Advertisement
சைவம்

மணமணக்கும் சுவையான பக்கோட குழம்பு செய்வது எப்படி ?

Advertisement

நீங்கள் எப்பொழுதும் ஒரே மாதிரியான குழம்பு வகைகள் திரும்பத் திரும்ப செய்து கொண்டே இருக்கிறீர்களா ? அப்பொழுது புதுமையாக இந்த பக்கோடா குழம்பு செய்து பாருங்கள். மேலும் நாம் வழக்கமாக சாப்பிடும் இட்லி, தோசை, சப்பாத்தி போன்ற டிபன் உணவுகளுக்கு சாம்பார் மட்டும் வைத்து சாப்பிட்டு போர் அடித்து போய் இருக்கும் உங்களுக்கு இது மாதிரியான உணவுகளுக்கு இந்த பக்கோடா குழம்பு தயார் செய்து சாப்பிட்டால் உங்கள் வீட்டில் உள்ளவர்களுக்கு

இதையும் படியுங்கள் : சுவையான சைவ ஈரல் குழம்பு செய்வது எப்படி ?

Advertisement

இது புதுமையாக இருக்கும். பெரியோர்கள் முதல் குழந்தைகள் வரை அனைவருக்கும் பிடித்தமான உணவாக கூட இருக்கும். இப்பொழுது இந்த பக்கோடா குழம்பு மிகவும் எளிமையாகவும் எப்படி செய்யலாம், தேவையான பொருட்கள், மற்றும் செய்முறைகளை இந்த சமையல் தொகுப்பில் நாம் காணலாம்.

பக்கோட குழம்பு | Pakkoda Kulambu Recipe in Tamil

Print Recipe
புதுமையாக இந்த பக்கோடா குழம்பு செய்து பாருங்கள். மேலும் நாம் வழக்கமாக சாப்பிடும் இட்லி, தோசை, சப்பாத்தி போன்ற டிபன் உணவுகளுக்கு சாம்பார் மட்டும் வைத்து சாப்பிட்டு போர் அடித்து போய் இருக்கும் உங்களுக்கு இது மாதிரியான உணவுகளுக்கு இந்த பக்கோடா குழம்பு தயார் செய்து சாப்பிட்டால் உங்கள் வீட்டில் உள்ளவர்களுக்கு இது புதுமையாக இருக்கும். பெரியோர்கள் முதல் குழந்தைகள் வரை அனைவருக்கும் பிடித்தமான உணவாக கூட இருக்கும். இப்பொழுது இந்த பக்கோடா குழம்பு மிகவும் எளிமையாகவும் எப்படி செய்யலாம், தேவையான பொருட்கள், மற்றும் செய்முறைகளை இந்த சமையல் தொகுப்பில் நாம் காணலாம்.
Course LUNCH, Main Course
Cuisine Indian, TAMIL
Keyword PAKKODA KULAMPU, பக்கோடா குழம்பு
Prep Time 30 minutes
Cook Time 30 minutes
Total Time 1 hour
Servings 4
Calories 40

Equipment

  • 2 கடாய்
  • 1 குழம்பு பாத்திரம்
  • 1 மிக்ஸி
  • 1 mixer

Ingredients

  • 2 பெரிய வெங்கயம்
  • 2 தக்காளி                      
  • புளி ¼ கப் சாறு
    Advertisement
  • உப்பு தேவையான அளவு
  • கொத்தமல்லி              சிறிது
  • 1 tbsp மஞ்சள்தூள்
  • 2 tbsp மிளகாய் தூள்
  • 2 tbsp மல்லித்தூள்

பக்கோடா செய்ய

  • ½ கப் கடலை பருப்பு
  • 1 tbsp சோம்பு
  • 2 மிளகாய்
  • 4 பற்கள் பூண்டு
  • 1 பெரிய வெங்காயம்
  • கொத்தமல்லி சிறிது

அரைப்பதருக்கு

  • ¼ கப் தேங்காய் துருவியது
  • ½ tbsp சோம்பு

தாளிப்பதருக்கு

  • 1 tbsp எண்ணெய்
  • 1 piece பட்டை
  • 2 piece கிராம்பு
  • கறிவப்பிலை சிறிது
  • 1 tbsp இஞ்சி,பூண்டு விழுது

