தற்போது மனிதன் உயிர் வாழ்வதற்கு உணவு, உடை, இருப்பிடத்துடன், பணமும் சேர்ந்துவிட்டது. பொதுவாக அனைவருடைய வீட்டிலும் பணக் கஷ்டம் என்பது இருந்து கொண்டு தான் இருக்கிறது. அதாவது நாம் சம்பாதிக்கும் பணத்தினை விட அதிகமான செலவுகள் வரும் போது கடன் வாங்க வேண்டிய சூழல் ஏற்படுகிறது. பணம் இன்றைக்குப் பல பிரச்னைகளைத் தீர்க்கும் சாவியாக இருந்து வருகிறது. வாழ்க்கையில் எல்லோருக்கும் விருப்பமிருந்தாலும் இல்லாவிட்டாலும் பணத்தை நோக்கி ஓட வேண்டியிருக்கிறது. அத்தியாவசியப் பொருள்களிலிருந்து ஆடம்பரமான பொருள்கள் வரை எதை வாங்க வேண்டுமென்றாலும், அதற்குப் பணம் தேவையாயிருக்கிறது.

மேலும் வீட்டிலும் பணம் தங்கவே இல்லை என்பதும் நிறைய நபர்களின் கவலையாக இருக்கிறது. வருமானத்தை பெருக்குவதற்கான வழிகள் தெரிந்தாலும் தெய்வீக அருள், நம்மை சுற்றி நேர்மறை ஆற்றல்கள் இருந்தால் மட்டுமே பணத்தை சேமிக்கவும், பெருக்கவும் முடியும். அந்த நேர்மறை ஆற்றல்களை நம்மை சுற்றி அதிகரிக்க செய்து, வரும் வருமானத்தை பெருக செய்வதற்கு சில எளிய பரிகாரங்களை செய்தாலே போதும்.
பரிகாரம் செய்யும் முறை
இந்த பரிகாரம் செய்வதற்கு ஒரு பச்சை நிற துணியை எடுத்துக் கொள்ளுங்கள். பின்னர் அதில் 9 மொச்சை, 9 கிராம்பு மற்றும் 9 கற்கண்டு வைத்து உங்கள் குலதெய்வத்தையும், மகாலட்சுமியையும் நினைத்து பச்சை நிற நூலால் ஒரு முடிச்சாக கட்டிக் கொள்ளுங்கள். இந்த மூட்டையை எடுத்துக்கொண்டு போய் உங்கள் வீட்டின் வட கிழக்கு மூலையில் வைத்து விடுங்கள். இதற்கு ஒவ்வொரு வாரமும் வெள்ளிக்கிழமை அன்று ஊதுபத்தி, தீபம் காட்டி வந்தாலே போதும்.

இதனை ஆறு மாதத்திற்கு ஒரு முறை மாற்றினாலே போதும். இந்த மூட்டை உங்கள் வீட்டில் இருப்பதினால் திடீர் அதிர்ஷ்டங்கள் வரும். எதிர்பாராத யோகத்தை கொண்டு வரும். உங்களுக்கு இருக்கும் பணம் கஷ்டங்கள் எல்லாம் தீர்ந்து, பணம் எங்கிருந்து வருகிறது என்று தெரியாத அளவிற்கு பணம் வந்து சேரும்.
பரிகாரத்தை எப்பொழுது செய்ய வேண்டும்
வெள்ளிக்கிழமை காலையில் 6 மணிக்குள் எழுந்து குளித்து விட்டு, பூஜையறையில் நெய் அல்லது நல்லெண்ணெய் கொண்டு தீபம் ஏற்றி கடவுளை வழிபட்டு இந்த பரிகாரத்தை செய்யுங்கள். வாழ்க்கையில் தொடர்ந்து கஷ்டத்தை மட்டுமே அனுபவித்து எதிர் நீச்சல் போட்டுக்கொண்டே இருபவர்கள் ஒரே ஒரு முறை இந்த பரிகாரத்தை செய்தால் போதும்.
இதனையும் படியுங்கள் : உங்கள் வருமானம் உயர வேண்டுமா ? பணம் வீட்டில் சேர்ந்து கொண்டே இருக்க வேண்டுமா ? தென்கிழக்கு திசையில் இந்த பொம்மை மட்டும் வையுங்கள் போதும்!


