2025ல் பணக்கார யோகம் பெற செய்ய வேண்டிய பரிகாரம்!

- Advertisement -

வீட்டில் உள்ள கடன் பிரச்சினைகள் பல பிரச்சினைகள் கணவன் மனைவி பிரச்சினைகள் என அனைத்துமே தீர்வதற்கு நம் வாழ்க்கையில் நமக்கு பணம் தேவைப்படும். பணம் இருந்தால் என முடியும் பிரச்சினைகள் அனைத்தும் தீர்ந்துவிடும். எனவே அந்த பண பிரச்சனையை தீர்ப்பதற்கான ஒரு எளிமையான பரிகாரத்தை செய்யலாம்.

-விளம்பரம்-

காகத்திற்கு சாப்பாடு

காகத்திற்கு தினமும் சாப்பாடு வைத்தால் நம்முடைய முன்னோர்களின் ஆசிர்வாதத்தை முழுமையாக பெற முடியும். மேலும் காகம் சனி பகவானுடைய வாகனமாகவும் உள்ளது. சனி பகவானுடைய தாக்கம் குறையவும் முன்னோர்களின் ஆசிர்வாதத்தை பெறவும் தினமும் காகத்திற்கு சாதம் வைக்கலாம். மேலும் மாதத்திற்கு ஒரு முறை வரக்கூடிய பரணி நட்சத்திரத்தன்று அந்த நாளை குறித்து வைத்துக் கொண்டு அந்த நாளன்று மதியம் 12 மணிக்குள் காகத்திற்கு சாப்பாடு வைக்க வேண்டும்.

- Advertisement -

பிரச்சனைகள் தீரும்

இதுபோல் நாம் செய்யும்போது கடன் சுமை குறையும் கணவன் மனைவிக்குள் இருக்கக்கூடிய பிரச்சனைகளும் நீங்கும். ஒருவரை ஒருவர் புரிந்துகொண்டு கணவன் மனைவி வாழ ஆரம்பித்தாலே பணம் உங்களை தானாக தேடி வரும். மேலும் 2025ல் பொருளாதார நிலையில் மாற்றம் ஏற்பட ஐப்பசி மாதத்தில் இருந்து இந்த குறிப்பிட்ட பரிகாரத்தை செய்ய தொடங்கலாம்.

காக்கைக்கு சாதம் வைப்பதால் ஏற்படும் நன்மைகள்

காகத்திற்கு பரணி நட்சத்திரத்தன்று சாப்பாடு வைக்கும் போது உங்களுக்கு நிறைய நல்ல பலன்கள் கிடைக்கும். மற்ற நாட்களை விட இந்த பரணி நட்சத்திரம் வரும் நாள் என்று காகத்திற்கு சாப்பாடு வைப்பது மிகவும் சிறப்பானது. மற்ற நாட்களை விட பரணி நட்சத்திரத்தன்று காகம் தானாகவே வந்து சாப்பாட்டை எடுத்துக் கொள்ளும். பரணி நட்சத்திரத்தன்று மட்டும் நீங்கள் சாப்பாடு வைத்தால் ஒருவேளை காகம் வந்து எடுக்காமல் போகலாம் அதனால் தினமும் சாப்பாடு வைக்க வேண்டும். சாப்பாடு வைக்கும்போது காகம் அதனை எடுக்கவில்லை என்றால் சிறிதளவு மிக்சரை தூவி விட்டால் காகம் சாதத்தை உடனே வந்து எடுத்துக் கொள்ளும். முன்னோர்களின் ஆசிர்வாதத்தை பெறுவதற்கு மறக்காமல் இந்த பரிகாரத்தை தினமும் செய்து பாருங்கள்.

இதனையும் படியுங்கள் : காகம் உங்கள் வீட்டு முன் இப்படி செய்தால் அதற்கு என்ன அர்த்தம் என்று தெரியுமா?

-விளம்பரம்-