எண் கணிதத்தின் படி ஒருவரின் பிறந்த தேதியின் அடிப்படையில் அவரது குண நலன்கள், பலம், பலவீனம் அமையும். எண் கணிதம் என்பது ஒரு பழங்கால நம்பிக்கையாகும். இதன் அடிப்படையில் ஒவ்வொரு தேதிக்கும் ஒவ்வொரு குணாதிசயங்கள் இருப்பதாக சொல்லப்படுகிறது. அதன்படி சில தேதிகளில் பிறந்தவர்கள், நிதி ரீதியாக அதிர்ஷ்டசாலிகளாக கருதப்படுகிறார்கள். எண் கணிதம் என்பது கூட்டல், கழித்தல், பெருக்கல், வகுத்தல் ஆகிய நான்கையும் கடந்து வாழ்க்கைத் தத்துவத்தை உணர்ந்து கொள்வதற்கும் ஆதாரமாக இருக்கின்றது. 9, 18,27 ஆகிய தேதிகளில் பிறந்திருந்தால், எண் கணிதத்தின்படி நீங்கள் 9 என்ற மூல எண்ணைக் கொண்ட நபர் என்று அழைக்கப்படுவீர்கள். இந்த தேதிகளில் பிறந்தவர்கள் தங்களது வாழ்க்கையில் ஏராளமான செல்வத்தையும், புகழையும் சம்பாதிக்கிறார்கள். எண் 9ஐ கொண்டவர்கள் புத்திசாலிகள் என்று எண் கணிதம் கூறுகிறது. அவர்களின் வாழ்க்கை முறை எப்படி இருக்கும் என்று இந்த ஆன்மீகப் பதிவில் பார்க்கலாம்.
எண் 9
எண் 9 செவ்வாயின் ஆதிக்கம் கொண்ட எண். போர் குணம் உடையவன், விட்டுக் கொடுக்காத குணமுடையவன், புகழுக்காக பாடுபடுபவன் போன்ற முக்கியமான தன்மைகளைக் குறிப்பது எண் 9 ஐ உயிர் எண்ணாக பெற்றவர்களுக்கு கூறலாம். எந்த மாதத்திலும் 9 ஆம் தேதி பிறந்தவர்கள் ஆணாக இருந்தாலும் சரி, பெண்ணாக இருந்தாலும் சரி, அவர்களுக்கு அதிகாரம் உண்டு. சிறு வயதிலிருந்தே தலைமைப் பண்பு கொண்டவர். நல்ல தன்னம்பிக்கையும், வெற்றி பெற வேண்டும் என்ற எண்ணமும் வாழ்வில் வாய்ப்புகளைப் பெற வைக்கும்.
எண் 18
இந்த எண்ணில் பிறந்தவர்களுக்கு புத்திசாலித்தனத்திற்கு குறைவில்லை. தங்கள் குடும்ப உறுப்பினர்களுக்காக பணத்தை செலவிட எவ்வித தயக்கமும் காட்ட மாட்டார்கள். சுருக்கமாக தங்களது வாழ்க்கை ராஜாவை போல் வாழும் குணநலம் கொண்டவராக இருப்பார்கள் என எண் கணிதத்தில் கூறப்படுகிறது. 18ஆம் தேதி பிறந்த இவர்கள் கல்வித் துறையில் முன்னேறி விடுவார்கள். அவர்கள் புத்திசாலித்தனம் மற்றும் சக்தி இரண்டையும் கொண்டுள்ளனர், எனவே அவர்கள் எந்த விஷயத்தையும் சோதித்து தான் முடிவு செய்வார்கள்.
எண் 27
எண் கணிதத்தின்படி, எண் 9 இன் பெருக்கல் உள்ள எண்ணான 27ம் தேதி பிறந்தவர்கள் தங்கள் சொந்த விருப்பப்படி வாழ்க்கையை வாழ விரும்புகிறார்கள். அவர்கள் யாருடைய தலையீட்டையும் விரும்ப மாட்டார்கள். இவர்கள் தொழில் ரீதியாக மிகவும் கடின உழைப்பாளிகள் மற்றும் உண்மையுள்ளவர்கள். இவர்கள் தங்கள் குணங்கள் மற்றும் நல்ல குணங்களால் உயர் பதவிகளை அடைவார்கள்.
இதனையும் படியுங்கள் : மே மாதத்தில் பிறந்தவர்களின் குணங்கள் பற்றிய சில சுவாரசியமான தகவல்கள்