நம் முன்னோர்கள் பின்பற்றிய அனைத்து கலாச்சாரங்களையும் இன்றும் நாம் பின்பற்றி வருகிறோம். குழந்தைகளிலிருந்து பெரியவர்கள் வரையில் அனைவருக்குமே சாஸ்திர சம்பிரதாயங்களை பின்பற்றி தான் வருகிறோம். குழந்தை பிறந்தவுடன் ஜாதகம் எழுதுவது குழந்தைக்கு வாழ்கையின் ரகசியத்தை கணிப்பதற்கு உதவியாக இருக்கும் என்று சொல்லப்படுகிறது. அந்த வகையில் சுக்கிர பகவானுடைய அருள் ஒரு ஜாதகத்தில் இருந்தால் அவருடைய அருள் முழுவதுமாக கிடைத்து பணத்திற்கும் குறைவில்லாமல் இருக்கும். சுக்கிர பகவானின் அருளை பெறுவதற்கு என்னென்ன செய்ய வேண்டும் என்பதை பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.
சுக்கிர பகவான் அருள்

ஒருவருடைய ஜாதகத்தில் சுக்கிர பகவான் 100% இருந்தால் பணத்திற்கு செல்வத்திற்கு குறைவே இருக்காது. முன்னோர்கள் சேர்த்து வைத்த சொத்துக்களும் உழைத்து சம்பாதித்த சொத்துக்களும் அவர்களுக்கு நிறைந்திருக்கும் நிலைத்திருக்கும். சுக்கிர பகவானின் தாக்கம் குறைந்து கொண்டே இருந்தால் பணம் கையில் தாங்காது சம்பாதித்த பணம் எப்படி செலவாகிறது என்று தெரியாது அந்த வகையில் சுக்கிர பகவானுடைய அருளை முழுவதுமாக பெறுவதற்கு நரசிம்மருக்கு ஒரு மாலையை அணிவித்து வரலாம்.
நரசிம்மருக்கு மாலை
நரசிம்மருக்கு இந்த குறிப்பிட்ட மாலையை அணிவதன் மூலம் வாழ்க்கையில் பிரச்சனைகள் குறைந்து பணம் அதிகரிக்கும். குழந்தைகளிடம் பிடித்தால் எப்படி சமாதானம் செய்கிறோமோ அதேபோல இறைவனையும் அவருக்கு பிடித்த பொருட்களை வைத்து எப்பொழுதுமே மனதை குளிர வைத்துக் கொண்டே இருக்க வேண்டும். அந்த வகையில் இறைவனை மகிழ்விக்க நரசிம்மரை மகிழ்விக்க அவருக்கு பிடித்தமான ஏலக்காயை 27 54 108 என்ற எண்ணிக்கையில் எடுத்து மஞ்சள் நிற நூலால் பூப்போல கட்டிக் கொள்ள வேண்டும்.
நரசிம்மருக்கு மாலை சாற்ற வேண்டிய நேரம்
ஒரு சிலர் ஊசி நூலை வைத்தும் மாலை கோர்ப்பார்கள் உங்களுக்கு எப்படி கட்ட வேண்டுமோ அப்படி கட்டிக் கொள்ள வேண்டும் கட்டும் போது நரசிம்மரின் நாமத்தை உச்சரித்துக் கொண்டே கட்ட வேண்டும். இரவு முழுவதும் ஒரு கிண்ணத்தில் போட்டு வைத்து மறுநாள் காலையில் நரசிம்மர் கோவிலுக்கு சென்று இரண்டு நெய் தீபம் ஏற்றி வழிபட்டுவிட்ட நரசிம்மருக்கு அந்த மாலையில் சாற்ற வேண்டும். இப்படி வாரத்திற்கு ஒருமுறை செய்து வந்தால் நிச்சயமாக நல்ல பலன் கிடைக்கும்.
இதனையும் படியுங்கள் : பணம் அதிகரிக்க செய்ய வேண்டிய வழிபாடு!