Home அசைவம் கொஞ்சம் வித்தியாசமா இந்த சின்ன வெங்காய முட்டை மசாலா செஞ்சு சாப்பிட்டு பாருங்க!

கொஞ்சம் வித்தியாசமா இந்த சின்ன வெங்காய முட்டை மசாலா செஞ்சு சாப்பிட்டு பாருங்க!

முட்டை மசாலாவ ஒவ்வொருத்தவங்களும் ஒவ்வொரு மாதிரி செஞ்சு சாப்பிட்டு இருப்போம். ஆனா எப்பவுமே ஒரே மாதிரியா முட்டை மசாலா செஞ்சு சாப்பிடாம ஒரு தடவை இந்த மாதிரி கொஞ்சம் வித்தியாசமா சின்ன வெங்காயம் குடைமிளகாய், தக்காளி எல்லாமே சேர்த்து ஒரு டிஃபரண்டான டேஸ்ட்ல சின்ன வெங்காயம் முட்டை மசாலா உங்கள் வீட்டில் ஒரு தடவை செஞ்சு பாருங்க. டேஸ்ட் அட்டகாசமா இருக்கும். தயிர் சாதம் தக்காளி சாதம் ரசம் சாதம் சாம்பார் சாதம் புளி சாதம் அப்படின்னு எல்லாத்துக்குமே ஒரு அட்டகாசமான காம்பினேஷனா இந்த சின்ன வெங்காயம் முட்டை மசாலா இருக்கும்.

-விளம்பரம்-

பொதுவா நம்ம ஒரு ரெசிபில சின்ன வெங்காயம் சேர்க்கிறோம் அப்படின்னாலே அந்த ரெசிபி இன்னும் கொஞ்சம் டேஸ்டா இருக்கும் அந்த வகையில் இப்போ செய்யப்போற இந்த சின்ன வெங்காயம் முட்டை மசாலா சின்ன வெங்காயம் அதிகமா சேர்த்து செய்றதால டேஸ்ட் ரொம்ப சூப்பரா இருக்கும். இந்த டேஸ்ட் உங்க வீட்ல இருக்கிற சின்ன குழந்தைகள் இருந்து பெரியவங்க வரைக்கும் எல்லாருக்குமே ரொம்ப ரொம்ப பிடிக்கும்.

கண்டிப்பா உங்க குழந்தைகளுக்கு வேலைக்கு போறவங்களுக்கு எல்லாருக்குமே லஞ்ச் பாக்ஸ் க்கு அடிக்கடி வெரைட்டி ரைஸ் தான் செஞ்சு கொடுப்பீங்க அப்படி வெரைட்டி ரைஸ் செய்யும் போது அதுக்கு சைட் டிஷ்ஷா ரொம்பவே எளிமையா சீக்கிரமா செய்ற மாதிரி இந்த சின்ன வெங்காயம் முட்டை மசாலாவை செஞ்சு கொடுக்க கண்டிப்பா வெரைட்டி ரைஸ்க்கு ஒரு அட்டகாசமான காம்பினேஷனா இருக்கும். இப்ப வாங்க இந்த அட்டகாசமான எளிமையான சைட் டிஷ்ஷான சின்ன வெங்காயம் முட்டை மசாலா எப்படி செய்வது என்று பார்க்கலாம்.

