மூட்டு வலிக்கு தீர்வு தரும் பிரண்டை மூலிகை பற்றி தெரியுமா ?

- Advertisement -

மூட்டு வலி மட்டுமல்ல இடுப்பு வலி, கழுத்து வலி என எல்லாவற்றுக்கும் தீர்வு இருக்கிறது!
வயது வித்தியாசம் இல்லாமல் எல்லோரையும் பாடாய்ப்படுத்தி எடுக்கும் சில பிரச்சினைகள் இருக்கின்றன. அதில் முக்கியமானது மூட்டுவலி. இப்போதெல்லாம் சிறியவர், பெரியவர் என்று வித்தியாசம் இல்லாமல் எல்லோருமே மூட்டுவலியால் மிகவும் சிரமப்படுகிறார்கள். மூட்டு வலியில் தொடங்கி இடுப்பு வலி, கழுத்துவலி என அந்தப் பட்டியல் நீள்கிறது. இதுபோன்ற பிரச்சினைகளுக்கு சில எளிய மருத்துவமுறைகள் இருக்கின்றன.

-விளம்பரம்-

பிரண்டை

பிரண்டை கேள்விப்பட்டிருப்பீர்கள் வேலியோரங்களில் வளர்ந்துகிடக்கும். வீட்டுத் தோட்டங்களில் வைத்தால்கூட நன்றாக வளரும். கிடைக்காதபட்சத்தில் கீரை விற்பவர்களிடம் சொல்லி கேட்டு வாங்கிக்கொள்ளுங்கள். பிரண்டையை அரைத்து பற்று போட்டால் மூட்டு வலி மட்டுமல்ல பலவிதமான வலிகள் சரியாகும். வெளிப்பூச்சுக்கு முற்றிய பிரண்டையை எடுத்துக் கொள்ளலாம். பிரண்டை பற்று போட புளியும், உப்பும் மட்டுமே தேவை.
இளம்பிரண்டையை துவையல் செய்ய பயன்படுத்திக்கொள்ளலாம். பிரண்டையை துவையல் செய்து சாப்பிட்டால் வலிகளிலிருந்து உடனடியாக நிவாரணம் கிடைக்கும். பிரண்டையுடன் உளுந்து, காய்ந்த மிளகாய், பூண்டு, புளி, உப்பு சேர்த்து வதக்கி துவையல் செய்ய வேண்டும். இதை வாரத்தில் இரண்டு, மூன்று நாட்கள் செய்தாலே மூட்டு வலி என்று இல்லாமல் எந்தமாதிரியான வலியும் சரியாகிவிடும்.

- Advertisement -

பிரண்டையை கையாளும் முறை

பொதுவாக நமக்குக் கிடைப்பது சதுரப்பிரண்டை. இந்த பிரண்டையின் நான்கு ஓரங்களிலும் உள்ள நாரினை தோல் உரிக்கவேண்டும். மெதுவாக, பொறுமையாக தோல் உரித்து எடுத்துக்கொள்ளுங்கள். பலருக்கு பிரண்டையை எப்படி தோல் உரிக்க வேண்டுமென்றுகூட தெரியவில்லை. அதனால் இதைப் பார்த்து தெரிந்துகொள்ளுங்கள். பிரண்டையை கையால் தொட்டதும் சிலருக்கு நமைச்சல் எடுக்கும். அது தெரியாமல் சிலர் பிரண்டையை கையால் தொட்டதும் கை அரிப்பு எடுக்கிறது என்று சொல்வார்கள். அரிப்பு, நமைச்சல் எடுத்ததும் என்ன செய்ய வேண்டுமென்று தெரியாமல் சிலர் வேறு சில வழிகளைப் பின்பற்றுவார்கள். இதற்கெல்லாம் மிகவும் சாதாரண வழிமுறைகள் இருக்கின்றன. புளி மற்றும் உப்புடன் தண்ணீர்விட்டுப் பிசைந்து கையில் தேய்த்து பிரண்டையை தோல் உரிக்க வேண்டும். முதலில் இதை செய்ய மறந்துவிட்டால் பிரண்டையை தோல் உரித்த பிறகு புளியையும், உப்பையும் கையில் தேய்த்தால் ஒன்றும் செய்யாது. விரலின் நுனிப்பகுதி மற்றும் விரல் இடுக்குகளில் நன்றாகத் தேய்க்க வேண்டும். அப்படியானால்தான் கை அரிப்பு எடுக்காது. நல்லெண்ணெயை கை முழுவதும் தடவி விட்டு பிரண்டையை நார் உரிக்கலாம். இல்லையென்றால் கையில் ஒரு கிளவுஸ் போட்டுக்கொண்டு நார் உரிக்கலாம்.

பிரண்டை பற்று

பிரண்டையை பற்று போடுவதற்கு முன் அதை அரைத்து எடுத்துக்கொள்ள வேண்டியது அவசியம். பிரண்டையுடன் புளி, கல் உப்பு சேர்த்து மிக்சியில் போட்டு நன்கு விழுதாக அரைத்து எடுக்க வேண்டும். அதை வாணலியில் போட்டு நன்றாக சூடாக்க வேண்டும். பச்சை நிறமாக உள்ள பிரண்டை பழுப்பு நிறமாக மாறும்வரை வதக்கி எடுக்க வேண்டும். அதை பொறுக்கும் சூட்டில் வலி உள்ள இடங்களில் பற்று போடலாம். ஐந்து நிமிடத்தில் சூடு ஆறிவிடும். அதை அப்படியே கையால் எடுத்து திரும்பவும் பாத்திரத்தில் போட்டு சூடாக்கி பற்று போட வேண்டும். இப்படி திரும்பத் திரும்ப சூடாக்கி பற்று போட்டு வந்தால் வலி விலகிப்போய்விடும். இதுபோன்று செய்வதால் மூட்டு வலி மட்டுமல்ல… சுளுக்கு, ரத்தக்கட்டு பிரச்சினைகளுக்கும்கூட தீர்வு கிடைக்கும். ரொம்ப சாதாரணமான இந்த சிகிச்சையை எல்லோருமே செய்யலாம். இதைச் செய்தால் நிச்சயம் மூட்டு வலி சரியாகும். பக்கவிளைவில்லாதது மட்டுமல்ல செலவில்லாததும்கூட.

  • எம்.மரிய பெல்சின், மூலிகை ஆராய்ச்சியாளர்
  • (9551486617)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here