பணத்தேவையை பூர்த்தி செய்யக் கூடிய எளிமையான பரிகாரம்!!

- Advertisement -

பணம் இந்த காலத்தில் மிகவும் முக்கியமான ஒன்று. பணம் இல்லையேல் நிச்சயமாக எதுவுமே செய்ய முடியாது அந்த அளவிற்கு பணத்தினுடைய மதிப்பு இந்த உலகில் அதிகரித்துவிட்டது என்று சொல்லலாம். பல நேரத்தில் நமக்கு மிகவும் முக்கியமாக தேவைப்படக்கூடிய பணத்தை மிகவும் பத்திரமாக சேமித்து வைக்க வேண்டும். அதற்கு மகாலட்சுமி தேவியார் பரிகாரம் தான் செய்யப் போகிறோம்.

-விளம்பரம்-

மகாலட்சுமி அருள்

மகாலட்சுமி தேவியாருடைய அருள் ஒருவருக்கு இருக்கும் பட்சத்தில் அவர் வீட்டில் பணம் செல்வ செழிப்பு இருக்கும். மகாலட்சுமி திவியார் உடைய அருள் இருந்தால் எதை வேண்டுமானாலும் சாதிக்க முடியும். அத்தகைய தாந்திரீக பரிகாரத்தை பற்றி தான் இந்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.

- Advertisement -

பரிகாரத்திற்கு தேவையான பொருட்கள்

இந்த பரிகாரத்திற்கு மிகவும் குறைவான பொருட்கள் மட்டுமே போதுமானது நம்முடைய நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்ற மகாலட்சுமி தாயார் முழு மனதோடு இருப்பார். அவர் மனதை நாம் குளிர வைக்க வேண்டும் அதற்கு நமக்கு தேவைப்படுவது ஒரு புதிய ரூபாய் நோட்டும் சிவப்பு நிற நூலும் தான். இவை இருந்தாலே போதும் இந்த பரிகாரத்தை சூப்பராக செய்து முடிக்கலாம்.

பரிகாரம் செய்ய வேண்டிய முறை

இதற்கு விடியற்காலியில் பிரம்ம முகூர்த்த நேரத்தில் எழுந்து பூஜை அறையில் உள்ள மகாலட்சுமி தேவியாருக்கு நெய் தீபம் ஏற்றி வைக்க வேண்டும் நெய்வேதியமாக ஏதாவது ஒரு பொருளை வைத்து வழிபட வேண்டும். ஒரு புதிய ரூபாய் நோட்டு எதுவாக இருந்தாலும் அதனை கைகளில் வைத்து மகாலட்சுமி தாயாரை பார்த்து பணத்தேவை என்னவெல்லாம் இருக்கிறதோ அது எல்லாம் கூறி மனதார வேண்ட வேண்டும். நோட்டை கசக்காமல் அதற்கு மேல் சிவப்பு நிற நூலை வைத்து ஏழு முறை சுற்றி விட்டு அந்த பணத்தை மகாலட்சுமி தேவியார் புகைப்படத்திற்கு பின்னால் வைக்க வேண்டும்.

பரிகாரம் செய்ய வேண்டிய நாட்கள்

நம் முன்னோர்கள் வேண்டுதல் நிறைவேற மஞ்சள் நிற துணியில் நாணயங்களை காணிக்கையாக முடிந்து வைப்பார்கள் அதற்கு இணையான பலன் தான் இதற்கும் நமக்கு கிடைக்கும். தொடர்ந்து 48 நாட்களுக்கு இந்த பரிகாரத்தை செய்து வர நிச்சயமாக நம்முடைய வலதேவிகள் அனைத்தும் பூர்த்தி அடையும் 48 நாட்கள் கழித்து சிவப்பு நிற நூலை யாருடைய கால் தடமும் படாத இடத்தில் போட வேண்டும். அந்த நோட்டை மகாலட்சுமி தாயாரிடமே எப்பொழுதும் வைக்க வேண்டும்.

-விளம்பரம்-

இதனையும் படியுங்கள் : பணம் நகை பெருக நரசிம்மருக்கு செலுத்த வேண்டிய மாலை!