Print
4 from 1 vote

வெங்காய முட்டை மசாலா | Onion Egg Masala Recipe In Tamil

முட்டை மசாலாவ ஒவ்வொருத்தவங்களும் ஒவ்வொரு மாதிரி செஞ்சு சாப்பிட்டு இருப்போம். ஆனா எப்பவுமே ஒரே மாதிரியா முட்டை மசாலா செஞ்சு சாப்பிடாம ஒரு தடவை இந்த மாதிரி கொஞ்சம் வித்தியாசமா சின்ன வெங்காயம் குடைமிளகாய், தக்காளி எல்லாமே சேர்த்து ஒரு டிஃபரண்டான டேஸ்ட்ல சின்ன வெங்காயம் முட்டை மசாலா உங்கள் வீட்டில் ஒரு தடவை செஞ்சு பாருங்க. டேஸ்ட் அட்டகாசமா இருக்கும். தயிர் சாதம் தக்காளி சாதம் ரசம் சாதம் சாம்பார் சாதம் புளி சாதம் அப்படின்னு எல்லாத்துக்குமே ஒரு அட்டகாசமான காம்பினேஷனா இந்த சின்ன வெங்காயம் முட்டை மசாலா இருக்கும். பொதுவா நம்ம ஒரு ரெசிபில சின்ன வெங்காயம் சேர்க்கிறோம் அப்படின்னாலே அந்த ரெசிபி இன்னும் கொஞ்சம் டேஸ்டா இருக்கும் அந்த வகையில் இப்போ செய்யப்போற இந்த சின்ன வெங்காயம் முட்டை மசாலா சின்ன வெங்காயம் அதிகமா சேர்த்து செய்றதால டேஸ்ட் ரொம்ப சூப்பரா இருக்கும்.
Prep Time10 minutes
Active Time15 minutes
Total Time25 minutes
Course: Side Dish
Cuisine: Indian, TAMIL
Keyword: Onion Egg Masala
Yield: 4 People
Calories: 72kcal

Equipment

  • 1 பவுள்
  • 1 கடாய்

தேவையான பொருட்கள்

  • 20 சின்ன வெங்காயம்
  • 3 முட்டை
  • 1 பெரிய வெங்காயம்
  • 1 குடைமிளகாய்
  • 1/2 டீஸ்பூன் மஞ்சள் தூள்
  • 1/2 டீஸ்பூன் சீரகத்தூள்
  • 1/2 டீஸ்பூன் மிளகு தூள்
  • 1 டீஸ்பூன் மல்லி தூள்
  • 1 டீஸ்பூன் மிளகாய்த்தூள்
  • உப்பு தேவையான அளவு
  • எண்ணெய் தேவையான அளவு
  • 1 டீஸ்பூன் சீரகம்
  • 1/2 டீஸ்பூன் கடுகு உளுத்தம்பருப்பு

செய்முறை

  • ஒரு கடாயில் எண்ணெய் சேர்த்து கடுகு உளுந்தம் பருப்பு சீரகம் சேர்த்து தாளித்துக் கொள்ளவும்.
  • பிறகு சின்ன வெங்காயத்தை சேர்த்து கண்ணாடி பதத்திற்கு வதக்கிய பிறகு குடைமிளகாயையும் தக்காளியையும் சதுர வடிவில் நறுக்கி சேர்த்துக் கொள்ளவும்.
  • உப்பு தேவையான அளவு மிளகாய் தூள் சீரகத்தூள், மிளகுத்தூள், மல்லி தூள் அனைத்தையும் சேர்த்து நன்றாக கிளறவும்.
  • நன்றாக வதங்கியதை ஒரு ஓரமாக கடாயிலேயே ஒதுக்கி வைத்து விட்டு நடுவில் சிறிதளவு எண்ணெய் ஊற்றி மூன்று முட்டையை உடைத்து ஊற்றி மூடி போட்டு வேக வைக்கவும்.
  • முட்டை நன்றாக வெந்தவுடன் முட்டையை நன்றாக கிளறி அனைத்துடனும் சேர்த்து கலந்து இறக்கினால் சுவையான சின்ன வெங்காயம் முட்டை மசாலா தயார்.

Nutrition

Calories: 72kcal | Carbohydrates: 2.4g | Protein: 14.7g | Fat: 4.27g | Sodium: 162mg | Potassium: 87mg | Vitamin C: 175mg | Calcium: 39mg | Iron: 9.1mg

இதனையும் படியுங்கள் : குடைமிளகாய் முட்டை தொக்கு எப்படி ஒரு தடவை செஞ்சு சாப்பிட்டு பாருங்க!