இந்த உலகத்தில் பணம் இல்லாமல் எதையுமே வாங்கி விட முடியாது பணத்தால் இதை வேண்டுமானாலும் வாங்க முடியும் பணம் தான் இந்த உலகில் ஒரு மூலப்பொருளாக செயல்படுகிறது நாம் அனைவரும் இன்றைய காலத்தில் பணத்திற்கு பின்னால் மட்டுமே ஓடிக் கொண்டிருக்கின்றோம் அப்படி ஓடியும் கூட பணத்தை சம்பாதிக்க முடியாமல் மிகவும் கஷ்டமான சூழ்நிலையில் இருப்போம் அந்த நிலையில் மகாலட்சுமி தாயாருக்கு இந்த ஒரு எளிமையான வழிபாட்டை செய்வதன் மூலம் பணத்தேவைகள் அனைத்தும் பூர்த்தி அடையும்.

மகாலட்சுமி தாயார் வழிபாடு
பணம் சம்பந்தப்பட்ட அனைத்து பிரச்சனைகளுக்கும் ஒரே தீர்வு மகாலட்சுமி தாயாரை வழிபடுவதே செல்வத்திற்கு அதிபதியாக விளங்கக்கூடிய மகாலட்சுமி தாயாரை வழிபட்டு வந்தால் செல்வம் உயர்ந்து வீட்டில் மகிழ்ச்சியும் கிடைக்கும் அதற்கு வீட்டில் மகாலட்சுமி தாயாரை வழிபாடு செய்யும்போது இந்த ஒரு பொருளை மட்டும் கையில் வைத்துக்கொண்டு வழிபாடு செய்தால் நம்முடைய வேண்டுதல்கள் அனைத்தும் நிறைவேறும்.
மகாலட்சுமி தாயாரை வணங்கக்கூடிய நாள்
மகாலட்சுமியை வணங்கக்கூடிய நாள் வெள்ளிக்கிழமை அன்று தான் அவருக்கு உகந்த நாள் வெள்ளிக்கிழமை வரக்கூடிய சுக்கிர ஹோரையில் ரேவதி நட்சத்திரம் சேர்ந்து வரக்கூடிய வெள்ளிக்கிழமைகள் இந்த குறிப்பிட்ட வழிபாட்டை செய்தால் அதற்கான பலன் பல மடங்கு கிடைக்கும் அதற்கு நமக்கு தேவையான பொருள் கல் உப்பு.
கல் உப்பு வழிபாடு

கல் உப்பு மகாலட்சுமி தேவியாருக்கு இணையான சக்திகளை கொண்டுள்ளது அதனால் தான் ரேவதி நட்சத்திரம் கூடிய வெள்ளிக்கிழமையில் சுக்கிரஹோரையில் கல் உப்பை வீட்டிற்கு வாங்கி வந்தால் மகாலட்சுமி தாயாரும் நம் வீட்டிற்கு வருவாள் என்று கூறப்படுகிறது அப்படிப்பட்ட கல் உப்பை நம்முடைய இரண்டு கைகளிலும் வைத்து நன்றாக மூடிக் கொண்டு மகாலட்சுமியின் மந்திரமான “ஓம் ஸ்ரீம் நம” என்ற மந்திரத்தை 108 முறை உச்சரித்து வந்தால் மிகவும் நல்லது இப்படி செய்துவிட்டு அந்த உப்பை நம்முடைய சமையல் பயன்படுத்திக் கொள்ளலாம். ரேவதி நட்சத்திரம் கூடிய வெள்ளிக்கிழமை அன்று நாம் இந்த வழிபாட்டை செய்தால் ஒரு வாரத்திலேயே அதற்கான பலன் நமக்கு கிடைக்கும்.
பண வரவு அதிகரிக்க
இந்த ஒரு வழிபாட்டை செய்தால் நம் வீட்டிற்கு பணவரவு அதிகரிப்பதற்கான வழிகள் கிடைக்கும் வீட்டில் செல்வமும் அதிகரிக்கும் மகாலட்சுமி கடாட்சம் வீட்டில் நிறைந்து பண தேவைகள் அனைத்தும் பூர்த்தி அடைந்து இல்லை என்ற ஒரு நிலைமை முற்றிலும் தீர்ந்து மகிழ்ச்சி ஆன வாழ்க்கையை நம்மால் வாழ முடியும். முழு மனதோடு இந்த மந்திரத்தை கூறி மகாலட்சுமி தாயார் உடைய அருளால் செல்வ செழிப்பை பெற்று நல்ல பொருளாதார முன்னேற்றம் பெற்று வாழ முடியும்.
இதனையும் படியுங்கள் : பணம் உங்களை தேடி வந்து சேர செய்ய வேண்டிய 5 விஷயங்கள்! இதை செய்யுங்கள் பணம் சேர்ந்து கொண்டே இருக்கும்!



