- Prep
- 10 min
- Cook
- 15 min
- Total
- 25 min
- Serves
- 4
- Cuisine
- Indian
- Course
- evening, sweets
குழந்தைகள் விருப்பமாக சாப்பிடும் ஜெல்லி மிட்டாயை மிக மிக சுலபமாக நம் வீட்டிலேயே, மிகக் குறைந்த பொருட்களை வைத்தே செய்து விட முடியும். இந்த மிட்டாய் பார்க்கும்போது நமக்கு சிறுவயது ஞாபகம் தான் வரும். இன்றைய காலகட்டத்தில் இந்த மிட்டாய் அவ்வளவாக எளிதில் கிடைப்பதில்லை. மிக அரிதாகத்தான் சில கடைகளில் விற்கப்படுகின்றது. நாம் அனைவரும் சிறுவயதில் ருசித்த அந்த ஜல்லி மிட்டாயின் சுவை, தற்போது கிடைக்கும் மிட்டாயில் கிடைக்கவில்லை என்றுதான் சொல்ல வேண்டும். அந்த வகையில் இந்த ஜெல்லி மிட்டாயை வீட்டிலேயே எப்படி செய்வதென்று பார்ப்போமா!.
குழந்தைகளுக்கு கடைகளில் வாங்கி கொடுப்பதை பெரும்பாலான பெற்றோர்கள் விரும்புவதில்லை. அப்படிப்பட்டவர்கள் வீட்டிலேயே ரொம்ப எளிமையான முறையில் இயற்கையாக கிடைக்க கூடிய பழங்களை பயன்படுத்தி ஜெல்லி செய்யலாம். இதை செய்வது ரொம்ப ரொம்ப ஈஸி. செய்து டப்பாவில் போட்டு வைத்துக் கொண்டால் தினமும் ஒன்று அல்லது இரண்டு ஜெல்லி என்று குழந்தைகளுக்கு கொடுங்கள். விருப்பமாக சாப்பிடுவார்கள். அதேசமயம் ஆரோக்கியத்திற்கு ஏதாவது பிரச்சனை வருமோ என்று ஒரு துளியும் பயப்படவேண்டாம்.
இதனையும் படியுங்கள் : சுவையான டிராகன் ஃபுரூட் ஜெல்லி இப்படி ஒரு தரம் செஞ்சி பாருங்க!
Ingredients
Method
முதலில் ஆரஞ்சு பழம் மற்றும் சாத்துக்குடி பழத்தின் சாறை இரண்டையும் ஒன்றாக சேர்த்து கலந்து வைத்துக் கொள்ளவும்.
பின் ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து சிறிதளவு தண்ணீர் விட்டு கொதித்ததும் கடல்பாசி சேர்த்து நன்கு காய்ச்சவும்.
பின் மற்றொரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து ஆரஞ்சு சாறு மற்றும் தேன் கலந்து ஒரு நிமிடம் கொதிக்க விட்டு அடுப்பை அணைத்து விடவும்.
பின் ஒரு பவுளில் கடல் பாசி கலவை மற்றும் ஆரஞ்சு சாறு கலவையை ஊற்றி அதனுடன் தேன் மற்றும் ஊற வைத்த சப்ஜா விதைகள் சேர்த்து நன்கு கலந்து ஒரு தட்டில் ஊற்றி அரை மணி நேரம் வெளியே வைத்து விடவும்.
பின் இதனை குளிர்சாதன பெட்டியில் அரை மணி நேரம் வரை வைத்து பின் துண்டுகள் போட்டு பரிமாறவும். அவ்வளவுதான் சுவையான மற்றும் ஆரோக்கியமான ஆரஞ்சு ஜெல்லி தயார்.






