூடாக சாப்பிட விரும்பினாலும், காலையில் டிபன் அல்லது டீயுடன் ஸ்நாக்ஸ் கொடுக்க விரும்பினாலும் இந்த வெங்காய போண்டாவை தயார் செய்து கொடுங்கள். உங்கள் வீட்டில் உள்ள அனைவரும் மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள். இன்று இந்த வெங்காய போண்டாவை எப்படி செய்வது, தேவையான பொருட்கள், செய்முறைகள் என அனைத்தையும் இந்த சமையல் குறித்த தொகுப்பில் நாம் காணலாம் வாருங்கள்.

Print
No ratings yet

வெங்காய போண்டா | Onion Bonda Recipe in Tamil

காலை உணவில் டிபன் உடன் வெங்காய போண்டாவை சாப்பிடும் போது அதன் சுவை அற்புதமாக இருக்கும். ஆம், இன்று வெங்காய போண்டா பற்றி தான் பார்க்க இருக்கிறோம். நீங்கள் உங்கள் வீடுகளில் மழைக்காலங்களில் சூடாக சாப்பிட விரும்பினாலும், காலையில் டிபன் அல்லது டீயுடன் ஸ்நாக்ஸ் கொடுக்க விரும்பினாலும் இந்த வெங்காய போண்டாவை தயார் செய்து கொடுங்கள். உங்கள் வீட்டில் உள்ள அனைவரும் மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள்.
Prep Time20 minutes
Active Time20 minutes
Total Time40 minutes
Course: Snack
Cuisine: Indian, TAMIL
Keyword: Onion bonda, வெங்காய போண்டா
Yield: 4 People
Calories: 40kcal

Equipment

  • 1 கடாய்
  • 1 பெரிய பவுள்
  • 1 பவுள்

தேவையான பொருட்கள்

  • 4 பெரிய வெங்காயம் மீடீயம் அளவு
  • 1 துண்டு இஞ்சி இடித்தது
  • 4 பச்சை மிளகாய் பொடியாக நறுக்கியது
  • 1 கொத்து மல்லி இலை நறுக்கியது
  • 1 கொத்து கருவேப்பிலை நறுக்கியது
  • 1 சிட்டிகை பெருங்காயத்தூள்
  • 2 tbsp மிளகாய் தூள்
  • உப்பு தேவையான அளவு
  • 1 கப் கடலை மாவு
  • ½ கப் அரிசி மாவு
  • 2 tbsp சூடான எண்ணெய்
  • எண்ணெய் தேவையான அளவு
  • தண்ணீர் சிறிது

செய்முறை

  • போண்டா செய்ய முதலில் வெங்காயம் பெரிய அளவு வெங்காயம் என்றால் இரண்டு எடுத்துக் கொள்ளுங்கள் அல்லது சிறிய வெங்காயமாக இருந்தால் நான்கு எடுத்துக் கொள்ளுங்கள். பின் வெங்காயங்களை நீளவாக்கில் நறுக்கி ஒரு பெரிய பவுலில் சேர்த்துக் கொள்ளுங்கள்.
  • அதன் பின் இதனுடன் ஒரு துண்டு இஞ்சி இடித்து சேர்த்துக் கொள்ளுங்கள். பின்பு பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய், ஒரு கொத்து மல்லி இலை, ஒரு கொத்து கருவேப்பிலை, ஒரு சிட்டிகை பெருங்காயத்தூள், 2 டீஸ்பூன் மிளகாய் தூள் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து ஒரு முறை நன்கு கலந்து கொள்ளவும்.
  • அதன் பின்பு இதனுடன் ஒரு கப் கடலை மாவு மற்றும் அரை கப் அரிசி மாவு சேர்த்து முதலில் நன்றாக கலந்து கொள்ளுங்கள் அதன் பின் இரண்டு டீஸ்பூன் சூடான எண்ணெயை சேர்த்து கலந்து கொள்ளுங்கள் அதன் மீது செய்தி சிறிதாக தண்ணீர் சேர்த்து மாவை நன்றாக கலந்து விடுங்கள்.
  • மாவு உருண்டை பிடிக்கும் பதத்திற்கு ஏற்ப தண்ணீர் சேர்க்கவும் அதன் பின் கடாயில் வெங்காய போண்டா முழ்க்கும் அளவு எண்ணெய் ஊற்றி சூடாக்கி கொள்ளுங்கள்.
    பிறகு வெங்காய போண்டாவை டைட்டாக அழுத்தி எடுக்காமல் ஒரு உருண்டை பிடித்து கடாயில் போட்டுக் கொள்ளுங்கள்.
  • இப்படியாக மீதம் இருக்குமம மாவையும் உருண்டை பிடித்துக் கடாயில் சேர்த்து வெங்காயம் போண்டா நன்றாக சிவந்து வந்ததும் வெளியே எடுத்துக் கொள்ளுங்கள். அவ்வளவு தான் வெங்காய போண்டா இனிதே தயாராகிவிட்டது.

Nutrition

Serving: 5people | Calories: 40kcal | Carbohydrates: 9g | Protein: 1.1g | Fat: 0.1g | Sodium: 4mg | Potassium: 146mg | Fiber: 1.7g | Sugar: 4.2g

English Overview: onion bonda is one of the most important dishes in india. onion bonda recipe or onion bonda seivathu eppadi or onion bonda recipe in Tamil are a few important terms to describe this recipe in the tamil language.

LEAVE A REPLY

Recipe Rating




Please enter your comment!
Please enter your name here