Instructions

  • முதலில் கடலைப்பருப்பை சமைப்பதற்கு இரண்டு மணி நேரங்களுக்கு முன்பாகவே ஊற வைத்துக் கொள்ளுங்கள்.
  • அதன் பின்பு மிக்ஸி ஜாரில் ஊற வைத்த கடலை பருப்பு, மிளகாய், சோம்பு, பூண்டு மற்றும் தேவையான அளவிற்கு தண்ணீர் ஊற்றி மையாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
  • பின்பு ஒரு பாத்திரத்தில் அரைத்து வைத்துள்ள பேஸ்ட்டை போட்டு அத்துடன்
    Advertisement
    பக்கோடாவிற்கு வைத்துள்ள பொருட்களான வெங்காயம், உப்பு, கொத்தமல்லி இவைகளை சேர்ந்து நன்றாக பிசைந்து கொள்ளவும்.
  • பிறகு ஒரு கடாயை அடுப்பில் வைத்து அதில் பொரிப்பதற்கு தேவையான அளவுக்கு எண்ணெய்யை ஊற்றி என்னை நன்கு சூடேறும் வரை காத்திருக்கவும்.
  • அதன் பிறகு நாம் வைத்துள்ள பக்கோடா கலவையை உங்களுக்கு ஏற்றார் போல் சைஸில் எடுத்து சூடறிய எண்ணெயில் போட்டு பொரித்து எடுத்துக் கொள்ள வேண்டும்.
  • பின்பு மறுபடியும் மிக்ஸி ஜாரில் தேங்காய் மற்றும் சோம்பு சேர்த்து தேவையான அளவு தண்ணீர் ஊற்றி மையாக அரைத்துக் கொள்ளுங்கள்.
  • பிறகு ஒரு கடாயை அடுப்பில் வைத்து அதில் தேவையான அளவு எண்ணெய் ஊற்றி எண்ணெய் சூடறியவுடன் தாளியப்பதற்காக வைத்துள்ள பொருட்களை அதில் போட்டு நன்றாக தாளித்து கொள்ளுங்கள்.
  • பின்பு வெங்காயத்தை அதனுடன் போட்டு வெங்காயம் பொன்னிறமாக வரும் வரை வதக்கி கொள்ளுங்கள், பின் தக்காளியை சேர்த்து தக்காளியின் பச்சை வாடை போகும் வரை வதக்க வேண்டும்.
  • அடுத்து அதில் மஞ்சள் தூள், மிளகாய் தூள், மல்லித்தூள் சேர்த்து தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு வதக்கி கொள்ளுங்கள் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி அத்துடன் புளி சாறையும் சேர்த்து ஒரு ஐந்து நிமிடங்கள் நன்றாக கொதிக்க வைக்க வேண்டும்.
  • இறுதியில் அரைத்து வைத்துள்ள தேங்காய் பேஸ்ட்டை சேர்த்து, தேங்காய் பச்சை வாடை போகும் வரை நன்கு கொதிக்க விடவும் பின் நம் பொறித்து வைத்துள்ள பக்கோடாவை சேர்த்து விட்டு ஒரு 2 நிமிடங்கள் கொதிக்க விட்டு பின் இறக்கி வைத்து கொத்த மல்லியை மேலே தூவி விடவும் சுவையான பக்கோடா குழம்பு இனிதே தயாராகி விட்டது.

Nutrition

Calories: 40kcal | Carbohydrates: 32g | Protein: 18g | Fat: 10g
Advertisement
Prem Kumar

Recent Posts

ஈவினிங் டைம்ல சாப்பிடுவதற்கு இந்த மாதிரி சுட சுட சிக்கன் ரோல் ஒரு தடவை செஞ்சு பாருங்க!

பொதுவா நமக்கு சிக்கன் ரோல் சிக்கன் பப்ஸ் கேக் சமோசா அந்த மாதிரி சாப்பிடனும் போல இருந்துச்சுன்னா அதுக்குன்னு நம்ம…

2 மணி நேரங்கள் ago

இட்லி மீதமாயிடுச்சு அப்படின்னா இந்த மாதிரி மசாலா இட்லி செஞ்சு பாருங்க!

வீட்ல இட்லி மீதமாயிருச்சு அப்படின்னா அதை வைத்து இட்லி உப்புமா தான் செய்வோம் ஆனா எல்லாருக்குமேலா இந்த இட்லி உப்புமா…

10 மணி நேரங்கள் ago

இன்றைய ராசிபலன் – 18 மே 2024!

மேஷம் எதிர்பாராத பயணம் களைப்பை ஏற்படுத்தலாம். இன்று பொறுமை குறைவாக இருக்கும் - அதனால் கவனமாக இருங்கள். வேலையில் இன்று…

12 மணி நேரங்கள் ago

வீட்டு கதவு ஜன்னலை ஒரு குறிப்பிட்ட நேரத்தில் திறந்து வைப்பதால் ஏற்படும் அதிர்ஷ்டங்கள்

இந்துக்களுக்கு பொதுவாக ஆன்மீகத்திலும் ஜோதிடத்திலும் வாஸ்து சாஸ்திரத்திலும் அதிகப்படியான நம்பிக்கை இருக்கும் அந்த வகையில் ஒரு வீடு கட்டுவதற்கு அஸ்திவாரம்…

22 மணி நேரங்கள் ago

குடல் குழம்பு இப்படி ஒரு தடவை செஞ்சு பாருங்க!

ஆட்டுக்கறி குழம்பு ஆட்டு குடல் குழம்பு ஆட்டு ஈரல் ப்ரை, சுவரொட்டி ஃப்ரை, மட்டன் சூப், மட்டன் மூளை ப்ரை,…

1 நாள் ago

காரசாரமான ருசியான பூசணிக்காய் கிரேவி ஒரு முறை இப்படி மட்டும் செய்து பாருங்க அற்புதமான சுவையில் இருக்கும்!

கிரேவிகள் உலகம் முழுவதும் மிகவும் பிரபலமாக இருக்கும் ஒரு உணவு. பொதுவாக கிரேவியை சப்பாத்தி, பூரி, நான், புல்கா, பரோட்டா,…

1 நாள் ago