- Prep
- 10 min
- Cook
- 10 min
- Total
- 20 min
- Serves
- 5
- Cuisine
- Indian, TAMIL
- Course
- Breakfast
ஒவ்வொரு ஊருக்கும் ஒரு ஸ்பெஷல் இருக்கும் அது சாப்பாடாக இருந்தாலும் சரி, இல்ல மற்ற விஷயங்களாக இருந்தாலும் சரி. அந்த வகையில் தஞ்சாவூர்ல தலையாட்டி பொம்மை, கோவில்கள் மட்டுமில்லாமல், உரப்பு அடையும் ரொம்ப ரொம்ப பேமஸ் இந்த உரப்பு அடை சாப்பிடுவதற்கு அவ்வளவு ருசியா இருக்கும். ஒரு தடவ சாப்பிட்டு பாத்துட்டீங்கன்னா அதுக்கப்புறம் அடிக்கடி சாப்பிடுவீங்க. இட்லி தோசை சப்பாத்தி பூரி அப்படின்னு எப்பவும் ஒரே மாதிரியா செஞ்சு சாப்பிடாம இந்த மாதிரியும் கொஞ்சம் டிஃபரண்டா ஆரோக்கியமான ரெசிபி செஞ்சு சாப்பிட்டு பாருங்க.
இதுக்கு நம்ம புழுங்கலரிசி பச்சரிசி கருப்பு உளுந்து, கடலைப்பருப்பு துவரம்பருப்பு எல்லாமே சேர்த்து ஊற வைத்து அரைத்து செய்ய போறோம். அதனால சாப்பிடறதுக்கு ரொம்ப ரொம்ப ருசியா இருக்கும். மாவு அரைச்சு செஞ்சாலே அடை ரொம்ப ரொம்ப அருமையாக இருக்கும். இதுக்கு சைடிஸ் கூட தேவைப்படாது தேவைப்பட்டால் வேர்க்கடலை சட்னி, தேங்காய் சட்னி, தக்காளி சட்னி இது ஏதாவது ஒன்னு வச்சு சாப்பிடலாம். சாப்பிடுறதுக்கு ரொம்ப ரொம்ப அருமையாக இருக்கும் சுவையான இந்த ரெசிபியை கண்டிப்பா வீட்ல இருக்குறவங்களோட செஞ்சு அசத்துங்க. இத பிரேக்ஃபாஸ்ட் ஆகவும் சாப்பிடலாம் நைட் டின்னர் ஆகவும் சாப்பிடலாம்.
ஒரு தடவை சாப்பிட்டு பார்த்துட்டீங்கன்னா அதுக்கு அப்புறமா அடிக்கடி உங்க வீட்ல இந்த ரெசிபியை செஞ்சுக்கிட்டு இருக்கீங்க. இதுல ஸ்பெஷல் சுரைக்காய் சேர்க்கிறது தான் சுரைக்காய் சேர்த்து தேங்காய் துண்டுகள் எல்லாம் சேர்த்து செய்யும் போது சுவை அட்டகாசமாக இருக்கும். இந்த வெயில் காலத்துக்கு தண்ணீர் காய்கறிகள் அடிக்கடி சேர்த்துக்கணும். அந்த வகையில் சுரைக்காய் சேர்த்து செய்ய இந்த ரெசிபி கண்டிப்பா ஆரோக்கியமானதாக இருக்கும். அது மட்டும் இல்லாமல் இதுல நிறைய பருப்பு வகைகள் சேர்க்கறதால புரதச்சத்துக்கள் நிறைந்த ஒரு பிரேக்ஃபாஸ்டாக இருக்கும். இப்ப வாங்க இந்த சுவையான தஞ்சாவூர் ஸ்பெஷல் உரப்பு அடை எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
இதனையும் படியுங்கள் : கேழ்வரகு முருங்கைக்கீரை அடை
Ingredients
Method
ஒரு பாத்திரத்தில் புழுங்கல் அரிசி பச்சரிசி கருப்பு உளுந்து துவரம் பருப்பு கடலைப்பருப்பு அனைத்தையும் சேர்த்து நான்கு மணி நேரம் ஊற வைக்கவும்.
நன்கு ஊறியதும் மிக்ஸி ஜாரில் சேர்த்து அதனுடன் காய்ந்த மிளகாய் உப்பு சோம்பு சேர்த்து அரைத்து எடுத்துக் கொள்ளவும்.
அதனுடன் நறுக்கிய தேங்காய் துண்டுகள் சுரைக்காய் கொத்தமல்லி இலைகள் கருவேப்பிலை சேர்த்து கலந்து கொள்ளவும்.
ஒரு கடாயில் எண்ணெய் சேர்த்து மொத்தமாக மாவை ஊற்றி இரண்டு பக்கமும் நன்றாக வேக வைத்து எடுத்தால் சுவையான உரப்பு அடை தயார்.






