Home ஆன்மிகம் இந்த ஒரு பொருள் உங்களிடம் இருந்தால் போதும் வீட்டின் செல்வ வளம் அதிகரித்து கொண்டே இருக்கும்!

இந்த ஒரு பொருள் உங்களிடம் இருந்தால் போதும் வீட்டின் செல்வ வளம் அதிகரித்து கொண்டே இருக்கும்!

பொதுவாக நம் வீட்டில் எவ்வளவு தான் பணம் தந்தாலும் அதற்கு செலவுகளும் வந்து கொண்டே தான் இருக்கும். பணத்தை சேமிக்க நாம் எவ்வளவுதான் கடுமையாக உழைத்தாலும் சில சமயங்களையும் நம்மால் பணம் சேர்க்கவே முடியாது. அந்த மாதிரியான சூழ்நிலைகளில் நம் முன்னோர்கள் சொல்லிக் கொடுத்த சில எளிமையான பரிகாரங்களை தாந்த்ரீக பரிகாரங்களை செய்வதன் மூலம் நம் வீட்டில் பணம் அதிகரிக்கும் கடன் பிரச்சினைகளும் செலவுகளும் படிப்படியாக குறைய தொடங்கும். வீட்டில் பண வரவு அதிகரிக்க நிறைய பரிகாரங்கள் இருந்தாலும் அதை அனைவராலும் செய்ய முடியாது எனவே பணவரவை அதிகரிக்க செய்ய வேண்டிய ஒரு எளிமையான பரிகாரத்தை பார்க்கலாம். இந்த எளிமையான பரிகாரம் பணத்தை ஈர்த்து கொடுக்கும் தன்மை வாய்ந்தது. இந்த எளிமையான பரிகாரத்தை பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.

-விளம்பரம்-

பணம் சேர செய்ய வேண்டிய பரிகாரத்திற்கான பொருட்கள்

பணத்தை ஈர்த்துக் கொடுக்கக்கூடிய இந்த பரிகாரத்திற்கு தேவையான பொருட்கள் மூன்று பொருட்கள் தான். அதுவும் நம் வீட்டில் இருக்கக்கூடிய நாம் பயன்படுத்தக்கூடிய பொருட்கள். ரூபாய் நோட்டு பன்னீர் மற்றும் கிராம்பு. இவைகள் மூன்றும் இருந்தால் இந்த எளிமையான பரிகாரத்தை நாம் செய்து முடித்து விடலாம் அதன் மூலம் நம் வீட்டிற்கு பணவரவும் அதிகரிக்கும் செலவும் குறையும்.

பணத்தை ஈர்த்துக் கொடுக்கக்கூடிய எளிமையான பரிகாரம்

இந்த எளிமையான பரிகாரத்திற்கு நமக்கு தேவைப்படும் மூன்று பொருட்களும் நம் வீட்டிலேயே இருக்கும். இல்லையென்றால் அருகில் உள்ள கடைகளில் வாங்கி வைத்துக் கொள்ளவும். முதலில் ஒரு தூய்மையான கிண்ணத்தில் பன்னீர் சேர்த்து அதில் உடையாத முழு கிராம்புகளை சேர்த்துக் கொள்ள வேண்டும். மூன்று கிராம்புகள் சேர்த்தால் போதுமானது. நாளை இந்த பரிகாரத்தை நாம் செய்யப் போகிறோம் என்றால் இன்று இரவே தண்ணீரில் இந்த கிராம்பை ஊற வைக்க வேண்டும். அடுத்த நாள் காலையில் ஏதாவது ஒரு ரூபாய் நோட்டை எடுத்துக் கொள்ள வேண்டும் அது பத்து ரூபாயிலிருந்து எவ்வளவு ரூபாய் நோட்டாக வேண்டுமானாலும் இருக்கலாம்.

அந்த ரூபாய் நோட்டை விரித்து வைத்து அதில் உங்களுடைய ஆள்காட்டி விரல் நடுவிரல் மோதிர விரல் மூன்றையும் ஒரு சேர வைத்து கிராம்பு உறவைத்த பன்னீரை லேசாக தொட்டு மூன்று விரல்களால் ரூபாய் நோட்டின் மீது பட்டை போடும்படி தடவி விடவும். நிறைய தொட்டு ரூபாய் நோட்டின் மீது தடவினால் ஈரம் ஆகிவிடும் அதனால் லேசாக தொட்டால் போதுமானது. இந்த மூன்று விரல்களும் சூரிய கிரகங்களான குரு பகவான் சூரிய பகவான் மற்றும் சனி பகவானை குறிக்கும் எனவே இந்த மூன்று விரல்களாலும் இந்த பரிகாரத்தை செய்யும் போது அதற்கான பலன்கள் நமக்கு கிடைக்கும்.

இந்த பரிகாரத்தை எவ்வளவு நாட்கள் செய்ய வேண்டும்

இந்த பரிகாரத்திற்கு பயன்படுத்திய ரூபாய் நோட்டை நாம் நம்முடைய பர்ஸ் ,பீரோ, தங்க நகைகள் வைக்கும் இடம், பணம் வைக்கும் இடம், பாக்கெட் போன்ற இடங்களில் வைத்துக் கொள்ளலாம். ஒரு போதும் இந்த ரூபாய் நோட்டை செலவு செய்யக்கூடாது. மூன்று மாதங்களுக்கு பிறகு மறுபடியும் இந்த நோட்டை எடுத்து இதே பரிகாரத்தை மறுபடியும் செய்யலாம். அல்லது அந்த நோட்டை ஏதாவது ஒரு சுப காரியங்களுக்கு பயன்படுத்திவிட்டு மற்றொரு ரூபாய் நோட்டை வைத்து இந்த பரிகாரத்தை செய்து கொண்டே இருக்கலாம். இந்த பரிகாரத்தை செய்ய செய்ய நம் வீட்டில் பணம் அதிகரித்துக் கொண்டே தான் இருக்கும். நம்பிக்கையுடன் இந்த பரிகாரத்தை செய்து பாருங்கள் நிச்சயமாக பணவரைவு அதிகரித்து உங்களுடைய பணக்கஷ்டங்கள் அனைத்தும் தீர்ந்துவிடும்.

-விளம்பரம்-

இதனையும் படியுங்கள் : வீட்டில் பணம் மற்றும் செல்வ வளங்கள் அதிகரிக்க நாம் சமையல் அறையில் தவிர்க்க வேண்டிய தவறுகள்!